Monday, 26 November 2018

சில நோய்கள்

* மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படுவது கல்லீரல்.

* கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மருந்து.

* கிட்டப்பார்வை மையோபியா எனப்படுகிறது.

* ஹைபர் மெட்ரோபோபியா என்பது தூரப்பார்வையை குறிக்கும்.

* காய்ட்டர் என்பது முன்கழுத்துக் கழலை.

* அயோடின் சத்துக்குறைவால் தைராய்டு சுரப்பி வீங்குவது காய்ட்டர் பாதிப்பாகும்.

* பற்களைப் பாதிப்பது பயோரியா நோய்.

* ஈறு வீங்குவது ஜிஞ்சிவைடிஸ்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மின் காப்பு பொருட்கள்

மின் உருகி (பியூஸ்) என்பது அளவுக்கு அதிகமான மின்னோட்டம் மின்சுற்றில் பாயும்போது, தான் உருகி மின்சுற்றை முறித்து விடுவதால் மின் விபத்தை தடுக்க உதவுகிறது. மின் உருகிகளை அவற்றின் வோல்ட் அளவுக்கு ஏற்றாற்போல பயன்படுத்த வேண்டும். 250 வோல்ட் மின் உருகிகளை 125 வோல்ட் மின்சுற்றுகளில் பயன்படுத்தலாம். ஆனால் 125 வோல்ட் மின் உருகிகளை 250 வோல்ட் மின்சுற்றில் பயன்படுத்தக் கூடாது.

மின் உருகிக்குப் பதில் தற்போது மினி சர்க்கியூட் பிரேக்கர் எனப்படும் எம்.சி.பி.களும், ரப்சர்டு கரண்ட் டிவைஸ் எனப்படும் ஆர்.சி.டி.களும் பயன்படுத்தப்படுகின்றன. எம்.சி.பி. மின் உருகியைப்போல லைவ் ஒயருடன் இணைக்கப்படுகிறது. மின் உருகி ஒவ்வொரு சமயமும் உருகும்போது அதை மாற்ற வேண்டும். ஆனால் எம்.சி.பி. அதிக மின்னோட்டம் பாயும்போது மின்சுற்றை ஆட்டோமேட்டிக் சுவிட்ச்ஆப் செய்து காப்பதால் மீண்டும் சுட்ச் ஆன் செய்தால் போதும்.

ஆர்.சி.டி. எனப்படும் எர்த்த லீக்கேஸ் சர்க்கியூட் பிரேக்கர் லைவ் மற்றும் எர்த் ஒயர்களோடு இணைக்கப்படுவதால் எந்த லைனில் பிரச்சினை என்பதையும் கண்டறிய உதவுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வடக்கு வண்டல் பகுதிகள்

டூன் பள்ளத்தாக்குகள், வெளி இமயமலைத் தொடரை, நடு இமயமலைத் தொடரிலிருந்து பிரிக்கின்றன. பாபர் என்பது வெளி இமயமலைத் தொடரான சிவாலிக் பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி முழுவதும் கூழாங்கற்களோடு கூடிய மென்மையான வண்டல் மண்ணால் ஆனது. இது விவசாயத்துக்கு ஏற்றதல்ல.

சிவாலிக்கின் அடிப்பகுதியான பாபருக்கு தெற்கில் காணப்படும் பகுதியான டெராய், மென்மையான வண்டல் மண் பிரதேசமாகும். இது கொசுக்கள் தங்கும் சதுப்புநிலமாக இருப்பதால் மலேரியா இந்தப் பகுதியில் அதிகம்.

பங்கர், காதர் ஆகிய இரண்டும் பெரிய சமவெளியான கங்கைச் செமவெளியில் காணப்படும் இருவகை வண்டல் மண் பிரதேசங்கள். பங்கர் என்பது பழைய வண்டல் மண், களிமண் தன்மையும், அடர்வான வண்ணமும் கொண்டது. விவசாயத்துக்கு ஏற்றதல்ல. காதர் என்பது மங்கலான வண்ணமும், மண் தன்மையும், புதிய வண்டல் மண்ணையும் கொண்ட மண் பிரதேசம். விவசாயத்துக்கு மிகவும் உகந்தது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்திய எண்ணெய் அமைப்புகள்

ஓ.என்.ஜி.சி. 1956-ல் ஆரம்பிக்கப்பட்டது. 1994-ல் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது. அரசாங்கம் இதன் பங்குகளை தனியாருக்கும் விற்றுள்ளது.

ஓ.என்.ஜி.சி விதேஷ் லிமிடெட் (ஓ.வி.எல்) 1989-ம் ஆண்டு பழைய நிறுவனமான ஹைட்ரோகார்பன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தை மாற்றி அமைத்து இது உருவாக்கப்பட்டது. வெளிநாடுகளில் எண்ணெய் எடுப்பதற்கு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆயில் இந்தியா லிமிடெட் (ஓ.ஐ.எல்.) 1981-ல் நிறுவப்பட்டது. இந்தியாவில் எண்ணெய் வளம் கண்டறிதல், உற்பத்தி, எண்ணெய் அனுப்புதல் ஆகிய பணிகளைச் செய்கிறது. இது ஒரு வர்த்தக அமைப்பு.

கெயில் இந்தியாவில் இயற்கை எரிவாயு தயாரிப்பு மற்றும் வழங்கல் பணிகளைச் செய்யும் இது நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனம். 1984-ல் தொடங்கப்பட்டது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி

வினா வங்கி

1. மனித வளர்ச்சி குறியீட்டை வெளியிடும் அமைப்பு எது?

2. ஆக்சிஜனுக்குப் பெயரிட்டவர் யார்?

3. காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா எது?

4. பழுப்பு நிலக்கரி, நிலக்கரி, பீட், உலர்ந்த மரம் ஆகியவற்றை கலோரி மதிப்பு படி வரிசைப்படுத்துக?

5. 20 ஹெர்ட்ஸ்க்கு குறைவாக அதிர்வு எண் கொண்ட ஒலி அலைகள் எப்படி அழைக்கப்படுகிறது?

6. சுவாசத்தின்போது ஆக்சிகரண பாஸ்பரிகரணம் நடை பெறும் பகுதி எது?

7. நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு எது?

8. மேனோடிரோபா எந்த வகை தாவரம்?

9. ஆளுநராக குறைந்தபட்ச வயது தகுதி எவ்வளவு?

10. மெரினா உப்பு சத்தியாகிரகம் யார் தலைமையில் நடைபெற்றது?

விடை–கள்

1. ஐக்கியநாடுகள் சபை, 2. லவாய்சியர், 3. மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ், 4. நிலக்கரி, பழுப்புநிலக்கரி, பீட், உலர்ந்த மரம், 5. மீயொலி, 6. மைட்தோகாண்ட்ரியா, 7. 1969-74, 8. சாறுண்ணித் தாவரம், 9. 35, 10. டி.பிரகாசம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 19 November 2018

கைப்பந்து

வாலிபால் எனப்படும் கைப்பந்து ஆட்டத்தைப் பற்றிய சில புள்ளிவிவரங்கள்...

ஆடுகளம் - 18x9 மீட்டர்

வலையின் நீளம் - 9.50 மீட்டர்

வலையின் அகலம் - 1 மீட்டர்

தரையிலிருந்து வலையின்

உயரம் (ஆண்கள்) - 2.43 மீட்டர்

தரையிலிருந்து வலையின்

உயரம் (பெண்கள்) - 2.24 மீட்டர்

பந்தின் சுற்றளவு - 65-67 சென்டி மீட்டர்

பந்தின் எடை - 270-300 கிராம்

பந்தின் உள் அழுத்தம் - 0.40-0.45 கி.கி./செ.மீ.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி

1. பெட்ரோல், மரம், ஹைட்ரஜன் ஆகியவற்றை வெப்ப ஆற்றல் அளவின்படி வரிசைப்படுத்துக?

2. உலக ஊழல் குறியீட்டை வெளியிடும் அமைப்பு எது?

3. பொருள் அலைகளை கண்டுபிடித்தவர் யார்?

4. ‘ஸக்கரோமைசிஸ் செர்விசியே’ எனப்படுவது வழக்கத்தில் எப்படி அழைக்கப்படுகிறது?

5. சலவை சோடாவின் வேதிப்பெயர் என்ன?

6. ஆல்பா, பீட்டா, காமா கதிர்களால் பாதிக்கப்படாத ஒரு பொருள்?

7. உலக ஓசோன் தினம் எப்போது கடைப் பிடிக்கப்படுகிறது?

8. திட்டக்குழு எப்போது உருவாக்கப்பட்டது?

9. மாநில அவசரநிலை பிரகடனம் பற்றி குறிப்பிடும் சட்ட உறுப்பு எது?

10. கியூபாவின் ஹவானா துறைமுகத்தில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் எவை?

விடைகள்

1. ஹைட்ரஜன், பெட்ரோல், மரம், 2. பன்னாட்டு வெளிப்படை நிறுவனம் (டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல்), 3. டிபிராக்லி, 4. பேக்கரி ஈஸ்ட், 5. சோடியம் கார்பனேட், 6. ஒளிப்படத் தகடு, 7. செப்டம்பர் 16, 8. 1950, 9. 356-வது விதி, 10. சர்க்கரை, சுருட்டு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வரலாற்று சான்றுகள்

தமிழக வரலாற்றை குறிக்கும் சான்றுகள் எவை? அவை எதை அறிய உதவுகிறது? என்பதை அறிவோமா...

சங்க காலம் குறித்த கருத்துகள் - சின்னமனூர் செப்பேடுகள்

சேரர் வரலாறு : பதிற்றுப்பத்து நூல்

சங்கங்கள் இருந்த காலம் மகாவம்சம், தீபவம்சம்

தமிழ் அரசுகள் பற்றி : இண்டிகா மெகஸ்தனிஸ்.

சங்ககாலம் பற்றி : ஸ்ட்ராபோ, பிளினி, தாலமி போன்றோரின் குறிப்புகள்

பாண்டியர் பற்றி : அசோகர்-2-13ம் கல்வெட்டுகள்

தமிழக அரசுகளைப் பற்றி : கலிங்க மன்னன் காரவேலனின் அதிகும்பா கல்வெட்டுகள்.

பழங்காலத்தமிழ் பிராமி எழுத்துகள் பற்றி : கழுகுமலை கல்வெட்டுகள்

தமிழ் குறுநிலமன்னர்கள் பற்றி : திருக்கோவிலூர் கல்வெட்டு

சமணத்துறவிகள் பற்றி : திருப்பரங்குன்ற கல்வெட்டு.

சேர மன்னர்கள் பற்றி : ஆர்நாட்டார் மலைக்கல்வெட்டு.

களப்பிரர் காலம் பற்றி : தமிழ் நாவலர் சரிதை யாப்பருங்கலம்.

களப்பிரர் பற்றி : காஞ்சி வைகுந்தப்பெருமாள் கோவில் கல்வெட்டு, தளவாய்புரம், செப்பேடு, திருப்புகலூர் கல்வெட்டு.

பிற்காலச் சோழர்களின் குடவோலை முறை பற்றி : உத்திரமேரூர் கல்வெட்டு

பல்லவர்கால இசை பற்றி : குடுமியான்மலைக் கல்வெட்டுகள்.

பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிபற்றி : அனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்புகள்.

சங்ககாலம் குறித்த இலக்கியச் சான்றுகளில் முக்கியமானவை தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகியவை.

பதினெண் கீழ்க்கணக்கு சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன சங்கம் மருவிய காலத்து நூல்கள்.

ஆதிச்ச நல்லூரில் அகழாய்வு செய்தவர் ராபர்ட் புரூஸ்பூட்.

துப்ரேல் மற்றும் மார்டிமர்வீலர் அரிக்கமேட்டில் ஆய்வுகள் செய்தவர்கள்.

சாளுவன் குப்பம் என்ற இடத்தில் சங்ககால கோட்டமும், பல்லவர் கால கோவிலும் கண்டறியப்பட்டு உள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வைட்டமின்கள்

* வைட்டமின்களின் இரு வகைகள் : கொழுப்பில் கரைபவை மற்றும் நீரில் கரைபவை.

* வைட்டமின்-ஏயின் வேதிப் பெயர் ரெட்டினால்.

* வைட்டமின்-ஏ குறைவினால் ஏற்படும் நோய்கள் : மாலைக்கண் நோய், சிரோப்தால்மியா

* கேரட்டில் வைட்டமின்-ஏ அதிகம் உள்ளது.

* வைட்டமின்-டி குறைவால் ரிக்கட்ஸ் நோய் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கு ஆஸ்டியோமலேசியா வியாதியும் ஏற்படும்.

* வைட்டமின்-டியை சூரிய ஒளியில் இருந்து பெறலாம். கால்சிபெரால் என்பது வைட்டமின்-டியின் பெயராகும்.

* ‘வீட் ஜெர்ம்’ எண்ணெயில் வைட்டமின்-இ அதிகம், வைட்டமின்-இ-யின் வேதியியல் பெயர் டோகோபெரால், இது குறைந்தால் மலட்டுத்தன்மை ஏற்படும்.

* வைட்டமின்-கே குறைவால் ரத்தப்பெருக்கு நோய் ஏற்படும்.

* வைட்டமின்-கேயின் வேதியியல் பெயர் பைலோகுயினோன்.

* ரத்த உறைதலுக்கு வைட்டமின்-கே அவசியம்.

* கீரைகளில் வைட்டமின்-கே அதிகம்.

* வைட்டமின்-சி குறைவு ஸ்கர்வி நோயை உருவாக்கும்.

* பல் ஈறுகளிலிருந்து ரத்தம் வடிவது ஸ்கர்வி நோயின் அறிகுறி.

* வைட்டமின்-சியின் வேதிப்பெயர் அஸ்கார்பிக் அமிலம்.

* எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களில் வைட்டமின்-சி அதிகம் உள்ளது.

* வைட்டமின்-பி1-ன் வேதியியல் பெயர் தயமின்.

* வைட்டமின்-பியின் குறைவால் ஏற்படுவது பெரிபெரி.

* பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின்களில் நைட்ரஜன் உள்ளது.

* வைட்டமின்-பி2-ன் வேதியியல் பெயர் ரிபோபிளேவின்.

* வைட்டமின்-பி6-ன் வேதியியல் பெயர் பைரிடாக்சின்.

* வைட்டமின்-பி12-ன் வேதியியல் பெயர் சயனகோபாலமின்.

* நியாசின் என்ற பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் குறைவினால் ஏற்படும் நோய் பெல்லக்ரா.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 12 November 2018

மத்திய ஆராய்ச்சி மையங்கள்

தமிழ் நாட்டில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களையும், அவற்றின் அமைவிடம் மற்றும் பெயர் விரிவாக்கத்தையும் அறிந்து கொள்வோம்...

சி.எல்.ஆர்.ஐ. (CLRI) - மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், (சென்னை)

சி.இ.சி.ஆர்.ஐ. (CECRI - மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையம் (காரைக்குடி, சிவகங்கை)

சி.ஐ.பி.இ.டி. (CIPET) - மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப ஆய்வு மையம் (சென்னை)

சி.ஐ.சி.டி. (CICT) - செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் (சென்னை)

சி.ஐ.பி.ஏ. (CIBA) - உவர்நீர் மீன்வளர்ப்பு மத்திய நிறுவனம் (சென்னை)

என்.ஐ.ஓ.டி. (NIOT) - கடல் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையம் (சென்னை)

என்.ஐ.எஸ். (NIS) - தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (சென்னை, தாம்பரம்)


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உலர் பனிக்கட்டி

திடமான கார்பன்-டை-ஆக்சைடு, உலர் பனிக்கட்டி எனப்படுகிறது. மருந்துப் பொருட்களை நீண்ட தொலைவுக்கு குளிர்ச்சியான நிலையில் பாதுகாத்து எடுத்துச் செல்ல உலர் பனிக்கட்டி பயன்படுகிறது. இதன் கொதிநிலை 79 டிகிரி செல்சியஸ் ஆகும். இதுபோலவே திரவ நைட்ரஜனும் ஒரு பாதுகாப்பு பொருளாக பயன்படுகிறது. உயர் ரக கால்நடை கருவூட்டல் உயிர் விந்தணுக்களை உறைநிலையில் பாதுகாக்க இதை பயன்படுத்துகிறார்கள். திரவ நைட்ரஜனின் கொதிநிலை 196 டிகிரி செல்சியஸ்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நிகண்டுகள்,

சமணர்கள் தமிழுக்கு அளித்த கொடை நிகண்டுகள். சொற்தொகுதிகளாகவும், களஞ்சியங்களாகவும் நிகண்டுகள் திகழ்கின்றன. திவாகர நிகண்டில் பன்னிரு பெயர் தொகுதிகள் உள்ளன. அவை தெய்வம், மக்கள், விலங்கு, மரம், இடம், பல்பொருள், செயற்கை வடிவம், பண்பு, செயல், ஒலி, ஒரு சொல் பல்பொருள், பல்பொருள் கூட்டம் என்பன. திவாகர நிகண்டை தொகுத்தவர் திவாகரர், இவரைஆதரித்தவர் சேந்தன். எனவே இது ‘சேந்தன் திவாகரம’் என்றும் அழைக்கப்படுகிறது. 9500 சொற்களுக்கு இது பொருள் உரைக்கிறது. ‘இனிமையும், நீர்மையும் தமிழெனலாகும்’ என்று பிங்கல நிகண்டில் தமிழுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. பிங்கல முனிவர் இயக்கிய பிங்கல நிகண்டு 15 ஆயிரத்து 791 சொற்கள் கொண்டது, காங்கேயர் எழுதிய உரிச்சொல் நிகண்டு 3 ஆயிரத்து 200 சொற்கள் கொண்டது. மண்டல புருடர் எழுதிய சூடாமணி நிகண்டு 11 ஆயிரம் சொற்கள் கொண்டது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காந்தம்

*காந்தம், மெக்னீசியா என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

* புவியின் காந்த அச்சு 17 டிகிரி சாய்ந்துள்ளது.

* இரும்பு, நிக்கல், கோபால்ட் ஆகியவை பெர்ரோ காந்தங்கள்.

* ஆக்சிஜன் பாரா காந்தத்தன்மை கொண்டது.

* மின்சார அழைப்பு மணியில் மின்காந்தம் பயன்படுகிறது.

* காந்தப்பொருள் தன் காந்தத்தன்மையை இழக்கும் வெப்பநிலை கியூரிப் புள்ளி எனப்படும்.

* இரும்பின் கியூரிப்புள்ளி 780 டிகிரி.

* நிக்கல், கோபால்ட் இவற்றின் கியூரிப் புள்ளிகள் முறையே 360 டிகிரி சென்டிகிரேடு, 1090 டிகிரி சென்டிகிரேடு.

* மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர்: பாரடே.

* மின்னோட்டத்தின் காந்த விளைவைக் கண்டறிந்தவர்: ஒயர்ஸ்டட்.

* சந்திரனில், காந்தப்புலம் இல்லாததால் அங்கு காந்த ஊசி விலகல் அடையாது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வினா வங்கி | நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்த முதல் பிரதமர்

வினா வங்கி


1. நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்த முதல் பிரதமர் யார்?

2. செயற்கை பெட்ரோல் தயாரிக்க பயன்படும் தனிமம் எது?.

3. இந்திய சட்டத்தின் அவசர நிலை பிரகடன விதிகள் எந்த நாட்டின் சட்டத்தில் இருந்து பெறப்பட்டது?

4. காப்பர் சல்பேட் மற்றும் சுண்ணாம்பு கலவை எப்படி அழைக்கப்படுகிறது?

5. அரசாங்கத்தின் குறைந்த கால செக்யூரிட்டி பேப்பரின் வேறு பெயர் என்ன?

6. கருப்புமுத்து என அழைக்கப்பட்ட விளையாட்டு வீரர் யார்?

7. தமிழின் முதல் முப்பரிமாண திரைப்படம் எது?

8. இயற்பியலுக்காக இருமுறை நோபல் பெற்றவர் யார்?

9. பாலூட்டிகளின் இதயத்தின் வலது ஆரிக்கிளில் காணப்படும் தசை முடிச்சின் பெயர் என்ன?

10. ரத்தத்தில் சர்க்கரை அளவை கணக்கிடும் கருவியின் பெயர் என்ன?

விடைகள்

1. ஜவகர்லால் நேரு, 2. ஹைட்ரஜன், 3. ஜெர்மனி, 4. போர்டோகலவை, 5. உண்டியல் பில், 6. பிரேசில் கால்பந்துவீரர் பீலே, 7. அன்னை பூமி, 8. ஜான் பார்டீன், 9. எஸ்.ஏ.முடிச்சு, 10. குளுக்கனோ மீட்டர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 5 November 2018

முக்கிய படையெடுப்புகள்

கி.மு. 326: அலெக்ஸாண்டர் படையெடுப்பு.

கி.மு. 261: அசோகரின் கலிங்கப் போர்.

கி.பி. 712: முகமது பின் காசிம் சிந்து படையெடுப்பு.

கி.பி. 1025: கஜினி முகமது, சோமநாதர் கோவில் படையெடுப்பு.

கி.பி. 1191: முதல் தரெயின் போர் (முகமது கோரிக்கும் பிருத்விராஜுக்கும்).

கி.பி. 1192: இரண்டாம் தரெயின் போர் (முகமது கோரிக்கும் பிருத்விராஜுக்கும்).

கி.பி. 1398: தைமூர் படையெடுப்பு.

கி.பி. 1498: வாஸ்கோடகாமா கடல்வழி கண்டுபிடிப்பு.

கி.பி. 1526: முதல் பானிபட் போர் (பாபருக்கும் இப்ராஹிம் லோடிக்கும்).

கி.பி. 1556: இரண்டாம் பானிபட் போர் (அக்பருக்கும் ஹெமுவுக்கும்).

கி.பி. 1565: தலைக்கோட்டைப் போர் (விஜயநகரத்துக்கும், பாமினி அரசுக்கும்).

கி.பி. 1739: நாதிர்ஷாவின் டெல்லி படையெடுப்பு.

கி.பி. 1757: பிளாசிப் போர் (ஆங்கிலேயர்களுக்கும் நவாப்புக்கும்).

கி.பி. 1761: மூன்றாம் பனிபட் போர் (அகமது ஷா அப்தாலிக்கும், மராத்தியர்களுக்கும்).

கி.பி. 1764: பக்ஸர் போர் (ஆங்கிலேயர்களுக்கும், நவாபுக்கும்).

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரோமோசோம் பிறழ்ச்சிகள்

கிளைன்பெல்டர்ஸ் சின்ட்ரோம் (Klinefelter’s syndrome): 44+xxy

இந்த நோய்காரர்களிடம் 47 குரோமோசோம்கள் காணப்படும். ஒரு x குரோமோசோம் அதிகம் காணப்படுகிறது. இந்த நோய் உடையவர்கள் பெண்தன்மையுள்ள ஆண்கள்.

டர்னர் சின்ட்ரோம் (Turner syndrome): 44+x0

இந்த நோய்க்காரர்கள் 45 குரோமோசோம் கொண்டவர்களாவர். ஒரு x குரோமோசோம் மட்டுமே இருப்பதால் இவர்கள் முழுமையற்ற பெண்களாக (incomplete female) இருப்பர்.

டவுன் சின்ட்ரோம் (Down syndrome):

இது 21-வது உடல் குரோமோசோம் ஜோடியில் புதிதாக ஓர் ஒற்றைக் குரோமோசோம் சேர்வதால் ஏற்படுகிறது (21-st trisomy). இது மங்கோலியன் முட்டாள் தன்மை (Mongolian idiocy) எனப்படுகிறது.

எட்வர்ட்ஸ் சின்ட்ரோம்(Edwards’ syndrome):

இது 18-வது உடல் குரோமோசோம் ஜோடியில் புதிதாக ஓர் ஒற்றை குரோமோசோம் சேர்வதால் ஏற்படுகிறது(18th trisomy). இந்த நோய்க் குறியீடு உள்ள குழந்தைகள் 6 மாதத்துக்குள் இறந்துவிடும்.

இவைபோல் 5-ம் குரோமோசோமின் ஒரு பகுதி இழக்கப் படுவதால் (Deletion of shortarm) உருவாகும் பூனைக்கத்தல் நோய்க் குறியீடும், (Cri du chat syndrome) 8-ம் குரோமோ சோமில் ஓர் ஒற்றை குரோமோசோம் அதிகரிப்பதால் உண்டாகும் பட்டாவு நோய்க் குறியீடும் குரோமோசோம் பிறழ்ச்சியால் வருபவை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

வினா வங்கி

1. எறும்புகள் தங்கள் உணவை கண்டுபிடிக்கும் முறை எப்படி அழைக்கப்படுகிறது?

2. மக்களவையை கலைக்க அதிகாரம் பெற்றவர் யார்?

3. இந்தியாவில் உள்ள ஒரே மனிதகுரங்கு வகை எது?

4. தமிழகத்தின் பொற்காலம் எனப்படுவது எது?

5. இந்தியாவின் முதன்மை ஆற்றல் மூலம் எது?

6. உலகிலேயே இரண்டாவது சிறிய நாடு?

7. புகைப்பட, திரைப்பட பிலிம்கள் எதனால் ஆனவை?

8. யூக்கலிப்டஸ் இலைகளை மட்டுமே உண்ணுவது?

9. ரத்த வகைகளை கண்டுபிடித்தவர்?

10. மிக உயரமான மர வகைகள் எந்த தாவரப்பிரிவில் வகைப் படுத்தப்பட்டுள்ளன?

விடைகள்

1. ஆல்பேக்டோ முறை, 2. குடியரசு தலைவர், 3. கிப்பன், 4. சங்க காலம், 5. நிலக்கரி, 6. மோனாகோ, 7. செல்லுலாய்ட், 8.கோலா கரடி, 9. கார்லான்ட் ஸ்டீனர், 10. ஜிம்னோஸ்பெர்ம்கள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

printfriendly

Print Friendly and PDF