Monday 17 December 2018

வெள்ளை அணுக்கள்

நம்முடைய ரத்தத்தில் நியூட்ரோபில், பேசோபில், ஈசினோபில், லிம்போசைட், மோனோசைட் என்று 5 வகையான ரத்த வெள்ளை அணுக்கள் உள்ளன.

லிம்போசைட்டின் இருவகைகள் : டி-செல் மற்றும் பி-செல்.

தைமஸில் உற்பத்தியாகும் டி-செல், செல்வழி நோய்த்தடைக் காப்பையும், எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் பி-செல், திரவ வழி நோய்த்தடைக் காப்பையும் வழங்குகின்றன.

டி-செல்கள். லிம்போகைன் என்ற வேதிப்பொருள்கள் மூலமும், பி-செல்கள் ஆண்டிபாடிகள் எனப்படும் இம்யூனோகுளோபிலின் புரதங்கள் மூலமும் செயல்படுகின்றன.

டி-செல்களில் உதவும் செல்கள் எனப்படும் டி4 செல்களும், நச்சு செல் எனும் டி8 செல்களும் உள்ளன. உதவும் செல்கள் பிற டி மற்றும் பி-செல்களைத் தூண்டி செயல்படுகின்றன. எயிட்ஸ் வைரஸ் டி4 செல்களை பாதிக்கிறது. டி-8 செல்கள் புற்றுநோய் செல்களை அழிக்கின்றன.

No comments: