Monday 14 January 2019

குஷாணர்கள்

குஷாணர்கள் யூச்சி என்ற பழங்குடியினத்தை சார்ந்தவர்கள்.

குஷாண வம்சத்தின் முதல் அரசர் முதலாம் கட்பீசஸ்.

கி.பி.78-ல் அரசு ஏற்ற குஷாண அரசரான கனிஷ்கர், சக ஆண்டை தொடங்கினார்.

கனிஷ்கரின் தலைநகர் புருஷபுரம் (பெஷாவர்)

கனிஷ்கர் கைப்பற்றிய சீனப்பகுதிகள் காஷ்கர், யார்க்கண்ட், கோட்டான்.

கனிஷ்கர் 4-வது புத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்.

கனிஷ்கர் பின்பற்றிய புத்தமத பிரிவு மஹாயானம்.

அஷ்வகோஷர் புத்த சரிதம் என்ற நூலை எழுதினார்.

கனிஷ்கர் புத்த மதத்தை பரப்பியதால் அவரை ‘இரண்டாம் அசோகர்’ என்று அழைத்தனர்.

கனிஷ்கர் காலத்தில் இருந்து புகழ்பெற்ற புத்த துறவிகள் வசுமித்திரர், அஷ்வகோஷர், நாகார்ஜூனர்.

கனிஷ்கர் காலத்தில் சரகர், சுஷ்ருதர் என்ற இரு மருத்துவ மேதைகள் வாழ்ந்தனர்.

சுஷ்ருதர், பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

சரகர் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர்.

No comments: