Hot Posts

Ad Code

இந்திய அரசியலமைப்பு: ஓர் அறிமுகம்

அரசியலமைப்பு என்றால் என்ன?

அரசியலமைப்பு என்பது ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையிலான உறவை வரையறுக்கும் ஒரு ஆவணமாகும். இது அரசியல் முறைகளின் அடிப்படைக் கோட்பாடுகளின் தொகுப்பாகும், மேலும் நிர்வாக மற்றும் சட்டமன்ற அமைப்புகள் அரசியலமைப்புக்கு முரணாக செயல்பட முடியாது. மக்களாட்சியின் அடித்தளமாக அரசியலமைப்பு விளங்குகிறது.
 
அரசியலமைப்பின் வகைகள்
 
அரிஸ்டாட்டில் 158 நாடுகளின் அரசியலமைப்பை அறிவியல் பூர்வமாக வகைப்படுத்தியுள்ளார். அவர் "அரசியல் அறிவியலின் தந்தை" மற்றும் "உயிரியலின் தந்தை", "விலங்கியலின் தந்தை" என்றும் அழைக்கப்படுகிறார்.
 
அரசியலமைப்புகள் 6 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
  1. எழுதப்பட்ட அரசியலமைப்பு:
    • முழுமையாக எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட சட்டம்.
    • உலகின் மிகப்பழமையான எழுதப்பட்ட அரசியலமைப்பு: அமெரிக்கா (17/9/1787).
    • உதாரணங்கள்: அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இந்தியா.
  2. எழுதப்படாத அரசியலமைப்பு:
    • பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறது.
    • சட்டம் எழுதப்பட்டிருந்தாலும் முழுமையாக தொகுக்கப்பட்டிருக்காது.
    • உதாரணங்கள்: இங்கிலாந்து, நியூசிலாந்து.
  3. நெகிழும் அரசியலமைப்பு:
    • எளிதில் திருத்தம் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு.
  4. நெகிழாத அரசியலமைப்பு:
    • எளிதில் திருத்தம் மேற்கொள்ள இயலாத அல்லது மிகக்கடினமான விதிமுறைகளைப் பின்பற்றி திருத்தம் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு.
    • உலகின் மிகக்கடினமான விதிமுறைகளைப் பின்பற்றி திருத்தம் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு: அமெரிக்கா.
    • உதாரணங்கள்: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சுவிச்சர்லாந்து.
    • இந்திய அரசியலமைப்பு: நெகிழும் மற்றும் நெகிழாத்தன்மை கொண்டது.
இந்திய அரசியலமைப்புத் திருத்த முறைகள்
 
இந்திய அரசியலமைப்பு மூன்று முறைகளில் திருத்தம் செய்யப்படுகிறது (பாகம் XX, சட்டப்பிரிவு 368):
  1. சாதாரண பெரும்பான்மை: 50% அல்லது பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
  2. சிறப்பு பெரும்பான்மை: 2/3 உறுப்பினர்களின் ஆதரவுடன் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
  3. சிறப்பு பெரும்பான்மை மற்றும் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டமன்றங்களின் ஒப்புதல்: சிறப்பு பெரும்பான்மையுடன் மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலும் தேவை.
  4. ஒற்றையாட்சி அரசியலமைப்பு (UNITORY):
    • ஒரே ஒரு மத்திய அரசு அல்லது மத்திய மற்றும் மாநில அரசுகள் இருந்தாலும், அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் இருக்கும்.
    • உதாரணங்கள்: இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நியூசிலாந்து, ஜப்பான்.
  5. கூட்டாட்சி அரசியலமைப்பு (FEDERAL):
    • "FEDERATION" என்ற ஆங்கிலச் சொல் "FOEDUS" என்ற லத்தீன் சொல்லிலிருந்து உருவானது.
    • மாநிலங்கள் ஒன்றிணைவதால் கூட்டாட்சி தோன்றுகிறது.
    • கூட்டாட்சி அரசியலமைப்பின் சிறப்புகள்:
      • மத்திய அரசும், மாநில அரசும் இருக்க வேண்டும்.
      • எழுதப்பட்ட அரசியலமைப்பு இருக்க வேண்டும்.
      • மத்திய மாநில அரசுகளுக்கிடையே அதிகாரப்பகிர்வு இருக்க வேண்டும்.
      • அரசியலமைப்பு நெகிழாத்தன்மை பெற்றிருக்க வேண்டும்.
      • அரசியலமைப்பு தனிமுதல் ஆதிக்கம் பெற்றிருக்க வேண்டும்.
      • சுதந்திரமான நீதித்துறை இருக்க வேண்டும்.
    • உதாரணங்கள்: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சுவிச்சர்லாந்து.
    • சுவிட்சர்லாந்து கூட்டாட்சி முறையில் குழுஆட்சி முறை பின்பற்றப்படுகிறது.
    • இந்திய அரசியலமைப்பு: கூட்டாட்சி மற்றும் ஒற்றையாட்சி தன்மை கொண்டது (குவாசி கூட்டாட்சி).
    • இந்தியா ஒற்றையாட்சி தன்மையைவிட கூட்டாட்சி தன்மையை அதிகம் பெற்றுள்ளது.
    • இந்தியாவிலுள்ள கூட்டாட்சி கனடாவின் கூட்டாட்சியை மாதிரியாகக் கொண்டது.
இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி
  • ஒழுங்குமுறைச் சட்டம் - REGULATION ACT 1773
  • பிட் இந்தியச் சட்டம் - PIT INDIA ACT 1784
  • பட்டயச் சட்டம் - CHARTER ACT 1793
  • பட்டயச் சட்டம் - 1813
  • பட்டயச் சட்டம் - 1833
  • பட்டயச் சட்டம் - 1853
  • இந்திய அரசுச் சட்டம் - GOVERNMENT OF INDIA ACT 1858
  • இந்திய கவுன்சில் சட்டம் - 1861 (சட்டம் இயற்றும் பணியில் முதன்முதலில் இந்தியர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது)
  • இந்திய கவுன்சில் சட்டம் 1892
  • இந்திய கவுன்சில் சட்டம் (அல்லது) மின்டோ மார்லி சட்டம் = 1909
  • இந்திய அரசுச் சட்டம் / மாண்டெகு - செம்ஸ்போர்டு - 1919
  • இந்திய அரசுச் சட்டம் - 1935
  • மௌண்ட்பேட்டன் திட்டம் (அல்லது) ஜூன் 3 திட்டம் (அல்லது) இந்திய பிரிவினை திட்டம் 1947
இந்திய அரசியல் நிர்ணய சபை
  • அமைச்சரவை தூதுக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று ஜூலை 1946-ல் இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
  • பிரிட்டிஷ் இந்திய பகுதியிலிருந்து 296 பேரும், மன்னராட்சி பகுதிகளிலிருந்து 93 பேரும், மொத்தம் 389 பேர் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • அரசியல் நிர்ணய சபையில் இடம்பெறாத முக்கிய தலைவர்கள்:
    1. மகாத்மா காந்தி
    2. முகமது அலி ஜின்னா
  • 26-07-1947-ல் பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டதால் இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 389-லிருந்து 299 ஆக குறைந்தது.
    • பிரிட்டிஷ் இந்திய பகுதி உறுப்பினர்கள் 296-லிருந்து 229 ஆகவும்
    • மன்னராட்சி பகுதி உறுப்பினர்கள் 93-லிருந்து 70 ஆகவும் குறைந்தது.
  • நவம்பர் 1946-ல் இந்திய அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டது.
  • டிசம்பர் 9, 1946: இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சச்சிதானந்தன் சின்ஹா தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • டிசம்பர் 11, 1946: நடைபெற்ற கூட்டத்தில் இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராக டாக்டர். இராஜேந்திர பிரசாத்தும், துணைத் தலைவராக H.C. முகர்ஜியும், சட்ட ஆலோசகராக B.N. ராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • டிசம்பர் 13, 1946: நடைபெற்ற கூட்டத்தில் ஜவகர்லால் நேரு நோக்கத் தீர்மானத்தை (OBJECTIVE RESOLUTION) முன்மொழிந்தார்.
  • இந்நோக்கத் தீர்மானம் 22-1-1947-ல் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இந்நோக்கத் தீர்மானமே பின்னர் சில திருத்தங்களுக்கு உட்பட்டு இந்திய அரசியலமைப்பின் முகவுரையாக வைக்கப்பட்டுள்ளது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அரசியல் நிர்ணய சபை 23 குழுக்களை ஏற்படுத்தியது (8 முதன்மை குழுக்கள், 15 சிறுகுழுக்கள்).
  • இந்த 23 குழுக்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது வரைவுக்குழு.
வரைவுக்குழு (DRAFTING COMMITTEE)
  • ஆகஸ்ட் 29, 1947: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும் பணிக்காக, இந்திய அரசியலமைப்பின் தந்தை (அல்லது) சிற்பி டாக்டர். பி.ஆர். அம்பேத்கார் தலைமையில் 7 உறுப்பினர்களைக் கொண்ட வரைவுக்குழு ஏற்படுத்தப்பட்டது.
  • வரைவுக் குழுவின் வழிகாட்டி: ஜவகர்லால் நேரு.
  • வரைவுக்குழு உறுப்பினர்கள்:
    • டாக்டர். பி.ஆர். அம்பேத்கார் (தலைவர்)
    • கோபாலசாமி ஐயங்கார்
    • அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
    • KM முன்ஷி
    • சையது முகமது சதஉல்லா
    • N. மாதவராவ் (BL மிட்டா பதவி விலகியதால் நியமிக்கப்பட்டார்)
    • T.T. கிருஷ்னமாச்சாரி (D.P. கெய்தான் இறந்ததால்)
  • டாக்டர். பி.ஆர். அம்பேத்கார் தலைமையிலான வரைவுக்குழு அக்டோபர் 1947-ல் தனது முதல் வரைவைத் தயாரித்து பிப்ரவரி 21, 1948 அன்று வெளியிட்டது.
  • அக்டோபர் 1948-ல் 2-வது வரைவைத் தயாரித்து வெளியிட்டது.
  • வரைவுக்குழுவின் பணிகள்
    • வரைவுக்குழுவின் பரிந்துரைகள் மீது 7,635 திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, அவற்றில் 2,473 திருத்தங்கள் விவாதிக்கப்பட்டன.
    • இந்திய அரசியலமைப்புச் சட்டம் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டது.
    • இந்திய அரசியலமைப்புச் சட்டம் நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே, நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு தினமாக (சட்ட தினம்) கொண்டாடப்படுகிறது.
    • இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. ஜனவரி 26 அன்று குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
    • இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டபோது:
      • 395 சட்டப்பிரிவுகள்
      • 8 அட்டவணைகள்
      • 22 பகுதிகள்
    • தற்போது:
      • 470 சட்டப்பிரிவுகள்
      • 12 அட்டவணைகள்
      • 25 பகுதிகள்
    • அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, 299 உறுப்பினர்களில் 284 பேர் கையெழுத்திட்டனர்.
    • இந்திய அரசியலமைப்பின் அசல் கையெழுத்துப் பிரதிகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில், சிறப்பு ஹீலியம் நிரப்பப்பட்ட பெட்டிகளில் இந்திய நாடாளுமன்ற அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
    இந்திய அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள்
    • உலகின் மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பு.
    • பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட அம்சங்கள்.
    • நெகிழும் மற்றும் நெகிழாத தன்மை கொண்டது.
    • கூட்டாட்சி அமைப்புடன் கூடிய ஒற்றையாட்சி முறை.
    • மக்களாட்சி குடியரசு.
    • மக்களாட்சி அரசாங்கத்தின் பாராளுமன்ற வடிவம்.
    • சுதந்திரமான மற்றும் ஒருங்கிணைந்த நீதித்துறை.
    • மதச்சார்பின்மை.
    • உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமை.
    • ஒற்றைக் குடியுரிமை.
    • அடிப்படை உரிமைகள், கடமைகள் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகள்.
இந்திய அரசியலமைப்புஇந்திய அரசியலமைப்பு

Post a Comment

0 Comments

Ad Code