உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவியேற்பு | உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் சிங் கேஹர் நேற்று பதவியேற்றார். 64 வயதான ஜே.எஸ்.கேஹர், வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை சுமார் 7 மாதங்கள் இப்பதவியில் நீடிப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதியாக இருந்த டி.எஸ்.தாக்குரின் பதவிக் காலம் கடந்த 3-ம் தேதி யுடன் முடிவடைந்தது. அப்பத விக்கு நீதிபதி ஜே.எஸ்.கேஹரை நியமிக்க கடந்த மாதம் 6-ம் தேதி மத்திய அரசுக்கு நீதிபதி டி.எஸ்.தாக்குர் பரிந்துரை செய்தார். டிசம்பர் 19-ம் தேதி இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். இதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் உச்ச நீதி மன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சீ்க்கியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகியிருப்பது இதுவே முதல்முறை. கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியான ஜே.எஸ்.கேஹர், கொலீஜியம் முறையை ஒழிக்கும் மத்திய அரசின் நீதிபதிகள் நியமனச் சட்டத்தை செல்லாது என அறிவித்த அரசியல் சாசன அமர்வுக்கு தலைமையேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2016 ஜனவரி மாதம் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியதை ரத்து செய்தது, சஹாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய்க்கு சிறை தண்டனை விதித்தது போன்ற அதிரடி தீர்ப்புகளை வழங்கிய அமர்வில் ஜே.எஸ்.கேஹர் இடம் பெற்றிருந்தார். டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Tag: Supreme Court Chief Justice JSKhar to be sworn | Jagadish Singh Kheer became the new Chief Justice of the Supreme Court. 64-year-old JSKher will last about 7 months until August 28.
No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||