Pages

Monday, 17 February 2020

வினா வங்கி

1. ஏரி வாரியம் எந்த பழந்தமிழர் ஆட்சி முறையில் செயல்பட்டது?

2. ‘இந்தியாவின் அலெக்சாண்டர்’ என்று தன்னை அழைத்துக் கொண்டவர் யார்?

3. புத்தரின் துறவை குறிக்கும் சின்னம் எது?

4. விதவை மறுமணச் சட்டம் யாருடைய காலத்தில் கொண்டு வரப்பட்டது?.

5. ஒத்துழையாமை இயக்கத்தின்போது காந்தியடிகள் துறந்த பட்டம் எது?.

6. பத்தினி வழிபாடு யாரால் ஏற்படுத்தப்பட்டது?

7. சூரிய குடும்பத்தைத் தாண்டி பல பால்வீதி மண்டலங்கள் உண்டு என்று முதன் முதலில் கூறியவர் யார்?

8. லூதியானா நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

9. இந்தியாவில் யுரேனியம் தோண்டியெடுக்கப்படும் சுரங்கம் எங்குள்ளது?

10. ராஜாஜி தேசியப்பூங்கா எங்குள்ளது?

11. இலங்கை பழங்குடியினர் எப்படி அழைக்கப்படுகிறார்கள்?

12. பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?

13. ‘ரான் ஆப் கட்ச்’ என்ற இடத்தில் அமைந்துள்ள பிரபல சரணாலயம் எது?

14. பருவக்காற்றுக் காடுகளின் மற்றொரு பெயர் என்ன?

15. இந்தியாவின் முதல் ஐ.சி.எஸ். அதிகாரி யார்?

16. மண்டல் கமிஷனை அமைத்தவர் யார்?

17. கட்சித்தாவல் தடைச்சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த அட்டவணையில் இடம் பெற்று உள்ளது?

18. ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்ட காலம் எது?

19. வறுமையே வெளியேறு என்ற பிரச்சாரம் எந்த ஐந்தாண்டு திட்டத்தின்போது முழங்கப்பட்டது?

20. மில்லியன் கிணறுகள் திட்டம் எப்போது செயல்படுத்தப்பட்டது?

21. எச்.டி.ஐ. என்பது என்ன?

22. தேசிய வருமானத்தை விஞ்ஞான முறைப்படி கணக்கெடுப்பு செய்தவர் யர்?

23. மின்காந்த தூண்டலின் அலகு எது?

24. ரேடியம், தோரியம், யுரேனியம் போன்றவை தனிமவரிசை அட்டவணையின் எந்த வரிசையில் இடம் பெறுகின்றன?

25. மின்னோட்டத்துக்கும் மின் அழுத்த வேறுபாட்டுக்கும் உள்ள தொடர்பை விளக்குவது எது?

விடைகள்

1. சோழர்கள், 2.அலாவுதீன் கில்ஜி, 3. குதிரை, 4. டல்ஹவுசி, 5. கெய்சர் ஐ ஹிந்த், 6. செங்குட்டுவன், 7. ஹர்சல், 8. சட்லஜ், 9. ஜடுகுடா, 10. உத்திரகாண்ட், 11. வேதாஸ், 12. ஜார்க்கண்ட், 13. வனக்கழுதை, 14. இலையுதிர் காடுகள், 15. சத்யேந்திரநாத் தாகூர், 16. மொரார்ஜி தேசாய், 17. 10-வது அட்டவணை, 18. 1974-79, 19. ஐந்தாம் 5-ஆண்டுத் திட்டம், 20. 1996, 21. மனித வளர்ச்சி குறியீடு, 22. டாக்டர் வி.கே.ஆர்.வீ.ராவ், 23. ஹென்றி, 24. 7-வது வரிசை, 25. ஓம்.

No comments: