Tuesday 26 November 2019

சார்பு உயிரிகள்

நீங்கள் சொந்த உழைப்பில் சோறு சாப்பிடுபவராக இருந்தாலும் கூட உயிரியல் அடிப்படையில் நீங்கள் ஒரு மற்றவற்றை சார்ந்து வாழும் பிறசார்பு உயிரி என்றே அழைக்கப்படுவீர்கள். வளிமண்டலத்தில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடையும், மண்ணிலிருந்து நீரையும் உறிஞ்சி ஸ்டார்ச் தயாரிக்கும் தாவரங்களும், ஒளிச்சேர்க்கை, வேதிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்க்கும் பாக்டீரியாக்களும் மட்டுமே உயிரியலில் மற்றவற்றை சாராமல் வாழும் தற்சார்பு உயிரிகளாகும்.

ஒளிச்சேர்க்கை செய்யும் திறன் அற்ற உயிரினங்களான பூஞ்சைகளும், விலங்குகளும் மனிதன் உட்பட பிறசார்பு உயிரிகள் எனப்படுகின்றன. மேலும் பிறசார்பு உயிரிகள் அவை உணவு எடுத்துக் கொள்ளும் முறை மற்றும் உணவை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுண்ணிகள், சாறுண்ணிகள், தாவர உண்ணிகள், விலங்குண்ணிகள், அனைத்துண்ணிகள் என பலவகையாக வகைப்படுத்தப்படுகின்றன. மனிதன் இவற்றில் அனைத்துண்ணி வகையில் அடங்குவான்.

No comments: