Monday 14 January 2019

பொது அறிவு | வினா வங்கி,

1. ரத்தத்தில் சோடியம் அளவைப் பராமரிக்கும் ஹார்மோன் எது?.

2. மின்கடத்து திறன் இல்லாத உலோகம் எது?

3. கடல் தாவரங்களில் இருந்து கிடைக்கும் முக்கிய தாதுப்பொருள் எது?

4. அணுவியல் கடிகாரங்களில் பயன்படுவது எது?

5. அரசியலமைப்பு சட்ட மறு ஆய்வுக்காக உருவாக்கப்பட்ட கமிட்டி எது?

6. குப்பை மேனியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?

7. சிலிகன்-டை-ஆக்சைடு என்பது எதன் அறிவியல் பெயர் ?

8. பால்உற்பத்திக்கு காரணமான ஹார்மோன் எது?

9. கோத்தகிரியை பூர்விகமாக கொண்ட பழங்குடியினத்தவர்கள் யார்?

10. சோழர்கள் கட்டிய கோவில்களின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது எது?

விடைகள்

1. ஆல்டிஸ்டிரோன், 2. பிஸ்மத், 3. அயோடின், 4. சீசியம், 5. வேங்கடாசலய்யா கமிட்டி, 6. அகலிபா, 7. மணல், 8. புரோலாக்டின், 9. கோடர்கள், 10. கோபுர விமானங்கள்.

No comments: