Monday 13 January 2020

வரலாற்று டைரி

உலக வரலாற்றில் ஜனவரி 13 முதல் ஜனவரி 19 வரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...

ஜனவரி 13 மிக்கி மவுஸ் உதயம்

உலகப் புகழ் பெற்ற ‘த டைம்ஸ்’ பத்திரிகை லண்டனில் 1785-ல் வெளியாகத் தொடங்கியது. ஜான் வால்ட்டர் இதை வெளியிட்டார்.

1943-ல் ஹிட்லர் முழுமையான போரை அறிவித்தார். இரண்டாம் உலகப்போர் உச்சகட்டத்தை எட்டியது.

2000-ல் மைக்ரோசாப்ட் தலைவர் ‘பில் கேட்ஸ்’ தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகி ஸ்டீவ் பால்மரை நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு உயர்த்தினார்.

1942-ல் ஹென்றி போர்டு, காரின் பாகங்களை பிளாஸ்டிக்கால் உருவாக்கி காப்புரிமம் பெற்றார். இது மற்ற கார்களைவிட 30 சதவீதம் எடை குறைவாக இருந்தது.

தைவானின் முதல் குடியரசு தலைவராக லீ டெக் ஹூய் 1988-ல் பொறுப்பேற்றார்.

1910-ல் முதல் பொது ரேடியோ ஒலிபரப்பு தொடங்கியது.

1930-ல் முதல் மிக்கிமவுஸ் காமிக் கதை வெளியானது.

ஜனவரி 14 முதல் சிசேரியன் சிகிச்சை

1526-ல், மாட்ரிட் ஒப்பந்தம் கையெழுத்தானது. மன்னர் 5-ம் சார்லஸ் மற்றும் முதலாம் பிரான்சிஸ் இடையே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

1641-ல் ஒருங்கிணைந்த கிழக்கிந்திய கம்பெனி, மலாக்காவை கைப்பற்றியது. இதற்கான சண்டையில் 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

1724-ல் ஸ்பெயின் அரசர் 5-ம் பிலிப், தனது பதவியை துறந்தார்.

1761-ல் மூன்றாம் பானிபட் போர் மூண்டது. ஆப்கானி துர்ரானி படைகள், மராத்திய படைகளை வீழ்த்தியது. போரில் 70 ஆயிரம் பேர் மாண்டனர். பின்னர் 40 ஆயிரம் மராத்திய பணய கைதிகள் அழிக்கப்பட்டனர்.

1784-ல், அமெரிக்க புரட்சிப்போர் பாரீஸ் ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்தது.

டாக்டர் ஜெஸ்ஸி பென்னட் அமெரிக்காவில் தனது மனைவிக்கு முதன் முதலாக சிசேரியன் செய்து மகப்பேறு மருத்துவ சிகிச்சையளித்தார். 1794-ஜனவரி 14-ல் இந்த நிகழ்வு நடந்தது.

1943-ல் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், விமானத்தில் வந்து இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலை சந்தித்து ஆலோசித்தார். விமானத்தில் பறந்த முதல் அமெரிக்க அதிபர் என்ற வரலாறு படைத்தார்.

ஜனவரி 15 விக்கிபீடியா உதயம்

1535-ல் எட்டாம் ஹென்றி, இங்கிலாந்தில் தன்னை தேவாலயத்தின் தந்தையாக அறிவித்துக் கொண்டார்.

1559-ல் முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் ராணியாக முடிசூடினார்.

2001-ல் ஜிம்மிவேல்ஸ் மற்றும் லாரில் சாங்கர் ஆகியோர் இணைந்து இணைய தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவை உருவாக்கினார்கள்.

1892-ல் கூடைப்பந்தாட்டத்துக்கான ஜேம்ஸ் நைஸ்மித்தின் முறைப்படுத்தப்பட்ட விதிகள் ‘டிரையாங்கிள் மேகஸின்’ இதழில் வெளியானது.

அமெரிக்க ராணுவ அலுவலகமான பென்டகன் கட்டிடம் 1943-ல் முழுமை பெற்றது. இது உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடம் என்ற சிறப்பையும் பெற்றது.

ஜனவரி 16 ஐ.நா. முதல் கூட்டம்

கி.மு.27-ல், ரோமானிய செனட் சபை, ஜூலியஸ் சீசருக்கு, அகஸ்டஸ் என்ற கவுரவபட்டத்தை வழங்கியது.

1547-ல், நான்காம் இவான் 17 வயதில், மாஸ்கோவின் அரசராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார்.

2006-ல் எல்லன் ஜான்சன் சர்லீப் லைபீரியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

ஜனவரி 17

1773-ல் கேப்டன் ஜேம்ஸ் குக் முதன் முதலாக அண்டார்டிக் வளையத்தை கடந்தார்.

1912-ல் பிரபல ஆய்வாளர் ராபர்ட் ஸ்காட் தென் துருவத்தில் ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

1946-ல், ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலின் முதல் கூட்டம் நடந்தது.

1991-ல் வளைகுடா போரின்போது அமெரிக்கா ‘ஆபரேசன் டெசர்ட் ஸ்டோம்’ தாக்குதலை தொடங்குகிறது.

அமெரிக்கா 1917-ல் டென்மார்க்கிடம் 25 மில்லியன் டாலர் தொகைக்கு விர்ஜின் தீவை வாங்கியது.

1920-ல், அமெரிக்காவில் 18-வது சட்டதிருத்தத்தின்படி முதன் முதலாக மதுவிலக்கு அமலுக்கு வந்தது.

அதிக வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி 1942-ல் பிறந்தார்.

ஜனவரி 18

இங்கிலாந்தில் 1886-ல் ஆக்கி கழகம் உருவாக்கப்பட்டது. இது ஆக்கிப்போட்டி நவீன வடிவம் பெற காரணமானது.

1778-ல் ஜேம்ஸ் குக் ஹவாய் தீவுகளை கண்டுபிடித்தார். அதற்கு அவர் சாண்ட்விச் தீவு என்று பெயரிட்டார்.

1644-ல் வழிப்போக்கர்கள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் முதன்முதலாக வேற்றுக்கிரக பறக்கும் தட்டை பார்த்ததாக பதிவு செய்துள்ளனர்.

ஜனவரி 19 பொது மின்விளக்கு திட்டம்

கி.பி. 379-ல் கிழக்கு ரோமானிய பேரரசின் இணை பேரரசராக தியோடோசியஸ் நியமிக்கப்பட்டார்.

தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்சார விளக்கு, முதன் முதலாக நியூஜெர்சி மாகாணத்தின் ரோஸ்ல்லி என்ற இடத்தில் மின்விளக்கு திட்டமாக 1883-ல் செயல்படுத்தப்பட்டது.

1966-ல், இந்தியாவின் 4-வது பிரதமராக இந்திரா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

2013-ல் செவ்வாயில் கால்சியம் படிவுகள் இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்தது.

நீராவி என்ஜினை கண்டுபிடித்த ஜேம்ஸ்வாட் 1736-ல் பிறந்தார்.

1977-ல், இந்தியாவில் நடந்த கும்பமேளாவில் 1.5 கோடி பேர் திரண்டனர். இது உலகின் மிகப்பெரிய மக்கள் திரளாக புதிய சாதனை படைத்தது.

No comments: