Monday 1 April 2019

இணையம்

உலகிலுள்ள பல கணிப்பொறிகளை ஒன்றாக இணைப்பது இணையம் (இன்டர்நெட்)

இன்டர்நெட்டின் முன்னோடி ARPANET

ARPANET 1969-ல் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.

arpanet : Advanced research Project Agency Network

INTERNET என்பது international network என்ற சொற்சுருக்கங்களின் இணைப்பாக உருவாக்கப்பட்டதாகும்.

ARPANET உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட மென்பொருள் TELNET

FTP (File Transmission Protocol) என்பது பழைய இணைய மென்பொருள்களில் ஒன்று.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இணைத்தது USENET

பல கணினிகளை இணைக்கும் IP (internet protocol) 1979-ல் உருவாக்கப்பட்டது.

NSFNET என்பது 1986ல் உருவாக்கப்பட்டது.

www என்பது 1991-ல் உருவாக்கப்பட்டது. www என்பது world wide web வையக விரிவு வலை எனப்படுகிறது. இதை உருவாக்கியவர் டிம்பெர்னர்ஸ் லீ.

www. ஜெனீவாவில் உள்ள ஐரோப்பிய உயராற்றல் இயற்பியல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.

நகரும் படங்கள், ஒலி, ஒளி, திரைப்படங்கள் போன்ற பலவிதமான கோப்புகளின் தகவல் பரிமாற்றத்திற்கு ஏற்றதாக அமைந்ததால் www இணையம் வெகுவேகமாக பிரபலமானது.

இன்டர்நெட்டை பயன்படுத்துவோர் நெட்டிசன் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இன்டர்நெட்டை குறிக்கும் மற்றொரு சொல் சைபர் வெளி.

இன்டர்நெட்டில் நமக்குத் தேவையான தகவலைத் தேடிப் பெற உதவுபவை தேடு எந்திரங்கள்,

புகழ்பெற்ற இன்டர்நெட் தேடுபொறிகள் கூகுள், பிங்.

No comments: