Pages

Monday, 16 December 2019

சிலியில் உள்ள அடகாமா பாலைவனம்

சிலியில் உள்ள அடகாமா பாலைவனம் உலகின் வறட்சியான பகுதிகளில் ஒன்று. தென் அமெரிக்க கண்டத்தில் இது அமைந்துள்ளது. இருந்தாலும் பசிபிக் பெருங்கடலில் இருந்து வீசும் மூடுபனியால் சில இடங்களில் ஓரளவு ஈரப்பதம் நிலவுகிறது.

இந்த ஈரப்பதத்தையே இந்த பாலைவனத்தின் அருகில் வாழும் மக்கள் குடிநீராக மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். இதற்காக அவர்கள் எளிய தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்துகிறார்கள். தங்கள் வீடுகளின் கூரையிலும், மலை உச்சியிலும் ராட்சத பேனர்கள்போல தடுப்புபலகை அமைக்கிறார்கள். இதில் மோதும் மூடுபனி, நீர்த்திவலையாக மாற்றமடைந்து வடிகிறது.

அரசாங்கம் மலைகளில் ஏராளமான தடுப்பு பலகை அமைத்து நீரை வடிக்கிறது. இந்த வகையில் தினமும் சுமார் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வரை சேகரித்து அருகில் உள்ள கிராமங் களுக்கு குடிநீராக விநியோகிக் கப்படுகிறது. இதற்காக மலையில் இருந்து கீழ்நோக்கி தண்ணீர் வடிகுழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுவே அவர்களின் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு சிறந்த வடிகாலாக விளங்குகிறது.

No comments: