Monday 17 December 2018

உலக அதிசயங்கள்...

கி.மு. 2-ம் நூற்றாண்டுக்குப் பின் வந்த அலெக்சாண்டிரியனின் காலத்தில் பழங்காலத்தின் ஏழு அதிசயங்கள் வரையறுக்கப்பட்டன.
பழங்காலத்தின் ஏழு அதிசயங்களின் பட்டியலை உருவாக்கியவர் சிடோவின் ஆன்டிபட்டரே.
கிரேக்கர்கள் 7 என்ற எண்ணை புனிதமாகவும், ராசியானதாகவும் கருதியதால் உலக அதிசயங்கள் ஏழாக தொகுக்கப்பட்டன.
எகிப்திய பிரமிடுகள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை.
பாபிலோன் தொங்கு தோட்டம் கி.மு. 6-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது.
பாபிலோன் தொங்கு தோட்டத்தை அமைத்த அரசர் இரண்டாம் நெபுகாத் நாஸர்.
ஆர்டிமிஸ் ஆலயமானது, வேட்டை மற்றும் நிலவுக்கான கிரேக்க தெய்வமான ஆர்டிமிசுக்காக கட்டப்பட்டது.
கி.பி.3-ம் நூற்றாண்டில் கோத்துகள் படையெடுத்தபோது ஆர்டிமிஸ் ஆலயம் தகர்க்கப்பட்டது.
ஆர்டிமிஸ் ஆலயத்தின் துண்டுப் படிமங்கள் லண்டன், பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளன.
கலோஸஸ் ஆப் ரோடிஸ் என்பது கிரேக்கக் கடவுளான ஹீலியஸ்க்காக உருவாக்கப்பட்ட 32 அடி உயர வெண்கலச் சிலை.
கிரேக்க நாட்டில் ரோடிஸ் துறைமுகத்தில் கி.மு 305-293 ஆண்டு காலத்தில் ஹீலியஸ் சிலை உருவாக்கப்பட்டது.
தற்கால உலக அதிசயங்கள் எவை என்பதில் கருத்து வேறுபாடு உண்டு.
தற்கால உலக அதிசயங்கள் பட்டியல் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

No comments: