அகத்தியர் தலைச்சங்கத்தின் தலைமைப் புலவர் என்றும், அகத்தியம் அவரெழுதிய நூல் என்றும் கூறுவர். அகத்தியர் என ஒருவர் இருந்ததில்லை என வாதிடுபவர்கள் உண்டு. அகத்தியர் பொதிகை மலைப்பகுதியல் தங்கி தமிழ் வளர்த்தவராக அறியப்படுகிறார். அகத்தியரை, பரிபாடல் ‘பொதியில் முனிவன்’ என்றும் , சிலப்பதிகாரம் ‘மாதவ முனிவன்’ என்றும், மணிமேகலை ‘அமர முனிவன்’ என்றும் குறிப்பிடுகின்றன.
அகத்தியரின் பன்னிரு மாணவர்களான தொல்காப்பியர், அதங்கோட்டாசான், துராலிங்கன், செம்பூட்சேய், வையாபிகன், வாய்ப்பிகன், பனம்பாரன், கழாரம்பன், அவிநயன், பெரிய காக்கை பாடினி, நந்தத்தன், சிகண்டி ஆகிய பன்னிருவர் எழுதிய நூலே ‘பன்னிரு படலம்’ என கூறப்படுகிறது. அகத்தியம் கடல்கோளால் அழிந்ததாக சொல்லப்படுகிறது.


0 Comments
||| www.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||