Ad Code

மண்டல் கமிஷன்

மண்டல் கமிஷன் பிற்பட்டோர் நலன் குறித்து ஆராய இந்தியாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது கமிஷன் ஆகும்.

மண்டல் கமிஷனை அமைத்தவர் மொரார்ஜி தேசாய். அந்த கமிஷன் தனது பரிந்துரையை இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது சமர்ப்பித்தது. மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்த முயன்றவர் வி.பி.சிங். இதர பிற்பட்ட வகுப்பினர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பில் 27 சதவீத ஒதுக்கீடு என்ற முக்கிய பரிந்துரைக்கு வட இந்தியாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பாரதீய ஜனதா கட்சி, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது. இடஒதுக்கீடு தொடர்பான இந்திரா ஷானி வழக்கில் உச்சிநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் 1992-ல் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அப்போதைய பிரதமர் வி.பி.நரசிம்மராவ் அமல்படுத்தினார்.


Post a Comment

0 Comments

Ad Code