நடப்பு நிகழ்வுகள் 2018

ஜூலை 6 ஆம் நாள் மக்களவையில் வன்கொடுமை மசோதா தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கூறப்படுபவரை உடனடியாக கைது செய்ய முடியும்.
இவ்வாறே  சிறுமியரை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டம் ராஜ்ய சபாவில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

இது ஒரு நிரந்தர சட்டம் ஆகும். இதன்படி சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டாக இருந்த சிறைத்தண்டனை 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.

சர்ச்சைக்குரிய எஃப்ஆர்டிஐ மசோதா மக்களவையில் இருந்து வாபஸ் ஆகஸ்ட் 7, 2018இல் பெறப்பட்டது.  மக்களவையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய  நிதி  தீர்மானம் அத்துடன் வைப்புத் தொகை காப்பீடு மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

ஆகஸ்ட் 7, 2018 இல் மாநிலங்களவையில் தேசிய பிற்ப்படுத்தப்பட்ட ஓர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குவதற்கான 123 வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் தேசிய பிற்ப்படுத்தப்பட்டோர் ஆணைய சட்டம் 1993இல்  கொண்டுவரப்பட்ட சட்டத்தை ரத்து செய்தது.

கஞ்செண்ட்ஷொங்கா உயிர்கோள காப்பக வலைமைப்பில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யுனஸ்கோவினால் சர்வதேச அங்கிகாரம் பெற்ற இந்தியாவின் 11வது உயிர்கோள காப்பகமாக கஞ்செண்ட்ஷொங்கா உயிர்கோளக் காப்பகமாக உருவாகியுள்ளது.

மைத்ரி என்னும் பெயரில் இந்தியா மற்றும் தாய்லாந்து தரைப்படைகளின் கூட்டு இராணுவப்பயிற்சி தாய்லாந்து நாட்டின்  சாசோயாங்கசோ மகாணத்தில் ஆகஸ்ட் 6 முதல் 19, 2018 தினங்களில் நடைபெற்றுவருகிறது.

ஏசியான அமைப்பின் 51 வது வெளியுறவு அமைச்சர்களின் கூடுகை சிங்கப்பூரில் நடைபெற்றது. 

பெப்ஸி கோ நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில்  இருந்து இந்தியாவைச் சேர்ந்த  இந்திரா நூயி 12 ஆண்டுகளாக அவர் பொறுப்பில் இருந்தார். புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ரமோன் லகுவார்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மல்டி ஆப்சன் பேமெண்ட் அகஸப்டனஸ் டிவைஸ் புதிய பணம்  செலுத்துகிறது இயந்திரத்தை ஸ்டேட் பாங் ஆப் இந்தியா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

ராஷ்மி என்ற பெயரில் இந்தியாவின் முதல் மனித வகையின் ரோபவை ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் ஸ்ரீவாஸ்தவா  உருவாகியுள்ளார்.  ரோபுவுக்கு ஆங்கிலம், இந்தி, போஸ்புரி மற்றும் மராத்தி மொழிகளில் பேசும் திறன் கொண்டது.

சிங்கோங்க்-2 ஸ்டாரிக் ஸ்கை-2 என்ற பெயரில்  மீ உயர் அதிர்வெண் கொண்ட போர் விமானத்தை சீனா வெற்றிகரமாக சோதித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இஸ்ரோ மிக அதிக எடையிலான ஜிசாட் -11 தகவல் தொடர்பு செயற்கைக் கோள் 30 நவம்பர் 2018இல் பிரெஞ்சு கயானாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

பெண்கள் ஒற்றையர் போட்டியில் ரஷியாவின் ஸ்வெட்லானா குஷ்னெட்சோவா குரோஷியாவின் டோனா வெகிகை வீழ்த்தி பட்டத்தை வென்றுள்ளார்.

சர்வதேச ஹாக்கி சம்மேளனம்  எஃஐஎச் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்தியா 5 வது இடம் பெற்றுள்ளது.

லண்டனில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018 போட்டியில் நெதர்லாந்து நாடு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகள் பெற்றுள்ளன. இந்திய அணி 8வது இடத்தை பெற்றுள்ளது.

Comments