Friday, 23 February 2018

இருட்டில் ஒளிரும் உயிரினங்கள்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 20 February 2018

உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி


1. 'சர்வதேசத் தாய்மொழி நாளை' ஐ.நா. சபையின் துணை அமைப்பான யுனெஸ்கோ எந்த நாளில் கொண்டாடுகிறது?
2. உலகில் அதிக ஆட்சி மொழிகளைக் கொண்ட நாடு இந்தியா என்று தவறாக நினைத்திருப்போம். இல்லை, இந்தியாவில் இருப்பவை 2 ஆட்சி மொழிகள் 22 அலுவல் மொழிகள். உலகில் அதிக அளவில், 16 ஆட்சி மொழிகளைக் கொண்டது ஒரு ஆப்பிரிக்க நாடு. 2013-ம் ஆண்டு மே மாதம் அந்த அங்கீகரத்தை வழங்கிய அந்த நாட்டின் பெயர் என்ன?
3. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி ஆங்கிலம் அல்ல, சீனம். 110 கோடிப் பேர் சீன மாண்டரின் மொழியைப் பேசுகிறார்கள். தாய்மொழியைக் கணக்கில் எடுத்தால் இரண்டாவது இடத்திலும் ஆங்கிலம் இல்லை. ஸ்பானிய மொழியே 40 கோடிப் பேரால் பேசப்படுகிறது. அதற்குப் பிறகே ஆங்கிலம் வருகிறது. சரி, அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழி எது?
4. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளை உறுப்பினராகக் கொண்டது ஐ.நா. சபை. அந்த சபையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் என்னென்ன?
5. இத்தாலியத் தலைநகர் ரோமுக்குள் உள்ள தன்னாட்சிப் பிரதேசம் வாத்திகன் நகரம். உலகின் மிகச் சிறிய சுதந்திர நாடாகக் கருதப்படும் இந்த நகரத்தின் ஏ.டி.எம்.களில் ஒரு சிறப்பு வசதி உண்டு. அது என்ன?
6. உலகில் 7,105 மொழிகள் பேசப்படுகின்றன. உலக மொழிகளில் பாதிக்கும் குறைவான மொழிகளுக்குத்தான் எழுத்து வடிவம் இருக்கிறது. 1950-க்குப் பிறகு உலகில் 360 மொழிகள் அழிந்திருக்கின்றன. சராசரியாக எந்தக் கால இடைவெளியில் ஒரு மொழி தற்போது அழிவதாகக் கணிக்கப்பட்டுள்ளது?
7. உலகில் பேசப்படும் மொழிகளில் கிட்டத்தட்ட பாதி மொழிகள் (3,200) இந்தப் பகுதியில் பேசப்படுகின்றன. நில நடுக்கோட்டுக்குப் பக்கத்தில் இந்த நிலப்பரப்பு அமைந்திருப்பதும், பன்மயமான மக்கள் குழுக்கள் இங்கு வாழ்வதுமே இதற்குக் காரணம். உலகில் அதிக மொழிகள் பேசப்படும் இந்தப் பிராந்தியத்தின் பெயர் என்ன?
8. சிங்கப்பூர், இலங்கையில் தமிழ் ஓர் ஆட்சி மொழி. மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், கனடா ஆகிய நான்கு நாடுகளில் சிறுபான்மை மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர இரண்டு ஆப்பிரிக்க நாடுகளில் தமிழ் பண்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகள் எவை?
9. ஆல்பா, ஒமேகா என்ற சொற்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இவை இரண்டையும் முதல், கடைசி எழுத்துகளாகக் கொண்ட மொழி எது?
10. உலகில் மொழிப் பன்மை மிகுந்த நாடு இது. இங்கே 850 மொழிகள் பேசப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, உலகில் பேசப்படும் மொழிகளில் 12 சதவீதம். தொடக்கக் கல்வி, ஆரம்பக் கல்வி மட்டும் 350-400 மொழிகளில் கற்றுத் தரப்படும் இந்த நாட்டின் பெயர் என்ன?

விடைகள்:

1. பிப்ரவரி 21
2. ஸிம்பாப்வே
3. மாண்டரின் - சீனம்
4. ஆங்கிலம், அரபி,மாண்டரின், ஃபிரெஞ்சு,ரஷ்யன், ஸ்பானியம்
5. தற்போது பேசப்படாத செவ்வியல் மொழியான லத்தீனில் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
6. சராசரியாக இரண்டு வாரங்கள்
7. ஆசிய பசிஃபிக் பிராந்தியம்
8.செஷெல்ஸ் தீவு,ரியூனியன் தீவு.
9. கிரேக்கம்
10. பப்புவா நியூ கினி.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 18 February 2018

ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு; பயிற்சியே வெற்றியின் ரகசியம்



ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு; பயிற்சியே வெற்றியின் ரகசியம் முனைவர் செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற அரசு உயர் பணிகளுக்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 19-ந்தேதி (நாளை) டெல்லியில் தொடங்குகிறது. ஏப்ரல் கடைசி வரை தொடரும் இந்த தேர்வில் 2 ஆயிரத்து 568 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். இந்த தேர்வுக்கு பின்னர் சுமார் 900 பேர் இறுதிப்பட்டியலில் இடம்பெறுவார்கள். இதில் சுமார் 150 பேர் ஐ.ஏ.எஸ். பணிக்கும், 120 பேர் ஐ.பி.எஸ். பணிக்கும், 30 பேர் ஐ.எப்.எஸ். பணிக்கும் (அயல்நாட்டு பணி) தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் வருவாய்த்துறை, கலால்துறை, ரெயில்வே போன்ற 22 துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள். நேர்முகத்தேர்வுக்கு 275 மதிப்பெண்கள். இது முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் கூடுதல் செய்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது. எனவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட விரும்பும் போட்டியாளர்கள் இந்த நேர்முகத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நேர்முகத்தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டால் போட்டியாளர்கள் மீண்டும் தொடக்க கட்ட தேர்வான முதல் நிலைத்தேர்வு எழுதி பழையபடி தொடங்க வேண்டும். இதற்கு மொத்தம் ஒரு ஆண்டு காலம் தேவைப்படும். ஆக, ஒருவித பதற்றத்தில் போட்டியாளர்கள் இந்த தேர்வை அணுகுவது இயற்கையே. நேர்முகத் தேர்வு என்பது ஒரு தேர்வுதான். ஆனால், இது வாய்மொழியான தேர்வு என்பதோடு ஒருவரின் ஆளுமையை சோதிக்கும் தேர்வும் கூட. ஐந்து பேர் அடங்கிய குழு நேர்முகத்தேர்வை நடத்தும். போட்டியாளர்களிடம் கேள்விகளை கேட்டு, அதற்கான பதில்களைப் பெறுவார்கள். பதில் சொல்லப்படும் விதம், அதன் பொருள், கருத்தின் ஆழம், உடல்மொழி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு போட்டியாளர் அரசின் உயர் பதவிகளில் பணியாற்ற தகுதியுள்ளவர்தானா? என்பதை கண்டறிவார்கள். போட்டியாளர்களிடம் பொதுவான விஷயங்கள் பற்றிய கேள்விகளை கேட்டு பதில்களை வரவழைப்பார்கள். அதுபோல கல்லூரியில் படித்த பாடங்களில் இருந்தும், முக்கிய தேர்வு எழுதிய விருப்பப்பாடத்தில் இருந்தும், பொழுதுபோக்குகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஆனால், இது படித்த பாடத்தில் உள்ள அறிவை சோதிக்கும் ஒரு தேர்வு அல்ல. அது எழுத்து வடிவிலான முதன்மை தேர்வின் போது சோதித்தாகிவிடும். மாறாக, இதை ஆளுமைக்கான தேர்வு எனலாம். இங்கும் மனதளவில் விழிப்புணர்வு, புரிந்துகொள்ளும் திறன், சிந்தனை திறன், முடிவு எடுப்பதில் வல்லமை, படித்த பாடத்தில் ஆழம், மற்றவர்களோடு ஒத்துப்போதல், தலைமைப்பண்புகள், அறிவார்ந்த நேர்மை, அறநெறி நேர்மை ஆகியவை சோதிக்கப்படும். இவை அனைத்தும் ஒரு மனிதனின் குணாதிசயங்கள். அவற்றை சோதிக்கும் ஒரு தேர்வுதான் ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வு. நீங்கள் ஏன் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புகிறீர்கள்? என்பது வழக்கமான ஒரு கேள்வி. இதற்கு பலர் 'எனது குழந்தை கால கனவு', 'எனது பெற்றோரின் கனவு', 'சேவை செய்ய விரும்புகிறேன்' என்றெல்லாம் பதில் கூறுகிறார்கள். இந்த பதில் சிறந்த பதில் என்று கூறமுடியாது. 'பல வேலைகள் எனக்கு கிடைக்க வாய்ப்புகள் இருந்தாலும், ஐ.ஏ.எஸ். பணி சவாலான பணியாக இருப்பதாலும், மனநிறைவு தரும் பணியாக இருப்பதாலும், அரசு பணியாக இருப்பதாலும், இது எனக்கு பிடித்திருக்கிறது' என்று பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும். இப்படி ஒரு பதிலை அளிக்க போட்டியாளர்கள் முன்கூட்டியே தங்களை தயார் செய்திருக்க வேண்டும். ஒரு சாதாரணமான கேள்விக்கு கூட பதிலை முன்கூட்டியே தயார் செய்யவில்லை என்றால் சரியான பதிலை அளிக்க முடியாமல் போய்விடும். எடுத்துக்காட்டாக, 'உங்களை அறிமுகப்படுத்துங்கள்' என்று கேட்டால், சிலர் பெயரைக்கூட சொல்ல மறந்துவிடுவார்கள். ஏதோ ஒரு கிராமத்தின் பெயரை சொல்லி அது எங்கு இருக்கிறது என்று கூட சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள். இந்த கேள்விக்கு, 'எனது பெயர் மகேஷ். எனது ஊர் சென்னை மாநகரில் உள்ள ஆவடி. நான் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளேன். எனது தந்தை பள்ளி ஆசிரியர். எனக்கு ஒரு தங்கை உண்டு. கல்லூரியில் படிக்கிறார். எனக்கு அரசு வேலை பிடிக்கும்' என்று பதில் சொல்லிவிட்டால் அருமையாக இருக்கும். அது முன்னரே திட்டமிட்டு தயார் செய்தால்தான் முடியும். போட்டியாளர்களின் முழு விவரத்தை அந்த நேர்முக குழுவினர் வைத்திருப்பார்கள். அதில் இருந்தும் கேள்விகள் வரலாம். எனவே ஒவ்வொரு போட்டியாளரும் தன்னைப்பற்றிய சிறிய ஆராய்ச்சி செய்வது நல்லது. தனது பெயர், ஊர், படித்த கல்லூரி, படித்த பாடப்பிரிவு, பொழுதுபோக்கு ஆகியவற்றை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒருவரின் பெயரில் கூட பொருள் இருக்கும். அதையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். ராஜேஸ்கண்ணா என்ற மாணவரிடம் இந்தி நடிகர் ராஜேஸ்கண்ணா நடித்த படங்களின் பெயரை கேட்டுள்ளனர். அவரால் சொல்ல தெரியவில்லை. ஏனென்றால் அவர் அதற்கான ஆராய்ச்சியை செய்யவில்லை. ஐ.ஏ.எஸ். நேர்முகத்தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு 20 ஆண்டுகளாக பயிற்சி அளித்த அனுபவத்தில் ஒன்றை உறுதியாக சொல்ல முடியும். ஆங்கில அறிவு சற்று குறைவு என்றாலும், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. நாம் சொல்லும் தகவல் உண்மையாக இருத்தல் வேண்டும். உடல்மொழி சிறப்பாக இருத்தல் வேண்டும். அப்போது நியாயமான மதிப்பெண்கள் பெறலாம். இருப்பினும், இருக்கும் சில நாட்களில் ஆங்கிலத்தை இலக்கண பிழை இல்லாமல் பேச பயிற்சி எடுப்பதில் தவறு இல்லை. கேள்வியை கவனமாக கேட்டு அதன்பின்னர் பதிலை தர போட்டியாளர்களை கேட்டுக்கொள்வேன். சொல்ல வேண்டியதை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லிவிட வேண்டும். அது உண்மைக்கு மாறாக இருத்தல் கூடாது. தெரியவில்லை என்றால், தெரியவில்லை அல்லது ஞாபகமில்லை என்று கூறிவிடுவது சிறந்தது. தோராயமாக ஊகித்து பதில் சொல்வது, நல்ல பண்பு அல்ல. முரட்டுத்தனமாக பதில் சொல்வது, தடித்த வார்த்தைகளில் பதில் சொல்வது, தாக்கி பேசுவது, வாக்குவாதம் செய்வது, தகராறு செய்வது, தவறாக சொன்னதை சரி என்று சாதிப்பது போன்றவை நேர்முகத் தேர்வில் மன்னிக்க முடியாத குற்றங்கள் ஆகும். அவற்றை ஒரு போதும் செய்யக்கூடாது. நேர்முக தேர்வில் நாம் நாமாகவே இருந்துகொள்வது மிகச்சிறந்த அணுகுமுறை என்று பல ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. எல்லாம் தெரிந்தவர்கள் போல பாசாங்கு செய்வது நல்லது அல்ல. எல்லாம் தெரிந்தவர்கள் உலகில் ஒருவர் கூட இல்லை. அனைத்து கேள்விகளுக்கும் பதில் சரியாக சொல்ல வேண்டும் என்ற நியதி இல்லை. பாதி கேள்விகளுக்கு பதில் சரியாக இல்லை என்றால் கூட, 150 மதிப்பெண்களை பெற்றுவிடலாம். எல்லாம் தெரிந்தவர்கள் போல நடித்து பொய் பேசினால் அனைத்தும் வீணாகிவிடும். நேர்முகத்தேர்வில் பதற்றம் எப்போதும் நம்மை நிழல் போலத் தொடரும். ஆனால் அதையே பீதியாக மாற்றிவிடக்கூடாது. பதற்றமானவர் காலை வேளையில் 'மாலை வணக்கம் ஐயா' என்று சொல்ல வாய்ப்புண்டு. பல நாட்கள் பயிற்சி எடுத்து, பல மாதிரி நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கு பதற்றத்தை கையாள தெரிந்துவிடும். அப்படி முன்கூட்டி பயிற்சி பெற்றவருக்கு, டெல்லியில் நடக்கும் நேர்முகத்தேர்வுகூட அடுத்த ஒரு மாதிரி நேர்முகத்தேர்வு போன்ற உணர்வை தான் தரும். பதற்றம் இருக்காது. பழக்கப்பட்ட ஒரு செயல்போன்று அமையும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 17 February 2018

CURRENT AFFAIRS | கடந்து வந்த பாதை | பிப்ரவரி 3- 9 | முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

கடந்து வந்த பாதை | பிப்ரவரி 3- 9 | போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. பிப்ரவரி 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...
 1. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின. வீரவசந்தராயர் மண்டபக் கூரை இடிந்து விழுந்தது. தீ அணைக்கப்பட்டதால் ஆயிரங்கால் மண்டபம் தப்பியது. சேதம் குறித்து ஆய்வு நடத்த நிபுணர் குழு அமைக்கப்பட்டது. (பிப்ரவரி 3)
 2. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியருக்கு பதவி உயர்வு வழங்க ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் தர்மராஜையும் போலீசார் கைது செய்தனர். (பிப்ரவரி 3)
 3. நியூசிலாந்தின் மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று வரலாறு படைத்தது. (பிப்ரவரி 3)
 4. குஜராத் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2016- 2017-ம் ஆண்டில் இந்தியாவில் ரூ. 4 லட்சம் கோடி அன்னிய முதலீடு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். (பிப்ரவரி 3)
 5. கடந்த ஜனவரி மாதத்தில் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 22,254 கோடி முதலீடு செய்துள்ளனர். (பிப்ரவரி 4)
 6. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். (பிப்ரவரி 4)
 7. செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (பிப்ரவரி 4)
 8. புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அமெரிக்க வீராங்கனை பீவென் ஜாங்குடன் போராடித் தோல்வி அடைந்தார். (பிப்ரவரி 4)
 9. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை 8 ஆயிரத்து 878 சதுர கிலோமீட்டர் பரப்பளவு விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. (பிப்ரவரி 5)
 10. தமிழகத்தில் சரக்கு- சேவை வரி (ஜி.எஸ்.டி.) இலக்கைத் தாண்டி ரூ. 19 ஆயிரத்து 592 கோடி வசூலானது. இது இந்திய அளவில் இரண்டாவது இடமாகும். (பிப்ரவரி 5)
 11. மத்திய பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்தது. (பிப்ரவரி 6)
 12. கடுமையான அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் மாலத்தீவு நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். இதில் இந்தியா தலையிட முன்னாள் அதிபர் முகமது நஷீத் வேண்டுகோள் விடுத்தார். (பிப்ரவரி 6)
 13. கடன் வட்டி விகிதங்கள் பற்றிய தனது கொள்கை முடிவுகளை பாரத ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. எனவே 'ரெப்போ ரேட்' எந்த மாற்றமும் இன்றி 6 சதவீதமாக நீடிக்கிறது. 'ரிவர்ஸ் ரெப்போ ரேட்'டும் மாறாமல் 5.75 சதவீதமாக உள்ளது. (பிப்ரவரி 7)
 14. குறைந்த விலை வீடு வாங்குவோரிடம் சரக்கு, சேவை வரி வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. சர்க்கஸ், நடன, நாடக நிகழ்ச்சிகளில் நபருக்கு ரூ. 500 வரையிலான நுழைவுக் கட்டணத்துக்கும் ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டது. (பிப்ரவரி 7)
 15. வருகிற 2021- 2022-ம் நிதியாண்டுக்குள், நாட்டில் புதிதாக 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. (பிப்ரவரி 7)
 16. தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்தன. 7 பேர் பலியாகினர், 250 பேர் படுகாயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. (பிப்ரவரி 7)
 17. கேப்டவுனில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்த இந்தியா, 'ஹாட்ரிக்' வெற்றியைப் பெற்றது. (பிப்ரவரி 7)
 18. கிம்பெர்லியில் தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டு களை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி படைத்தார். (பிப்ரவரி 7)
 19. மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு நிதி ஒதுக்காததைக் கண்டித்து அம்மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. நாடாளுமன்றத்தில் ஆந்திர எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். (பிப்ரவரி 8)
 20. வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்த நாட்டின் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. (பிப்ரவரி 8)
 21. இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 113 பேரை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. (பிப்ரவரி 9)
 22. தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. (பிப்ரவரி 9)
 23. மாலத்தீவு நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி குறித்து பிரதமர் மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் டெலிபோனில் அவசர ஆலோசனை நடத்தினர். (பிப்ரவரி 9)
 24. நடப்பு 2017- 2018-ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல்- டிசம்பர்) ரூ. 17 ஆயிரம் கோடி மதிப்புக்கு 51 லட்சம் டன் பருப்பு இறக்குமதி ஆகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. (பிப்ரவரி 9) 
 25. DOWNLOAD - FIND YOUR NEEDS HERE
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 12 February 2018

சுரங்கங்கள் - இந்தியாவில் உள்ள முக்கிய சுரங்கங்கள் மற்றும் எண்ணெய் வயல்கள்


 1. கஞ்சமலை (தமிழ்நாடு) - இரும்புத்தாது
 2. தீர்த்தமலை (தமிழ்நாடு) - இரும்புத்தாது
 3. பலாமு (ஜார்க்கண்ட்) - பாக்சைட்,
 4. சிங்பும் (ஜார்க்கண்ட்) - இரும்புத்தாது
 5. கியோஜார் (ஒரிசா) - இரும்புத்தாது
 6. மயூர்பன்ச் (ஒரிசா) - இரும்புத்தாது
 7. ராஞ்சி (ஜார்கண்ட்) - பாக்சைட்
 8. பாலகாட் - பாக்சைட்
 9. ஜபல்பூர் - பாக்சைட்
 10. ஜாரியா (ஜார்க்கண்ட்) - நிலக்கரி
 11. கரன்புரா (ஜார்க்கண்ட்) - நிலக்கரி
 12. சன்டா (மத்திய பிரதேசம்) - நிலக்கரி
 13. பேஞ்ச் பள்ளத்தாக்கு (மத்திய பிரதேசம்) - நிலக்கரி
 14. நரிமணம் (தமிழ்நாடு) - பெட்ரோலியம்
 15. ராணிகஞ்ச் - நிலக்கரி
 16. நெய்வேலி (தமிழ்நாடு) - பழுப்பு நிலக்கரி
 17. சிங்கரேணி (ஆந்திரா) - நிலக்கரி
 18. திக்பாய் (அசாம்) - பெட்ரோலியம்
 19. ருத்ரசாகர் (அசாம்) - பெட்ரோலியம்
 20. மலஞ்ச்கண்ட் - தாமிரம்
 21. கோலார் (கர்நாடகம்) - தங்கம்
 22. ராமகிரி (ஆந்திரா) - தங்கம்
 23. ஜடுகுடா - யுரேனியம்
 24. நெல்லூர் - மைகா
 25. கோடெர்மா (ஜார்க்கண்ட்) - மைகா
Tag: Mines - Mines and Oil Fields in India
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

tamil g.k வினா வங்கி


1. 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று முழங்கியவர் யார்?
2. சமாதானத் தந்தை என்று போற்றப்பட்ட இந்திய பிரதமர் யார்?
3. மாகாணங்களில் இரட்டை ஆட்சி சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
4. ஸ்தூபிகள் யாருடைய கட்டிடக்கலைக்கு சிறந்த சான்று?
5. வானிலை மாறுபாடுகள் நிகழும் வளிமண்டல அடுக்கு எது?
6. பேரரசு நகரம் என சிறப்பித்து அழைக்கப்படும் நகரம் எது?
7. கடற்கோள் என்பது எதைக் குறிக்கும் தமிழ்ச்சொல் ஆகும்?
8. கோத்தகிரியில் வாழ்ந்த பூர்வீக பகுதியினர் எப்படி அழைக்கப்பட்டனர்?
9. எந்த சட்ட உறுப்புகள் அடிப்படை சுதந்திர உரிமைகள் பற்றி விளக்குகிறது?
10. பஞ்சாயத்து ராஜ் முறைகள் இல்லாத இந்திய மாநிலங்கள் எவை?
11. இந்தியா முதன் முதலாக அணுகுண்டு சோதனை நடத்தியபோது பிரதமராக இருந்தவர் யார்?
12. மக்களவையை கலைக்க பரிந்துரை செய்யும் அதிகாரம் பெற்றவர்?
13. வங்கி நடப்பு கணக்கில் இருப்புக்கு மேல் பணம் எடுக்கும் வசதி எப்படி அழைக்கப்படுகிறது?
14. விலைக் கொள்கையின் வேறு பெயர் என்ன?
15. நானோ என்பது பின்ன அலகில் எப்படி குறிப்பிடப்படுகிறது?

விடைகள் :

1. பகத்சிங், 2. லால் பகதூர் சாஸ்திரி, 3. 1919, 4. மவுரிய கலை, 5. டிரபோஸ்பியர், 6. நியூயார்க், 7. சுனாமி, 8. கோடர்கள், 9. உறுப்புகள் 19 முதல் 22 வரை, 10. மேகலாயா, மிசோரம், ஜம்முகாஷ்மீர், 11. இந்திராகாந்தி, 12. குடியரசுத்தலைவர், 13. ஓவர் டிராப்ட், 14. நுண் பொருளாதாரம், 15. 10-9 .

Tag : 1. Bhagat Singh, 2. Lal Bahadur Shastri, 3. 1919, 4. Mauritian art, 5. Troposbury, 6. New York, 7. Tsunami, 8. Coders, 9. Elements from 19 to 22, 10. Meghalaya, Mizoram, Jammu Kashmir , 11. Indira Gandhi, 12. President, 13. Overdraft, 14. Micro Economy, 15. 10-9.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வர்த்தமான பேரரசு | Harsha Vardhana



* வர்த்தமான வம்சத்தை தொடங்கியவர் பிரபாக வர்த்தனர்.
* பிரபாக வர்த்தனரின் வாரிசுகள் ராஜ வர்த்தனர், ஹர்ஷர், ராஜஸ்ரீ
* கி.பி. 606-ல் ஹர்ஷர் அரியணை ஏறினார். இது ஹர்ஷ சகாப்த தொடக்கம்
* ஹர்ஷரின் முதல் தலைநகரம் தாணேஸ்வரம்.
* ஹர்ஷரின் இரண்டாம் தலைநகரம் கன்னோஜ்.
* ரத்னாவளி, பிரியதர்ஷிகா, நாகநந்தம் ஆகியவை ஹர்ஷர் எழுதிய நூல்கள்.
* வர்த்தமான அரசர்களின் புகழ்பெற்றவர் ஹர்ஷ வர்த்தனர்.
* ஹர்ஷரின் அவைப் புலவரான பாணபட்டர் ஹர்ஷ சரிதம் காதம்பரி ஆகிய நூல்களை எழுதினார்.
* ஹர்ஷரின் அவைப் புலவரான பாணபட்டர் ஹர்ஷ சரிதம், காதம்பரி ஆகிய நூல்களை எழுதினார்.
* ஹர்ஷரின் அவைக்கு வந்த சீனப் பயணிகள் யுவான் சுவாங் இட்சிங் ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் புகழ்பெற்று விளங்கியது.
* யுவான் சுவாங் எழுதிய பயண நூல் சியூக்கி
* ஹர்ஷரை சகோலதாரபதநாதா என்று அழைத்தவர் இரண்டாம் புலிகேசி.
* ஹர்ஷர் மகாயான புத்த மதத்தை பின்பற்றினார்.
* ஹர்ஷர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாகை நகரில் புத்த மாநாட்டை நடத்தினார்.
* ஹர்ஷரை நர்மதை ஆற்றங்கரையில் தோற்கடித்தவர் இரண்டாம் புலிகேசி.
Tag :  Harsha Vardhana
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 4 February 2018

TNPSC GENERAL TAMIL - சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை.


# கலம்பகத்தின் உறுப்புகள் – கலம் -12, பகம் – 6, மொத்தம் = 18
# சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை – 96 வகை
# ஐந்தமிழ் – இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.
# மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் – ஊக்கமுடைமை.
# அகத்திணை – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
# புறந்திணை – வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
# கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்
# வைக்கம் வீரர் -பெரியார்
# யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றனார்.
# ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் – கால்டுவெல்
# புலி தங்கிச் சென்ற குகை போன்றது – வீரத் தாயின் வயிறு
# நீர் வழிப் படூம் புணை போல் – ஊழ்வழிச் செல்லும் உயிர்
# கதிரவனைக் கண்ட தாமரை போல – மகிழ்ச்சி
# தணலிலிட்ட மெழுகு போல – கரைதல்
# உடுக்கை இழந்தவன் கைபோல – இடுக்கண் களைபவர்
# தாயுமானவர் பாடல்கள் – தமிழ்மொழியின் உபநிடதம்
# சிலப்பதிகாரம் – ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்
# சீவகசிந்தாமணி – மணநூல்
# கம்பராமாயணம் – இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்
# அகநானூறு – நெடுந்தொகை
# பழமொழி – முதுமொழி
# பெரிய புராணம் – திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்
# இலக்கண விள்க்கம் – குட்டித் தொல்காப்பியம்
# பட்டிணப்பாலை – வஞ்சி நெடும்பாட்டு
# கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
# புறநானூறு – தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
# பெரும்பாணாற்றுப்படை – பாணாறு
# மலைபடும்கடாம் – கூத்தராற்றுப்படை
# முல்லைப்பாட்டு – பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை
# குறிஞ்சிப் பாட்டு – காப்பியப்பாட்டு
# வெற்றிவேற்கை – நறுத்தொகை
# மூதுரை – வாக்குண்டாம்
# பெருங்கதை – கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்
# சிலப்பதிகாரம் – இரட்டைகாப்பியங்கள்
# மணிமேகலை – மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்
# நீலகேசி – நீலகேசித்தெருட்டு
# Manimagalai - Manimekalai Kshetram, Buddhist Cottage

# Neelakasei - Neelesethirutu
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 2 February 2018

தகவல் களஞ்சியம்

* உடலில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி.

* இந்தியாவில் ஹெலிகாப்டர் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1985.

* அண்டார்டிகாவில் உள்ள ஒரு எரிமலை எரோபஸ்.

* கும்பக்கரை அருவி தேனி மாவட்டத்தில் உள்ளது.

* பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.

* குளிர்ப்பதன பெட்டியான பிரிஜ்ஜை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஹாரிசன்.

* குதிரைகளால் தன் கண்களால் இருவேறு காட்சிகளை காண முடியும்.

* ஷட்டில்காக் பந்து வாத்து இறகு கொண்டு தயாரிக்கப்படுகிறது.

TAG :William Harvey found out that blood is running on the body. * Helicopter trend in India was started in 1985. * A volcano erupes in Antarctica. * Kumbakkarai Falls is in the Theni district. * Pakistan's National Flower Jasmine. James Harrison invented the refrigerator frige. * Horse can see two different scenes with his eyes. * Shuttlecock is made with ball duck feathers.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

printfriendly

Print Friendly and PDF