Friday 4 October 2019

போர்ச்சுக்கீசியர்கள்

போர்ச்சுக்கீசியர்கள்

  • புதிய கடல் வழியினைக் கண்டுபிடிக்க போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் நாட்டு அரசர்கள் தம் நாட்டு மாலுமிகளை ஊக்குவித்தனர். 
  • எனவே புதிய கடல்வழிக் கண்டுபிடிப்பில் போர்ச்சுக்கீசியர் முன்னோடியாகத் திகழ்ந்தனர். 
  • போர்ச்சுக்கீசிய இளவரசன் ஹென்றி மாலுமிகளை ஆதரித்தார். அவர்களுக்குப் பயிற்சியளிக்க அறிவியல் முறையில் அமைந்த பயிற்சிப்பள்ளி ஒன்றை நிறுவினார். 
  • கடற்பயணம் மேற்கொள்பவர்களுக்கு வேண்டிய ஆதரவும் அளித்தார்.
  • கடல் வழிப்பயணத்தில் இளவரசர் ஹென்றி மிகுந்த ஆர்வம் காட்டியதாலும் அதற்கு ஆதரவு அளித்ததாலும் அவர் மாலுமி ஹென்றி (Henry, the Navigator) என வரலாற்றில் புனைப் பெயரிட்டு அழைக்கப்படுகிறார். 
பார்த்தலோமியோ டயஸ் :
  • 1487-ஆம் ஆண்டு பார்த்தலோமியோ டயஸ் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரை ஓரமாகப் பயணம் செய்தார். 
  • அவர் ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையை அடைந்தார். 
  • எனினும் கடுமையான புயல் காரணமாக அவரால் தன் கடற்பயணத்தை மேற்கொண்டு தொடர முடியவில்லை. 
  • ஆனால் அவருடைய கடற்பயணம் மாலுமிகளுக்கு மேற் கொண்டு பயணம் செய்ய முடியும் என நம்பிக்கையளித்தது. 
  • எனவே ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையை நன்னம்பிக்கை முனை(Cape of Good Hope) என்று குறிப்பிட்டனர்.
வாஸ்கோடகாமா :
  • வாஸ்கோடகாமா என்ற போர்ச்சுக்கீசிய மாலுமி புதிய கடல்வழிக் கண்டு பிடிப்பின் பொருட்டு பார்த்தலோமியோ டயஸ் மேற்கொண்ட வழியிலேயே தானும் கடற் பயணம் செய்தார். 
  • நன்னம்பிக்கை முனையை அடைந்த அவர் பின் மொசாம்பிக்கைச் சென்றடைந்தார். 
  • அங்கிருந்து தொடர்ந்து ஒரு மாதம் பயணம் செய்தார். அவர் 1498- ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி கோழிக்கூட்டிற்கு அருகில் (Calicut) வந்து இறங்கினார். 
  • அப்பகுதியை ஆட்சிபுரிந்த சாமரின் என்ற அரசர் அவரை அன்புடன் வரவேற்றார். 
  • வாஸ்கோடகாமா அவரிடம் சில சலுகைகளைப் பெற்றார். அச்சலுகைகள் மேற்கு நாடுகள் இந்தியாவுடன் வணிகத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வழிவகுத்தன.
  • வாஸ்கோட காமா இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். 
  • அவர் திரும்பிச் செல்கையில் தன்னுடன் கப்பலில் ஏராளமான விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 
  • அப்பொருட்களால் கவரப்பட்ட மற்ற ஐரோப்பிய நாட்டுச் செல்வ வணிகர்கள் இந்தியாவிற்கு வர விரும்பினர்.
  • வாஸ்கோடகாமா 150-ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக இந்தியா வந்தபோது கண்ணனூர் என்னுமிடத்தில் ஒரு வணிகத்தலத்தை நிறுவினார். 
  • நாளடைவில் கோழிக்கூடு (Calicut), கொச்சின், கண்ண னூர் ஆகிய இடங்கள் போர்ச்சுக் கீசியரின் வர்த்தகத் தலங்களாகின. 
  • தாங்கள் பெற்று வந்த இலாபத்தை, போர்ச்சுக்கீசியர் அறுவடை செய்ததை அரேபியர் விரும்பவில்லை. 
  • அவர்கள் கோழிக்கூட்டை ஆண்ட சாமரின் மன்னருக்கும் போர்ச்சுக்கீசியருக்குமிடையே பகைமையை ஏற்படுத்தினர். 
  • எனவே கொச்சினிலிருந்த போர்ச்சுக்கீசியரை சாமரின் மன்னர் தாக்கினார். ஆனால் அவர் தோல்வியைத் தழுவ நேரிட்டது. 
  • அந்த வெற்றிக்குப் பின் போர்ச்சுக்கீசியர் தங்கள் மேலாண்மையை இந்தியாவில் நிலைநாட்டினர். 

பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா (1505-1509) :
  • 1505-ஆம் ஆண்டு பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா இந்தியா வந்தார். அவர்தான் இந்தியாவில் இருந்த போர்ச்சுக்கீசியப் பகுதிகளின் முதல் ஆளுநர் ஆவார். 
  • அவர் இந்தியாவிலிருந்த போர்ச்சுக்கீசியரின் கடல் வலிமையை மேம்படுத்துவதைத் தமது நோக்கமாகக் கொண்டிருந்தார். 
  • மேலும், இந்து மகாக்கடலில் போர்ச்சுக்கீசியர் ஆதிக்கம் பெற்றவர்களாய் விளங்க வேண்டுமெனவும் அவர் எண்ணினார். 
  • அவர் பின்பற்றிய கொள்கை நீலக்கடல் கொள்கை (Blue Water Policy) என அழைக்கப்பட்டது. 
அல்போன்சோ -டி-அல்புகர்க்கு (1509 - 1515) :
  • இந்தியாவில் போர்ச்சுக்கீசியரின் செல்வாக்கு வளர உண்மையான அடித்தள் மிட்டவர் அல்போன்சோ-டி-அல்புகர்க்கு ஆவார். 
  • அவர் 1510- ஆம் ஆண்டு பீஜப்பூர் மன்னரிடமிருந்து கோவாவைக் கைப் பற்றினார். 
  • அதன் பின் கோவா போர்ச்சுக்கீசியரின் தலைமையிட மாக அமைந்தது. 
  • மேலும் அவர் விசயநகரப் பேரரசுடன் தனது உறவினை வலுப்படுத்திக் கொண்டார். 
  • அவர் 1511-ஆம் ஆண்டு மலாக்காவைக் கைப்பற்றினார். 1515- ஆம் ஆண்டு பாரசீக வளை குடாவில் ஆர்மசு (Port Ormuz) துறைமுகத்தை உருவாக்கினார். 
  • அல்புகர்க்கு ஒரு சிறந்த நிர்வாகியாக இருந்தபோதிலும் அவரின் சமயக் கொள்கையின் காரணமாக இசுலாமியர் அவரை மதிக்கவில்லை. 
  • அவர் இந்துக்களை நல்லவிதமாக நடத்தினார். 
  • அல்புகர்க்கு இந்துக்களின் கல்விக்காகப் பல பள்ளிகளைத் திறந்தார். 
  • அவர் இந்தியர்கள் போர்ச்சுக்கீசியரிடையே திருமண உறவுகளை ஊக்குவித்தார்.
  • அல்புகர்க்கு சதி என்ற உடன்கட்டை ஏறும் பழக்கத் தைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டார். எனவே, அவர் வில்லியம் பென்டிங் பிரபுவின் முன்னோடியாவார்.
  • அல்புகர்கின் நற்பண்புகள் அவருக்கு இந்தியரின் மதிப்பைப் பெற்றுத் தந்தன. 
  • 16-ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் போர்ச்சுக்கீசியர் கோவா, டையூ, டாமன், சால்செட் மேலும் அப்பகுதிகளைச் சுற்றியிருந்த பெரும் நிலப்பகுதிகளைத் தம்வசம் கொண்டு வந்தனர். 
  • எனினும் அவர்களது அதிகாரம் மிகக் குறுகிய காலமே நீடித்தது. 
  • மற்ற ஐரோப்பிய வணிகர்களின் வருகையால் அவர்கள் நிலை மாறியது. 
போர்ச்சுக்கீசியரின் வீழ்ச்சிக்கான காரணங்கள் :
  • போர்ச்சுக்கல் மிகச் சிறிய நாடு. இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டை அந்நாட்டினால் கட்டுப்படுத்த முடியவில்லை. கடல் கடந்து குடியேற்ற நாடுகளை அமைக்கத் தேவையான பணபலமோ படைவலிமையோ அந்நாட்டிடம் இல்லை, 
  • போர்ச்சுக் கீசியரின் ஆட்சி முறையில் ஊழல் ஏற்படத் தொடங்கியது. போர்ச்சுக்கீசிய வணிகர்கள் நேர்மையுடன் செயல்படத் தவறினர், 
  • போர்ச்சுக்கீசியர் பின்பற்றிய சமயக் கொள்கை இசுலாமியரின் விரோதத்தை உருவாக்கியது. போர்ச்சுக்கீசியர் இந்தியர்களைக் கட்டாய மதமாற்றம் செய்தமையை இந்துக்களும் விரும்ப வில்லை , 
  • போர்ச்சுக்கீசியர் இந்திய வணிகர்களுக்கு எதிராக அடிக்கடி கடற்கொள்ளையில் ஈடுபட்டனர், 
  • கோவாவின் செழிப்பு விசயநகரப் பேரரசின் தலைநகரைச் சார்ந்தே இருந்தது. 1565- ஆம் ஆண்டு ஏற்பட்ட விசயநகரப் பேரசின் வீழ்ச்சி போர்ச்சுக்கீசியருக்குப் பெரும் அடியாக அமைந்தது, 
  • அக்பர் மற்றும் அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றோரின் கீழ் முகலாயப் பேரரசு எழுச்சியுற்றமையால் போர்ச்சுக்கீசியரின் அதிகாரம் விரிவடைய முடியாமல் போனது, 
  • இறுதியாக இந்தியா வந்த டச்சு, ஆங்கில வணிகக் குழுக்கள் போர்ச்சுக் கீசியர்களின் வலிமை வாய்ந்த போட்டியாளர்களாக மாறினர். இவை காரணமாக இந்தியாவில் போர்ச்சுக்கீசியரின் அதிகாரம் வீழ்ச்சியுற்றது.

No comments: