Saturday 6 July 2019

CURRENT AFFAIRS IN TAMIL | கடந்து வந்த பாதை - 2019 ஜூன் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை

CURRENT AFFAIRS IN TAMIL | கடந்து வந்த பாதை - 2019 ஜூன் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை | போட்டித் தேர்வுக்கு பயன்படும் வகையில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. 2019 ஜூன் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...


  • நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடை மசோதா புதிதாக தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. (ஜூன் 21) 
  • ஊழலில் ஈடுபடும் ஊழியர்களையும், திறமையற்ற ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்காக ஊழியர்களின் பணிப்பதிவேடு களை ஆய்வு செய்து வருமாறு அனைத்துத் துறைகளையும் கேட்டுக்கொண்டுள்ளது. (ஜூன் 21) 
  • நடப்பு 2019-2020 சந்தைப் பருவத்தில் (ஏப்ரல்- மார்ச்) இது வரை மத்திய, மாநில அரசு முகமைகள் 3.41 கோடி டன் கோது மையை கொள்முதல் செய்துள்ளன. (ஜூன் 21) 
  • உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சவுதம்டனில் சிறிய அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கடைசி வரை போராடி வெற்றி பெற்றது. இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி ‘ஹாட்ரிக்' சாதனை படைத் தார். (ஜூன் 22) 
  • இலங்கையில் அவசர நிலையை மேலும் ஒரு மாதம் நீட்டித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். (ஜூன் 22) 
  • இந்திய பெண்கள் ஆக்கி அணி சாம்பியன் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடந்த பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிச்சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆசிய சாம்பியன் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனது. தொடரின் சிறந்த வீராங்கனையாக இந்திய கேப்டன் ராணி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தகுதிப்போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது. (ஜூன் 23) 
  • ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் : ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதலை நடத்தி அந்நாட்டின் ஆயுதக் கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்களை செயலிழக்கச் செய்தது. (ஜூன் 23) 
  • பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம் : காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஆவணங்கள், வரைபடங்களை அனுப்பி கர்நாடகம் ஒப்புதல் கேட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். (ஜூன் 24) 
  • ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா ராஜினாமா : ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா பதவி விலகினார். பதவிக்காலம் முடிய 6 மாதங்கள் இருக்கும் நிலையில் அவர் இந்த முடிவை எடுத்தார். (ஜூன் 24) 
  • இந்தியர்கள் பதுக்கிய சொத்துகளின் மதிப்பு ரூ. 34 லட்சம் கோடி வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய கணக்கில் காட்டாத சொத்துகளின் மதிப்பு ரூ. 34 லட்சம் கோடி என்று ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது. (ஜூன் 24) 
  • நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி குறைந்தது | மே மாதத்தில், டாலர் மதிப்பு அடிப்படையில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 7.38 சதவீதம் குறைந்து 341 கோடி டாலராக இருந்தது. (ஜூன் 24) 
  • தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு: தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு 40.43 டி.எம்.சி. காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. (ஜூன் 25) 
  • அரைஇறுதிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா உலகக் கோப்பை கிரிக்கெட்டில் லண்டன் லார்ட்சில் நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா, முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. (ஜூன் 25) 
  • மோடியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி சந்திப்பு:டெல்லியில் பிரதமர் மோடியை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ சந்தித்துப் பேசினார். இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். (ஜூன் 26)
  • பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு: நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, மே மாதத்தில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் 7.85 சதவீதம் அதிகரித்தது. (ஜூன் 26) 
  • இந்தியாவுக்கு ஆசிய, பசிபிக் நாடுகள் ஆதரவு:ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் இந்தியாவுக்கு ஆசிய- பசிபிக் குழுமத்தில் சீனா, பாகிஸ்தான் உள்பட 55 நாடுகளும் ஆத ரவு தெரிவித்தன. (ஜூன் 26) 
  • ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு:‘ஜி-20' உச்சி மாநாட்டுக்காக ஒசாகா சென்றடைந்த பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை சந்தித் துப் பேசினார். இரு தலைவர்களும் மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் இயக்குவதற்கு அதிவேக ரெயில் பாதை அமைப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி னர். (ஜூன் 27) 
  • இந்திய அணி 5-வது வெற்றி : உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மான்செஸ்டரில் நடந்த லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்திய இந்திய அணி 5-வது வெற்றியைப் பெற்றது. (ஜூன் 27)

No comments: