Tuesday 19 February 2019

பொது அறிவு | வினா வங்கி,

1. இந்தியா வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்த முதல் போர்க்கப்பல் எது?.

2. இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யார்?

3. தான் கேப்டனாக பதவி வகித்த டெஸ்ட் தொடரில் முதல் மூன்று இன்னிங்ஸ்களில் 3 சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?.

4. ரஷியாவில் ஆட்சி அதிகாரத்தை கம்யூனிஸ்ட் கட்சியினர் கைப்பற்ற காரணமாக இருந்த அக்டோபர் புரட்சியை முன்னின்று நடத்தியவர் யார்?.

5. இந்தியாவில் சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலம் எது?

6. அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர் கோவிலான தர்பார் சாகிப், பேச்சு வழக்கில் எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?

7. நமது தேசத்தந்தை காந்திக்கு மகாத்மா என்ற பட்டம் அளித்தவர் யார்?

8. இந்தியாவில் எங்கே முதல் இரும்பு உருக்கு ஆலைகள் நிறுவப்பட்டன?

9. மிக அதிக பல்லுயிர்த்தன்மை கொண்ட நிலப்பகுதி எது?

10. டெல்லி செங்கோட்டையைக் கட்டிய முகலாய அரசர் யார்?

11. சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலின் பெயர் என்ன?.

12. செவ்வாயின் சுற்றுப்பாதைக்கு இந்தியா அனுப்பிய விண்கலத்தின் பெயர் என்ன?

13. சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராம கிருஷ்ணா மிஷன் அமைப்பின் தலைமை இடம் எங்கு உள்ளது?

14. கஸ்தூரிபா காந்தியின் சமாதி எங்குள்ளது?

15. படுகொலைகளுக்கு இடையே என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

விடைகள்

1. சி.ஜி.எஸ். பார்ராகுடா, 2. பால்தேவ் சிங், 3. விராட் கோலி, 4. லெனின், 5. தெலுங்கானா, 6.பொற்கோவில், 7. ரவீந்திரநாத் தாகூர், 8. ஜாம்ஷெட்பூர், 9. வெப்ப மண்டலம், 10. ஷாஜகான், 11. விவேக் எக்ஸ்பிரஸ், 12.மங்கள்யான், 13. பேலூர் மடம் (கொல்கத்தா), 14. புனே, 15. அரவிந்த் அடிகா.

No comments: