Friday 24 April 2020

தகவல் களஞ்சியம்

நான்காம் உலகத் தமிழ்மாநாடு இலங்கையில் நடந்தது.

செஞ்சிலுவைச் சங்க நாளாக மே 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

சோழர்களின் முதலாம் தலைநகராக இருந்தது உறையூர்.

நைட்ரிக் அமிலம் பட்டால் தங்கத்தில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.

பெண் தொழிலாளர்கள் அதிகமுள்ள நாடு சீனா.

நாவல் பழம் கல்லீரலுக்கு வலிமை தரும்.

மான்களின் கொம்பு கிளைகளைக் கொண்டு அதன் வயதை அறியலாம்.

வேர்க்கடலை பிரேசிலை பூர்வீகமாக கொண்டது.

அமைதிக் கடல் எனப்படுவது பசிபிக்.

உலகின் பழமையான ரெயில் நிலையம் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் ரெயில் நிலையம்.

சரோஜினி நாயுடு இந்தியாவின் கவிக்குயில் எனப்படுகிறார்.

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒழித்தார்.

பூஜ்ஜியத்தின் பயன்பாட்டை உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.

நீலப்புரட்சி என்பது அதிக மீன் உற்பத்தியை குறிக்கும்.

அன்னை தெரசா பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தவர் தெரசா தான்.

செய்தித்தாள், இலக்கியம், இசைத்துறை சாதனைகளுக்காக புலிட்சர் பரிசு வழங்கப்படுகிறது.

உலக சர்க்கரை நோய் தினம் ஜூலை 27.

ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை இடம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் அமைந்துள்ளது.

1 comment:

Arjun said...
This comment has been removed by the author.