Ad Code

நடப்பு நிகழ்வுகள் | 5.82 கோடி தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாட்டில் 5.82 கோடி வாக்காளர்கள் இருப்பதாக ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்ட 2019-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டில் 5.86 கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது நான்கு லட்சம் குறைந்து 5.82 கோடி ஆகியிருக்கிறது. இதில் பெண்கள் 2.94 கோடியாகவும் ஆண்கள் 2.88 கோடியாகவும் இருக்கிறார்கள். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5,184 பேர் இருக்கிறார்கள். இந்த ஆண்டு, 1.82 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும் மரணம், இடமாற்றம் காரணமாக 5.78 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 6.07 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் சென்னையின் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் குறைந்தபட்சமாக 1.64 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

Post a Comment

0 Comments

Ad Code