Thursday 10 October 2019

வேதியியல் துறையில் 3 பேருக்கு நோபல் பரிசு

மேம்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் பேட் டரியை கண்டுபிடித்ததற்காக விஞ்ஞானிகள் 3 பேர் 2019-ம் ஆண்டுக்கான வேதியியல் துறை நோபல் பரிசுக்காகத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர் களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றது. 1901-ம் ஆண்டு முதல் இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி விஞ்ஞானிகள் ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜான் பி. குட்இனஃப், அகிரா யோஷினோ ஆகியோர் இந்த ஆண்டு வேதி யியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகி உள்ளனர். விஞ்ஞானி அகிரா யோஷினோ ஜப்பானைச் சேர்ந்தவர். ஸ்டான்லி விட்டிங் ஹாம், பிரிட்டனைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தற்போது நியூயார்க்கிலுள்ள பிங்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

அதிக வயதில் நோபல் பரிசு

விஞ்ஞானி ஜான் பி. குட்இனஃப் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவரது வயது 97 ஆகும். இதன்மூலம் அதிக வயதில் நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமையை ஜான் குட்இனஃப் பெற்றுள்ளார்.

மேம்படுத்தப்பட்ட லித்தியம், அயன் பேட்டரி கண்டுபிடிப்பானது அடுத்த தலைமுறை மின்சார வாகனங்கள் வளர்ச்சிக்கு அதிக பங்கு வகிக்கும் என்று தெரிகிறது. மேலும் மூவரும் கண்டுபிடித்துள்ள இந்த மேம்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரி யானது இலகுரக, மீண்டும் சார்ஜ் செய்யக் கூடிய வகையிலான சக்திவாய்ந்த பேட்டரி யாகும். இது தற்போது மொபைல் போன்கள் முதல் மடிக்கணினிகள் மற்றும் மின்சார வாகனங் கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப் படுகின்றது.

மேலும் சூரிய மற்றும் காற்றாலை சக்தி யிலிருந்து கணிசமான அளவு ஆற்றலைச் சேமிக்க முடியும் என்றும் தெரியவந்துள்ளது.மூவரும் கண்டுபிடித்துள்ள மேம்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் சக்திவாய்ந்த பேட்டரி, தற்போது மொபைல் போன்கள்முதல் மடிக்கணினிகள் மற்றும் மின்சார வாகனங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

No comments: