Tuesday 17 December 2019

‘விஜய் திவாஸ்’ தினம்

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் இந் தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையிலும், அந் நாட்டு வீரர்கள் 90 ஆயிரம் பேர் இந்தியப் படையிடம் சரணடைந் ததை நினைவுகூரும் வகை யிலும், ஆண்டுதோறும் டிசம்பர் 16-ம் தேதி ‘விஜய் திவாஸ்’ எனப் படும் வெற்றி தினம் கொண் டாடப்படுகிறது.

இந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவைப் போற்றும் வகை யில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், தென்பிராந் திய ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா, ஏர்-கமாண்டர் எம்.எஸ். அவானா, பிரகாஷ் சந்திரா, ரியர் அட்மிரல் கே.ஜே. குமார், லெப்டினன்ட் ஜெனரல் டி நாகேஸ்வர ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments: