Monday 9 March 2020

பொது அறிவு | வினா வங்கி,

1. முதல் சேர மன்னன் யார்?

2. குப்தர்களின் வெள்ளி நாணயத்தின் பெயர் என்ன?

3. பானிபட் போரில் பாபரின் வெற்றிக்கு காரணமாக அமைந்த போர் முறை எது?

4. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?.

5. தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றியவர் யார்?

6. சூரிய குடும்பத்தில் மிக வேகமாக சுழலும் கோள் எது?

7. நிலவில் உள்ள எவரெஸ்டை விட உயர்ந்த மலை எது?

8. கர்ஜிக்கும் நாற்பதுகள், அதிகோப ஐம்பதுகள், அலறும் அறுபதுகள் என்பவை என்ன?

9. தமிழகத்தில் இரும்புத்தாது மிகுதியாக கிடைக்கும் இடங்கள் எவை?

10. ரொட்டி நாடு என்று போற்றப்படுவது எது?

11. உலகின் மிகப்பெரிய ஏரி எது?

12. மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்து கொண்ட இந்திய தலைவர் யார்?

13. சட்ட உறுப்பு 40 எதைப் பற்றியது?

14. வங்காள தேசத்தின் தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?

15. மதிப்பு கூட்டுவரி எந்த நாட்டால் அறிமுகம் செய்யப்பட்டது?

16. பங்கு வர்த்தகத்தில் உடனுக்குடன் பங்குகளை வாங்கி விற்பவர் யார்?

17. அரசாங்கத்தின் குறைந்த கால செக்யூரிட்டி பேப்பரின் வேறு பெயர் என்ன?

18. எந்த அலைகள் பரவ ஊடகம் தேவையில்லை?.

19. நீர்த் திவலைகளின் கோள வடிவத்திற்கு காரணம் என்ன?.

20. பொருள் அலைகளை கண்டுபிடித்தவர் யார்?

21. நம் உடல் செல் திரவத்தில் அதிகமாக உள்ள உலோகம் எது?

22. மயக்க மருந்தாக பயன்படும் அமிலம் எது?

23. ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படும் நுண்ணுயிர்கள் எவை?

24. சரகா இண்டிகா என்பது எதன் அறிவியல் பெயர்?

25. மனிதனைப்போல கைரேகை கொண்ட விலங்கு எது?

விடைகள்

1. பெருஞ்சோற்று உதயலாதன், 2. ரூபிகா, 3. துல்காமா போர் முறை, 4. சரோஜினி நாயுடு, 5. முகமது பின் துக்ளக், 6. வியாழன், 7. லீப்னிட்ஸ், 8. மேல் காற்றின் வகைகள், 9. கஞ்சமலை, தீர்த்த மலை, 10. ஸ்காட்லாந்து, 11. காஸ்பியன் கடல், 12. டாக்டர் அம்பேத்கர், 13. கிராம பஞ்சாயத்து அமைப்பு, 14. ரவீந்திரநாத் தாகூர், 15.பிரான்ஸ், 16. மான் (Stag), 17. உண்டியல் பில், 18. மின்காந்த அலைகள், 19. பரப்பு இழுவிசை, 20. டி.பிராக்லி, 21. பொட்டாசியம், 22. பார்பியூச்சுரிக் அமிலம், 23. பாக்டீரியா, 24. அசோக மரம், 25. உராங்குடான் குரங்கு.

No comments: