Monday, 27 August 2018

பொது அறிவு | வினா வங்கி,

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

1. தேசிய கீதத்தில் ‘உத்கல்’ என்ற சொல் எந்த மாநிலத்தை குறிக்கும்?

2. இந்திய தலைநகரம் கல்கத்தாவிலிருந்து, டெல்லிக்கு மாற்றப்பட்டபோது வைசிராயாக இருந்தவர் யார்?

3. தொழுநோய்க்கு காரணமான நுண்ணுயிரி எது?.

4. நாசிக் நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

5. தமிழகத்தில் தஞ்சை கோவிலுடன், பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு கோவில் எது?

6. வட்டார மொழி பத்திரிகை சட்டத்தை கொண்டு வந்தவர் யார்?.

7. 1000 வாட்ஸ் பல்பு 2 மணி நேரத்தில் எத்தனை யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும்?

8. பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வலியுறுத்திய கமிட்டி எது?

9. இந்தியாவில் மின்னஞ்சல் வசதி அறிமுகமான ஆண்டு எது?

10. மரபு பண்பு கடத்திகளாக செயல்படுபவை எவை?

விடைகள்

1. ஒரிசா, 2. ஹார்டிஞ், 3. மைக்கோ பாக்டீரியம் லெப்ரே, 4. கோதாவரி, 5. கங்கை கொண்ட சோழபுரம் கோவில், 6. லிட்டன் பிரபு, 7. 2, 8. மண்டல் கமிஷன், 9. 1994, 10. குரோமோ சோம்கள்.

No comments: