Saturday 23 December 2017

பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 7

  1. நீங்கலா - இடைவிடாது
  2. நீடிய - தீராத
  3. நீரவர் - அறிவுடையோர்
  4. நீர் - கடல்
  5. நீர்வார்கண் - நீரொழுகும் கண்கள்
  6. நுகர்வு - இன்பதுன்ப நுகர்ச்சி
  7. நுணங்கிய - நுட்பமாகிய
  8. நுணங்கிய நூல் - நுண்ணறிவு நூல்கள்
  9. நுதல் - நெற்றி
  10. நுதல்விழி - நெற்றிக்கண்
  11. நுந்தை - நும் தந்தை
  12. நூற்கழகங்கள் - நூலகங்கள்
  13. நெகிழ - தளர
  14. நெடிய மொழிதல் - அரசரிடம் சிறப்புப் பெறுதல்
  15. நெத்தி - நெற்றி
  16. நெறி - வழி
  17. நெறியினின்று - அறநெறியில் நின்று.
  18. நேர்ந்தார் - இசைந்தார்
  19. நோக்கி - ஆராய்ந்து
  20. நோநொந்து - துன்பத்துக்கு வருந்தி
  21. நோற்கிற்பவர் - பொறுப்பவர்
  22. நோற்பார் - நோன்பு மேற்கொள்பவர்
  23. நோன்றல் - பொறுத்தல்
  24. பகரா - கொடுத்து
  25. பகர்வது - சொல்வது
  26. பகழி - அம்பு
  27. பசியறாது - பசித்துயர் நீங்காது
  28. படரா - செல்லாத
  29. படிறு - வஞ்சம்
  30. படுத்தடுத்த - பத்து மடங்கு
  31. பணிவிடம் - பாம்பின் நஞ்சு
  32. பணை - மூங்கில்
  33. பண் - இசை
  34. பண்ணவர் - தேவர்
  35. பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரமன்
  36. பதுமை - உருவம்
  37. பந்தயம் - போட்டி
  38. பயக்கும் - கொடுக்கும்
  39. பயக்கும் - தரும்
  40. பராபரம் - இறைவன்
  41. பராவி - புகழ்ந்து
  42. பரிக்கால் - குதிரைக்கால்
  43. பரிந்து - விரும்பி
  44. பரிவாய் - அன்பாய்
  45. பரிவு - இரக்கம்
  46. பருதிபுரி - கதிரவன் வழிபட்ட இடம்
  47. பலபாடு - பல துன்பம்
  48. பலரில் - பலருடைய வீடுகள்
  49. பல்லவம் - தளிர் 
  50. பவம் - பயன் நோக்கிய செயல்
  51. பவித்திரம் - தூய்மையானது
  52. பழியொடு படரா – மறநெறியில் செல்லாத
  53. பறப்பு - பறக்கும் வானூர்தி முதலியன
  54. பனவன் - அந்தணன்
  55. பன்னரிய - சொல்லுதற்கரிய
  56. பாடறிவார் - நெறியுடையார்
  57. பாணி - பொட்டு
  58. பார்குலாம் - உலகம் முழுதும்
  59. பால்பற்றி - ஒருபக்கச் சார்பு
  60. பாற்றுவித்தார் - போக்குவித்தார்
  61. பிணி - நோய்
  62. பிணிநோய் - நீங்கா நோய்
  63. பிருகுடி - புருவம்
  64. பிழைத்துணர்ந்தும் - தவறாக உணர்ந்திருந்தாலும்
  65. பிள்ளைக்குருகு - நாரைக்குஞ்சு
  66. பீற்றல்  குடை - பிய்ந்த குடை
  67. புகலல் ஒண்ணாதே - செல்லாதே
  68. புகல்வது - சொல்வது
  69. புகழ்சால் - புகழைத் தரும்
  70. புக்கு - புகுந்து
  71. புணை - தெப்பம்
  72. புண்ணியனார் - இறைவர்
  73. புந்தி - அறிவு
  74. புயம் - தோள்
  75. புயல் - மேகம்
  76. புரவி - குதிரை
  77. புரை - குற்றம்
  78. புரைதீர் - குற்றம் நீங்கிய 
  79. புலவீர் - புலவர்களே
  80. புலால் - இறைச்சி
  81. புல் - கீழான
  82. புல்லார் - பற்றார்
  83. புவனம் - உலகம்
  84. புவி - உலகம்
  85. புளகிதம் - மகிழ்ச்சி
  86. புள் - அன்னம்
  87. புள் - பறவை
  88. புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்
  89. புறம்பு - வெளியில்
  90. புறம்வேரார் - வெளிப்படுத்தமாட்டார்
  91. புறவு - புறா
  92. புனல் – நீர்
  93. புனைதல் - சுடுதல்
  94. புனைதல் - புகழ்தல்
  95. புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
  96. புன்கண் - துன்பம்
  97. புன்மை - நெறி பிறழ்ந்தசெயல்கள்
  98. பூகம் - கமுகம்
  99. பூங்கோயில் – திருவாரூர்க்கோவிலின் பெயர்
  100. பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்
  101. பூதரம் - மலை
  102. பூதி – திருநீறு
  103. பூழ் - காடை
  104. பெருஞ்சிரம் - பெரியதலை
  105. பெரும்பேறு - வீடுபேறு
  106. பெறினும் - பெற்றாலும்
  107. பேணி - போற்றி
  108. பேதைமை - அறியாமை
  109. பேதைமை – அறியாமையின்பாற்பட்ட தீயசொற்கள்
  110. பேதையார் - அறிவிலார்
  111. பேருந்தகைத்து - பின் வாங்கும் தன்மையது
  112. பேறு - செல்வம்
  113. பையுள் - கவலை. வருத்தம்
  114. பொடி - மகரந்தப் பொடி
Tag : Tamil literature refers to the literature in the Tamil language. Tamil literature has a rich and long literary tradition spanning more than two thousand years

No comments: