Friday 20 September 2019

தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பெங்களூருவில் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் பறந்தார். இதன்மூலம் தேஜஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் (ஹெச்ஏஎல்) ஆகியவை மத்திய பாதுகாப்புத் துறையில் அங்கம் வகிக்கும் பிற நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டிலேயே 40 தேஜஸ் இலகு ரக போர் விமானங்களை தயாரித் தன. இதன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ரூ.50 கோடிக்கு மேலும் 80 தேஜஸ் விமானங்களை தயாரிப்பது குறித்து ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் பாதுகாப்புத் துறை மீண்டும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ம‌ணிக்கு 2005 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் உடைய இந்த விமானம் மிக்-21 ரக போர் விமா னத்துக்கு மாற்றாக தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராணுவ ஆராய்ச்சி மற் றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதை தொடங்கி வைத்த மத்திய அமைச் சர் ராஜ்நாத் சிங், ராணுவ ஆராய்ச்சியாளர் களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் ஹெச்ஏஎல் விமான நிலையத்துக்கு சென்ற அவர், விமானிகள் அணியும் உடை அணிந்து,ஏர் மார்ஷல் திவாரியுடன் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் பறந்தார். இதன் மூலம் தேஜஸ் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

இது தொடர்பாக ராஜ்நாத் சிங் கூறும் போது, ‘‘இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது. சில நிமிட பயணம் என் றாலும் என்றுமே மறக்க முடியாத உணர்வை தந்துள்ளது. தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் பயணிப்பது கடின மாக இருக்கவில்லை. மிக மென்மையான பயணமாக இருந்தது. இந்த தருணத்தில் இதற்காக உழைத்த டிஆர்டிஓ, ஹெச்ஏஎல் உள்ளிட்ட அமைப்புகளின் ஆராய்ச்சி யாளர்களுக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

No comments: