Saturday 6 July 2019

சார்க் மாநாடுகள்

தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பு சார்க் என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கதேசத் தலைநகர் டாக்காவில் 2005-ல் நடைபெற்ற 13-வது சார்க் மாநாட்டில், தெற்காசிய நாடுகளைத் தவிர வேறு நாடுகளை, பார்வையாளர்களாக ஏற்க முடிவுசெய்யப்பட்டது. இன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 9 நாடுகள் சார்க் அமைப்பின் பார்வையாளர்களாக உள்ளன. தெற்காசிய நாடுகளிடையேயான ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் 1940-களிலேயே தொடங்கிவிட்டது. ஏப்ரல் 1947-ல், டெல்லியில் நடந்த ஆசிய நாடுகளுக்கிடையேயான உறவு தொடர்பான மாநாடு, 1950-ல் பிலிப்பைன்ஸில் நடந்த பாகியோ மாநாடு, 1954-ல் இலங்கையில் நடந்த கொழும்பு அதிகாரங்கள் மாநாடு ஆகிய மாநாடுகளில் இதற்கான யோசனைகள் விவாதிக்கப்பட்டன. 1970-களின் இறுதியில் ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தின. பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் கூட்டாகச் செயல்படுவது உள்ளிட்ட யோசனைகளை அந்த நாடுகள் முன்வைத்தன. 1981-ல் இலங்கையில் நடைபெற்ற கூட்டத்தில் வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட 6 நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு இதுபற்றி விவாதித்தார்கள். தொடக்கத்தில் இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற இந்தியாவும் பாகிஸ்தானும் தயக்கம் காட்டின. தெற்காசியாவில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து தனக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் என்று இந்தியாவுக்குச் சந்தேகம் இருந்தது. அதேபோல், இந்த நாடுகளில் இந்தியத் தயாரிப்புகளின் வர்த்தகம் பரவுவதன் மூலம், தனக்கு பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் பாகிஸ்தானிடம் இருந்தது. எனினும், தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்கள், நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. 1983-ல் டெல்லியில் இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டில், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த இறுதிமுடிவு எடுக்கப்பட்டது. 1985 டிசம்பர் 8-ல் டாக்காவில் சார்க் அமைப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.சார்க் -SAARC (South Asian Association for Regional Cooperation) என்பது தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பாகும்.இதில் மொத்தம் 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர் . சார்க் ஆனது இந்தியா ,பாகிஸ்தான்,வங்காள தேசம்(Bangladesh),இலங்கை,நேபாளம்,மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் டிசம்பர் 8,1985 ல் உருவாக்கப்பட்டது . சார்க்கின் 8வது உறுப்பினர் நாடாக ஆப்கானிஸ்தான் டிசம்பர் 2007ல் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சார்க்கில் மொத்தம் ஒன்பது நாடுகள் பார்வையாளர்களாக(Observers) உள்ளது. அவை 1.ஆஸ்திரேலியா 2.சீனா 3.ஐரோப்பிய யூனியன் 4.ஈரான் 5.ஜப்பான் 6.மொரீசியஸ் 7.மியான்மர் 8.தென் கொரியா 9.ஐக்கிய நாடுகள்(United States) சார்க் தலைமயிடம் நேபாளத்தில் உள்ள காத்மண்டு . சார்க் அமைப்பின் தற்போதய தலைவர் முகமது ஹாசன் மானிக் மற்றும் செயலாளர் அகமது சலீம்.
சார்க் மாநாடுகள் நடைபெற்ற நாடுகள் பற்றிய விவரங்கள்:



   சார்க் மாநாடுகள்     நடைபெற்ற நாள்/வருடம் நடைபெற்ற இடம் / நாடு

   முதல் மாநாடு         டிசம்பர் 7-8 /1985   தாகா / வங்காள தேசம்

   இரண்டாம் மாநாடு      நவம்பர் 16-17/1986   பெங்களூரு/இந்தியா

   மூன்றாம் மாநாடு      நவம்பர் 2-4/1987     காத்மண்டு/நேபாளம்

   நான்காம் மாநாடு      டிசம்பர் 29-31 /1988 இஸ்லாமாபாத்/பாகிஸ்தான்

   ஐந்தாம் மாநாடு       நவம்பர் 21-23/1990   மேல்(Male)/மாலத்தீவு

   ஆறாம் மாநாடு         டிசம்பர் 21 /1991    கொழும்பு/இலங்கை

   ஏழாம் மாநாடு         ஏப்ரல் 10-11/1993    தாகா / வங்காள தேசம்

   எட்டாம் மாநாடு       மே 2-4/1995          புது டெல்லி /இந்தியா

   ஒன்பதாம் மாநாடு      மே 12-14/1997        மேல்(Male)/மாலத்தீவு

   பத்தாம் மாநாடு       ஜூலை 29-31/1998      கொழும்பு/இலங்கை

   பதினோராம் மாநாடு     ஜனவரி 4-6/2002       காத்மண்டு/நேபாளம்

   பனிரெண்டாம் மாநாடு   ஜனவரி 2-6/2004       இஸ்லாமாபாத்/பாகிஸ்தான்

   பதின்மூன்றாம் மாநாடு நவம்பர் 12-13/2005   தாகா / வங்காள தேசம்

   பதினான்காம் மாநாடு    ஏப்ரல் 3-4/2007     புது டெல்லி /இந்தியா

   பதினைந்தாம் மாநாடு   ஆகஸ்ட் 1-3/2008      கொழும்பு/இலங்கை

   பதினாறாம் மாநாடு      ஏப்ரல் 28-29/2010    மேல்(Male)/மாலத்தீவு

   பதினேழாம் மாநாடு     நவம்பர் 10-11/2011    அட்டு(Addu)/மாலத்தீவு



   சார்க் இளைஞர் விருது (SAARC Youth Award) :



   இவ்விருது தனி நபர்களுக்கு சுற்றுச்சூழல் , பேரழிவு பாதுகாப்பு

   போன்ற கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் தரும் வகையில் சார்க் குழு

   மூலம் வழங்கப்படுகிறது.



   விருது பெற்றவர்கள் :



   1997-சிறந்த சமூக சேவைக்கான விருது – திரு.Md.சுகுர் சலெக்(வங்காள

   தேசம்)[ Md.Sukur Salek]



   1998-புதிய கண்டுபிடிப்புக்கான விருது -டாக்டர்.நஜ்முல் ஹஸ்னைன்

   ஸ் ஷா (பாகிஸ்தான்)[Dr. Najmul Hasnain Shah]



   2001-South Asian Diversityக்காக கிரியேடிவ் புகைப் பட விருது

   பெற்றவர் -மிஷ்ஃபிகுல் ஆலம்(வங்காள தேசம்)[Mr. Mushfiqul Alam]



   2002-சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருது -டாக்டர் மசில் கான்

   (பாகிஸ்தான்) [Dr. Masil Khan]



   2003-மருத்துவ கண்டுபிடிப்பு -திரு ஹசன் ஷேர் (பாகிஸ்தான்) [Mr.

   Hassan Sher]



   2004-காசநோய் மற்றும் / அல்லது எச்.ஐ. வி / எய்ட்ஸ் பற்றிய

   விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறந்த பங்களிப்பு-திரு அஜிஜ்

   பிரசாத் பொவுட்யால்(நேபாளம்)[Ajij Prasad Poudyal]



   2006-தெற்கு ஆசியாவில் சுற்றுலா ஊக்குவிப்புக்கான விருது -திரு

   சையத் ஜாபர் அப்பாஸ் நக்வி(பாகிஸ்தான்)[ Syed Zafar Abbas Naqvi]



   2008-தெற்கு ஆசியாவில் சுற்றுலா பாதுகாப்புக்கான விருது -திருமது

   உஸ்வட்டா லியனகே தீபானி ஜெயந்தா(இலங்கை)[Uswatta Liyanage Deepani

   Jayantha]



   2009-இயற்கை பேரழிவுகளுக்கு பின்னர் மனிதாபிமான பணிகளில் சிறந்த

   பங்களிப்பு – டாக்டர் ரவிகாந்த் சிங் (இந்தியா)[Ravikant Singh]



   2010- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்  பாதுகாப்புக்கான

   சிறந்த பங்களிப்பு -திருமதி அனோகா ப்ரிம்ரோஸ்

   அபெரத்னே(இலங்கை)[Anoka Primrose Abeyrathne]

   

No comments: