Friday 26 January 2018

தகவல் களஞ்சியம்-டெல்லியின் பழைய பெயர் ஷாஜகானாபாத்.

* தமிழக சட்டசபையில் உறுப்பினராக நுழைந்த முதல் சினிமா நட்சத்திரம் கே.பி.சுந்தராம்பாள். 1951-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் மேல்சபை உறுப்பினரானார்.
* இந்தியாவின் முதல் துணை பிரதமர் வல்லபாய் படேல்.
* நமது தேசிய சின்னத்திலுள்ள 'சத்யமேவ ஜெயதே' என்ற வாக்கியம் முண்டக உபநிடதத்தில் உள்ளது.
* 'வந்தே மாதரம்' பாடல் ஆனந்தமடம் என்னும் நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. இதை எழுதியவர் பங்கிம் சந்திர சட்டார்ஜி.
* இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட இடம் கொல்கத்தா.
* இந்திய திட்ட நேரம் அலகாபாத்தை அடிப்படையாகக் கொண்டது.
* மெஞ்ஞானப் பாடத்தில் முதல் மாணவராக தேர்ச்சி அடைந்து 'சாஸ்திரி' என்ற பட்டத்தை லால்பகதூர் சாஸ்திரி பெற்றோது அவருக்கு வயது 22.
* ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்த ரோமானிய அரசர் கான்ஸ்டன்டைன்
* டெல்லியின் பழைய பெயர் ஷாஜகானாபாத்.
* கல்லில் ஓவியம் பதிக்கும் கலைக்குப் பெயர் லித்தோகிராபி.
* Old name of Delhi is Shahjahanabad.

* Lithography is the name of the art of painting in stone.

No comments: