Monday 29 April 2019

பொது அறிவு குவியல்,

1. எந்த உலோக பயன்பாடு, சிந்து சமவெளி நாகரிகத்தை, ஆரிய நாகரிகத்துக்கு முந்தையதாக காட்டுகிறது?

2. பானிபட் போரில் பாபர் பின்பற்றிய போர் முறை என்ன?

3. முதல் இந்திய பேரரசை நிறுவியவர் யார்?

4. உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் பிரச்சினைக்குரிய தேர்தல்கள் எவை?

5. மகா வீரர் ஞானம் பெற்ற பின்பு எப்படி அழைக்கப்பட்டார்?

6. ‘நியூ இந்தியா’ பத்திரிகை யாரால் நடத்தப்பட்டது?

7. அரிக்கமேடு, முசிறி, அலெக்சாண்டிரியா இவற்றில் ரோமர்களின் முக்கிய வணிகத் தலமாக விளங்கிய பகுதி எது?

8. சிந்து சமவெளி மக்கள் தங்கள் எடைக் கணக்கீட்டில் எந்த எண் மடங்குகளை பயன்படுத்தினார்கள்?

9. சூரியன் பூமியைப்போல எத்தனை மடங்கு பெரியது?

10. புத்த சரிதம் என்ற நூலை எழுதியவர் யார்?

11. நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இந்திய ஆய்வுக் கருவி எது?

12. எகிப்தில் வீசும் வெப்ப உலர் காற்று எப்படி அழைக்கப்படுகிறது?

13. இந்தியாவில் யுரேனியம் தாது கிடைக்கும் பகுதி எது?

14. தென்கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலத்தின் தலைமை இடம் எது?

15. ஹெர்ரிங் குளம் என புகழப்படுவது எது?

16. உலகின் மிகப்பெரிய ஏரி எது?

17. பருவக் காற்றுக் காடுகள் என அழைக்கப்படும் காடு எது?

18. பஞ்சாயத்து ராஜ் சட்டங்களுக்கு விலக்கு பெறும் மாநிலங்கள் எவை?

19. இந்தியாவில் முதன் முதலாக அணுகுண்டு சோதனை நடந்தபோது பிரதமராக இருந்தவர் யார்?

20. முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்த நாள் என்ன தினமாக சிறப்பிக்கப் படுகிறது?

21. காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கத்தை கைவிட காரணமான ஒப்பந்தம் எது?

22. லாபர் வளைவு எது தொடர்பானது?

23. மனித உரையாடலின் ஒலிச்செறிவு என்ன?

24. 100 வாட் மின்சார விளக்கு ஒன்று ஓர் அலகு மின்சார ஆற்றலை நுகர்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?

25. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் உலோகம் எது?

விடைகள்:

1. தாமிரம், 2. துல்காமா போர் முறை, 3. சந்திரகுப்த மவுரியர், 4. ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல், 5. ஜினா, 6. அன்னிபெசன்ட் அம்மையார், 7. அலெக்சாண்டிரியா, 8.16-ன் மடங்கு, 9. 109, 10. அஷ்வகோஷர், 11. எம்.3, 12. காசின், 13. ஜடுகுடு, 14. பிலாஸ்பூர், 15. அட்லாண்டிக் கடல், 16. காஸ்பியன் கடல், 17. இலையுதிர்க் காடுகள், 18. ஜம்மு காஷ்மீர், மிசோரம், மேகாலயா, 19. இந்திராகாந்தி, 20. விவசாயிகள் தினம், 21. காந்தி- இர்வின் ஒப்பந்தம், 22. வரி விகிதம், 23. 65 டெசிபல், 24. 10 மணி, 25. கோபால்ட்

No comments: