Monday 23 September 2019

பொது அறிவு குவியல்,

1. ஒளியின் வேகத்தை மதிப்பிட்டு கூறியவர் யார்?

2. தனிம வரிசை அட்டவணையின் 7-வது தொடரில் இடம் பெறும் தனிமங்கள் எப்படி அழைக்கப்படுகின்றன?

3. அதிக வெப்பத்தை தாங்கும் கண்ணாடி வகை எது?

4. உடல் குரோமோசோம்களின் வேறு பெயர் என்ன?

5. தாவரம், விலங்கு தவிர்த்த மற்ற உயிரின தொகுதிகள் எவை?

6. ஒரு பேரல் என்பது எத்தனை லிட்டருக்குச் சமமானது?

7. படைப்பாற்றல் மற்றும் குறுக்கு சிந்தனையோடு தொடர் புடைய மூளைப்பகுதி எது?

8. அணுவின் உட்கருவை கண்டுபிடித்தவர் யார் ?

9. உயிரி எரிபொருள் தயாரிக்கப் பயன்படும் பாசி இனம் எது?.

10. ஏலக்காயின் அறிவியல் பெயர் என்ன?

11. நுரையீரல் அழற்சி வழக்கு மொழியில் எப்படி அழைக்கப்படுகிறது?

12. நீலப்பச்சை பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப் படுத்தும் செல்கள் எவை?

13. சுறா மீன் இனத்தை சேர்ந்தது அல்ல என்னும் கூற்று சரியா, தவறா?

14. எலும்பையும், எலும்பையும் இணைப்பது எது?

15. மதிப்புகளின் வரிசை இட அடிப்படையிலான சராசரி என்பது என்ன?

விடைகள்

1. போகால்ட், 2. ஆக்டினைடுகள், 3. பைரக்ஸ், 4. ஆட்டோசோம், 5. மொனிரா, புரோடிஸ்டா, பூஞ்சை, வைரஸ்கள், 6. 159 லிட்டர், 7. வலது மூளை, 8. ரூதர்போர்டு, 9. போட்ரியோகாக்கஸ், 10. எலிடேரியா கார்டமோம், 11. நிமோனியா, 12. ஹைட்ரோசிஸ்ட், 13. தவறாகும், சுறா ஒரு மீன் இனமே. 14. லிக்மண்ட், 15. இடைநிலை (median).

No comments: