Friday 22 December 2017

நடப்பு நிகழ்வுகள் - வினாக்கள் & விடைகள் - 3

51) கும்பகோணத்தில் உள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளின் தற்போதைய நிலை பற்றி ஆராய உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணை அதிகாரி யார் ?
விடை –  ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சோலைமலை
52) ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது குறித்து ஆராய ஏற்படுத்தப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் யார் ?
விடை –  ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்வரன்
53) இந்தியாவின் முதல் மகிழ்ச்சி ரயில் சந்திப்பு நிலையம் [ HAPPINES JUNCTION] எது ?
விடை –  சோன்பூர் [ Sonepur ] பீகார்
54) சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை அமுல் செய்த இந்தியாவின் அண்டை நாடு எது ?
விடை –  ஸ்ரீலங்கா 
55) உலகின் மிகச்சிறந்த சட்டங்கள் பட்டியலில் இந்தியாவின் தகவல் அறியும் உரிமை சட்டம் எந்த இடம் பெற்றுள்ளது ?
விடை –  நான்காவது இடம்
56) சமீபத்தில் தலாய்லாமாவிற்கு கவுரவ குடியுரிமை வழங்கிய நகரம் எது ?
விடை –  மிலன் ( இத்தாலி )
57) சமீபத்தில் உலகின் மிகப்பெரிய டைனோசர் காலடி தடம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ?
விடை –  கோபி பாலைவனம்
58) இந்தியாவின் முதல் வடிவமைப்பு யாத்திரை ( FIRST DESIGN YATRA ) எங்கு துவங்கப்பட்டது ?
விடை –  கோழிக்கோடு
59) பன்றிகளில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்க இந்திய நிறுவனம் கண்டு பிடித்துள்ள தடுப்பு மருந்தின் பெயர் என்ன ?
விடை –  CYSVAX –  CYSTICERCOSSIS VACCINE ( Indian Immunologicals Ltd (IIL) Hyderabad )
60) 2016 சின்ஹன் டொன்கே ஓபன் கோல்ப் போட்டியில் பட்டம் வென்றவர் யார் ?
விடை –  ககன்ஜித் புல்லர்
61) FIFA சார்பில் 17வயதுக்கு உட்படோர்க்கான ஆண்கள் கால்பந்து போட்டி - 2017 எங்கு நடைபெற்றது  ?
விடை –  இந்தியா
62) FIFA சார்பில் 17வயதுக்கு உட்படோர்க்கான பெண்கள் கால்பந்து போட்டி – 2016 எங்கு நடைபெற்றது ?
விடை –  ஜோர்டான்  -- ( சாம்பியன் = வடகொரியா )
63) FIFA சார்பில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி 2018ல் எங்கு நடைபெறவுள்ளது?
விடை –  ரஷ்யா
64) பிரான்சில் நடைபெற்ற ரயில்வே துப்பாக்கி சுடுதல் போட்டியில் பட்டம் வென்ற அணி எது ?
விடை –  இந்திய ரயில்வே
65) HOOGEVEEN செஸ் போட்டியில் பட்டம் வென்றவர் யார் ?
விடை –  அபிஜித் குப்தா
66) பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் பட்டம் வென்றவர் யார் ?
விடை –  பாலகிருஷ்ணன்
67) ஐரோப்பாவின் மனித உரிமைகள் விருதான ஷக்ரோவ் விருது பெற்றவர்கள் யார் ?
விடை –  நாடியா முராட் மற்றும் லமியா ஹாஜி பஷர் [ Nadia Murad & Lamiya Aji Bashar]
68)  MISSION  MADUMEHA எதனோடு தொடர்புடையது?
விடை –  ஆயுர்வேதத்தின் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுப்பது மற்றும் காப்பது.
69) " நம்பிக்கை கடன் " என்ற திட்டத்தை துவக்கிய வங்கி எது ?
விடை –  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
70) இந்தியாவின் மிகப்பெரிய STARTUP INCUBETOR எங்கு துவக்கப்பட்டுள்ளது?
விடை –  ஹுப்பள்ளி ( ஹூப்ளி ) கர்நாடகா
71) இந்திய ராணுவத்தின் புதிய தளம் ரூ.1500 கோடி செலவில் எங்கு அமைக்கப்படவுள்ளது ?
விடை –  Morena மாவட்டம், மத்திய பிரதேசம்.
72) முதன்முறையாக வாக்களித்த புதிய பெண் வாக்களர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்பட்ட பரிசு என்ன? ஆண் வாக்களர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு என்ன? எந்த மாநில தேர்தலில் இவை வழங்கப்பட்டது?
விடை –  பெண்களுக்கு – பிங்க் நிற டெடி பியர் பொம்மை == ஆண்களுக்கு  -- பேனா ==  கோவா மாநில சட்டப்பேரவை தேர்தல்
73) மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு எதுவாக சிறப்பான பயிற்சி மையம் அமைக்க , மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் எங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது?
விடை –  குஜராத்
74) ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கான மானியங்களை மறு சீரமைப்பு செய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார் ?
விடை –  அப்சல் அமானுல்லா
75) டாக்டர் H.R. நாகேந்திரா கமிட்டி எதனோடு தொடர்புடையது?
விடை –  யோகா மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது பற்றி ஆராய.
76) அமிதாப் சௌத்ரி கமிட்டி எதனோடு தொடர்புடையது ?
விடை – தற்போதைய சூழலில்  ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் சந்தையை ஆராய்தல் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாப்பது பற்றி ஆராய்தல். 
77) Computer Society of India & Nihilent Technologies இணைந்து வழங்கிய e Governance Award பெற்ற மாநிலங்கள் எவை ?
விடை –  தெலுங்கானா & ராஜஸ்தான்
78) எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடலில் விபத்து ஏற்படுத்திய இரண்டு சரக்கு கப்பல்களின் பெயர் என்ன?
விடை –  பி.டபிள்யூ. மேப்பிள் ( ஈரான் ) & எம்.டி.டான் காஞ்சிபுரம்
79) National Confederation of Human Rights Organizations (NCHRO) வழங்கும் முகுந்தன் C. மேனன் விருது பெற்றவர் யார் ?
விடை –  டாக்டர்.சுரேஷ் கைர்னார்
80) 20வது தேசிய மின் ஆளுமை மாநாடு எங்கு நடைபெற்றது? அம்மாநாட்டின் கருப்பொருள் என்ன?
விடை –  விசாகப்பட்டினம் ., கருப்பொருள் -   Digitial transformation

No comments: