மரங்கள்: அறிவியல் தகவல்கள்...


* மரத்தின் வயதை கணக்கிடுவதற்கு பெயர் டென்டிரோகிரோனாலஜி.

* இந்தியாவின் தேசிய மரமான ஆலமரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் பெக்லென்சிஸ்.

* அரச மரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் ரிலிஜியோசா.

* வேப்பமரத்தின் அறிவியல் பெயர் அஜாடிரக்டா இண்டிகா.

* தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம்.

* தேக்கு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கர்நாடகம்.

* பூலோக கற்பகத்தரு எனப்படுவது பனைமரம்.

* தென்னை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கேரளம்.

* இந்தியாவிலுள்ள மரங்களிலேயே மிகப்பெரியது ஆலமரம்.

* யூக்கலிப்டஸ் இலைகளை மட்டுமே உண்ணுவது கோலாகரடி.

* பட்டுப்புழு வளர்ப்பிற்கு பயன்படுபவை மல்பரி இலைகள்.

* உலகிலேயே மிகப்பெரிய மரத்தின் பெயர் செக்கோயா.

* பைன் மரத்திலிருந்து எடுக்கப்படுவது டர்பன்டைன் எண்ணெய்.

* சப்போடில்லா மரத்தில் பெறப்படுவது சூயிங்கம்.

*அஸாடிரக்டின் என்ற பூச்சி மருந்து வேப்பமரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

* கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் வில்லோ.

* அசோக மரத்தின் அறிவியல் பெயர் சராகா இண்டிகா.

* மாமரத்தின் அறிவியல் பெயர் மாஞ்சிபெரா இண்டிகா.

* ஆரஞ்சு மரத்தின் அறிவியல் பெயர் சிட்ரஸ் சின்னென்சிஸ்.

* ஆப்பிள் மரத்தின் அறிவியல் பெயர் மாலஸ் புமிலா.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

Comments