Friday 22 December 2017

பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டின் மருத்துவ மாணவி தேர்வு

பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டின் மருத்துவ மாணவி தேர்வு | 'மிஸ் யுனிவர்ஸ்' ஆக தேர்வான ஐரிஸ் மிட்டனருக்கு, கடந்த ஆண்டு பட்டம் வென்ற பிலிப்பைன்ஸ் அழகி பியா வர்ட்ஸ்பாச் கிரீடம் அணிவித்த காட்சி. | பிலிப்பைன்சில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவ மாணவி சிறந்த அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 'மிஸ் யுனிவர்ஸ்' என்று அழைக்கப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஆசிய அரேனா வணிக வளாகத்தில் நேற்று நடந்தது. 2016-ம் ஆண்டுக்கான இந்த போட்டியில் 86 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். சிறந்த அழகியை தேர்வு செய்வதற்கான இறுதிச் சுற்றுக்கு கென்யா, இந்தோனேஷியா, மெக்சிகோ, பெரு, பனாமா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், கனடா, பிரேசில், பிரான்ஸ், ஹைதி, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய 13 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் முன்னேறினர். இந்த ஆண்டு பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுக்க போட்டியின் நடுவர்கள் தவிர, இணையதளம் வழியாக பார்வையாளர்களிடமும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக நடந்த கேள்விச்சுற்றில் பிரான்ஸ் நாட்டின் 24 வயது பல்மருத்துவ மாணவி ஐரிஸ் மிட்டனர் சாதுர்யமாக பதில் அளித்தார். இதனால் அவரே நடுவர்கள் மற்றும் இணைய வாக்காளர்களால் கவரப்பட்டு பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வான பிலிப்பைன்ஸ் அழகி பியா வர்ட்ஸ்பாச் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை அணிவித்தார். ஹைதி நாட்டின் ராகியூல் பெலிசியர் 2-ம் இடமும், கொலம்பியாவை சேர்ந்த ஆண்டிரியா தோவர் 3-வது இடத்தையும் பிடித்தனர். பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவரான இந்திய அழகி ரோஷ்மிதா ஹரிமூர்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறாமல் ஏமாற்றம் அளித்தார். மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்வான ஐரிஸ் மிட்டனர் கூறுகையில், "எனக்கு கிடைத்த அழகிப் பட்டம் சாதாரணமானது அல்ல. அது மிகவும் மதிப்புமிக்கது. இந்த பட்டத்தின் மூலம் பல் மற்றும் வாய் பாதுகாப்பின் அவசியம் குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்" என்றார்.
Tag: France Iris Mitterer, who was selected as 'Miss Universe', was spotted by the Philippines beauty Pia Vardzpach crown last year.

No comments: