
வினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.
1. புதைபடிம எரிபொருளில் முதலீடு செய்வதை முற்றிலும் நிறுத்திய உலகின் முதல் நாடு என்ற சாதனை படைத்த நாடு எது?
2. ஐ.நா. சபையின் இந்தியாவுக்கான நல்லெண்ண தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்?
3. 2016-17-ம் ஆண்டுக்கான பொருளாதார சர்வே முடிவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மத்திய அமைச்சர் யார்?
4. எந்த மாநில அரசுகள் இணையதளம் வழியே சிறந்த சேவை அளித்ததற்கான மத்திய அரசு விருதினை பெற்றுள்ளது?
5. இந்திய விளையாட்டு வீரர் லக்ஸ்யா சென், உலகின் நம்பர் 1 என்ற நிலைக்கு உயர்ந்தார். அவர் எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்?
6. இந்தியாவில் ரூபெல்லாவை தடுப்பதற்காக போடப்படும் தடுப்பூசியின் பெயர் என்ன?
7. உலக புற்றுநோய் தினம் எந்த நாளில் கடைப் பிடிக்கப்படுகிறது?
8. சி.பி.ஐ. இயக்குனராக புதிதாக பொறுப்பேற்றிருப்பவர் யார்?
9. சமீபத்தில் 'ஆர்டர் ஆப் பிரிட்டிஷ் எம்பயர்" (சி.பி.இ.) விருது பெற்ற கிரிக்கெட் வீரர் யார்?
10. மத்திய அரசுத் துறை ஒன்றின் தலைவராக இருந்த ஜோகிந்தர் சிங், சமீபத்தில் மரணம் அடைந்தார்? அவர் எந்த துறையின் தலைவராக இருந்தார்?
11. சீனாவில், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக வெளியிடப்பட்ட அப்ளிகேசன் ஒன்று, கடந்த ஆண்டில் 611 சிறுவர்களை மீட்க உதவியது. அந்த அப்ளிகேசனின் பெயர் என்ன?
12. யுனிசெப் தலைமையகம் எங்கு உள்ளது?
13. 2018 சார்க் மாநாடு எந்த நாட்டில் நடைபெறுகிறது?
14. ஒரு நாடு, சமீபத்தில் உலகின் மிகச்சிறிய பேஸ்மேக்கர் கருவியை உருவாக்கி, முதன்முதலாக ஒரு நோயாளிக்கு பொருத்தி சாதனை படைத்தது, அது எந்த நாடு?
15. முதல் ஸ்மார்ட் காவல் நிலையம் எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டு உள்ளது?
விடைகள் :
1. அயர்லாந்து, 2. அசோக் அம்ரித்ராஜ், 3. அருண் ஜெட்லி, 4. ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா, 5. பேட்மிண்டன், 6. எம்.ஆர்., 7. பிப்ரவரி 4, 8. அலோக் வெர்மா, 9. ஆலஸ்டெர் குக், 10. சி.பி.ஐ., 11. அலிபாபா, 12. நியூயார்க், 13. பாகிஸ்தான், 14. அமெரிக்கா, 15. ஆந்திரா
No comments:
Post a Comment