Monday, 13 January 2020

பொது அறிவு | வினா வங்கி,

1.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சாதனையாளர்களை ஊக்குவிக்கும் மத்திய அரசுத் திட்டம் எது?

2.ரெயில்வே தொடர்பு உதவி எண்ணாக அறிவிக்கப்பட்டுள்ள எண் எது?

3.உலக செஸ் ராபிட் சாம்பியன்-2019 பட்டம் பெற்ற இந்திய பெண்மணி யார்?

4.அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரானிய ராணுவ தளபதி யார்?

5.ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பதவி எது?

6.இந்தியா உலக பொருளாதாரத்தில் எத்தனையாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது, எந்த நாட்டை முந்தியுள்ளது?

7.குப்தர் கால துருப்பிடிக்காத இரும்புத்தூண் எங்கு உள்ளது?

8.பொன் முடியாரும், அரிசில் கிழாரும் இணைந்து பாடிய நூல் எது?

9.விதவை மறுமணச் சட்டம் யாரால் கொண்டுவரப்பட்டது?

10.கிரிப்ஸ் பரிந்துரையை “வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் வங்கியின் காலம் கடந்த காசோலை” என கூறியவர் யார்?

11.சனியைத் தவிர வேறு எந்த கோளில் வளையங்கள் உள்ளன?

12.மலஞ்கண்ட் தாமிர சுரங்கம் எங்குள்ளது?.

13.பென்கங்கா, வார்தா, சபரி ஆகியவை எந்த ஆற்றின் துணைநதிகளாகும்?

14.சிறிய அரசமைப்புச் சட்டம் என்று வர்ணிக்கப்படும் சட்ட திருத்தம் எது?

15.வெள்ளி கோள் தன் அச்சில் சுழல எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்கிறது?

16.குஜராத், அரியானா, உத்தரபிரதேசம் இவற்றில் கால்வாய் பாசனம் மிக்க மாநிலம் எது?.

17.லோக்சபா, ராஜ்யசபாவுடன் மற்றொன்றும் இணைந்ததுதான் பாராளுமன்றத்தின் அங்கமாகும் அது என்ன?

18.ஆற்றல் மாற்றம் நிகழும்போது வெளிப்படுவது எது?

19.ஒளியின் திசைவேகம் கண்ணாடியில் எவ்வளவு?

20.ஒரு பொருள் சீரான திசைவேகத்தில் செல்லும்போது அதன் வேக வளர்ச்சி என்னவாக இருக்கும்?

21.மண்ணெண்ணைக்குள் வைத்து பாதுகாக்கப்படும் உலோகம் எது?

22.உறுதிமொழிகளும், பிரமாணங்களும் இடம் பெற்றுள்ள சட்ட அட்டவணை எது?

23.வைரத்தின் ஒளிவிலகல் எண் எது?

24.சுவாசித்தலுடன் தொடர்புடைய செல் உள் உறுப்பு எது?

25.பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கை எப்படி அழைக்கப்படுகிறது?

விடைகள்:

1.ஸ்வர்ணஜயந்தி பெல்லோசிப் விருது , 2. 139, 3. கோனேரு ஹம்பி, 4. காசிம் சுலைமானி, 5. முப்படை தலைமைத் தளபதி, பிபின் ராவத் பொறுப்பேற்றிருக்கிறார், 6. 4-வது இடம், ஜெர்மனியை முந்தியது, 7. மெஹருலி, 8. தகடூர் யாத்திரை, 9. டல்ஹவுசி, 10. எம்.கே.காந்தி, 11. யுரேனஸ், 12. மத்திய பிரதேசம், 13. கோதாவரி , 14. அடிப்படை கடமைகள் கொண்ட 42-வது சட்ட திருத்தம்(1976), 15. 243 நாட்கள், 16. உத்தரபிரதேசம், 17. குடியரசுத் தலைவரும் பாராளுமன்றத்தின் அங்கமாவார், அரசியல் சாசனம் 79-வது ஷரத்து இதை வரையறுக்கிறது., 18. வெப்பம், 19. 2x108, 20.பூஜ்ஜியம், 21. சோடியம், 22. 3-வது அட்டவணை, 23. 2.4, 24. மைட்டோகாண்ட்ரியா, 25. எண்டமோபிலி.

No comments: