Friday 11 October 2019

2018, 2019-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இலக்கியத்திற்கான 2018-ம் ஆண்டு நோபல் பரிசு போலந்து நாட்டின் எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் கும் 2019-ம் ஆண்டு நோபல் பரிசு ஆஸ்திரியா நாட்டின் பீட்டர் ஹேண்ட்கேவுக்கும் வழங்கப்படும் என நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர் களுக்கான இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை ஸ்வீடனில் உள்ள நோபல் பரிசு கமிட்டி கடந்த சில நாட்களாக அறிவித்தது. இந்நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இதில் 2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு போலந்து நாட்டின் நாவலாசிரியர் ஓல்கா டோகார் ஸுக்கும் 2019-ம் ஆண்டு நோபல் பரிசு ஆஸ்திரியா நாட்டின் பீட்டர் ஹேண்ட்கேவுக்கும் வழங்கப்படும் என நோபல் பரிசு கமிட்டி அறிவித் துள்ளது. இருவருக்கும் தலா 90 லட்சம் குரோனர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6 கோடியே 47 லட்சத்து 86 ஆயிரம்) பரிசாக வழங்கப்பட உள்ளது.

1901 முதல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை 116 பேர் பெற்றுள் ளனர். இவர்களில் 15-வது பெண் ஓல்கா டோகார்ஸுக் ஆவார்.

ஸ்வீடன் அகாடமியில் உறுப்பின ராக இருந்த கத்ரீனா புராஸ்டென் சனின் கணவர் ஜீன் கிளவுட் அர்னால்ட் மீது கடந்த ஆண்டு பாலியல் முறைகேடு புகார் எழுந்தது. இதில் அர்னால்டுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கத்ரீனா பதவி விலகினார். மேலும் அகாடமியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் ராஜினாமா செய்தனர்.

இது தொடர்பான பிரச்சினை களால் இலக்கியத்துக்கான 2018-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. எனவே கடந்த ஆண்டுக்கும் சேர்த்து இந்த ஆண்டு 2 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: