Tuesday 26 February 2019

சுதேசி இயக்கம் :

கர்சன் பிரபு வங்காளத்தை 1905ஆம் ஆண்டு பிரித்தார். அச்செயல் காங்கிரசு இயக்கத்திற்கு மறைமுகமாக உதவியது. வங்கப் பிரிவினை மக்களைப் பிரிப்பதற்கு பதில், அவர்களை ஒன்றாகச் சேர்த்தது. அச்செயல் பொருளாதாரப் புறக்கணிப்பு எனும் சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு வழிவகுத்தது. சுதேசி என்பதன் பொருள் சொந்த நாடு என்பதாகும். அவ்வியக்கம் சொந்த நாட்டின் தொழில்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. சுதேசி இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட ஏராளமான மக்கள் ஆங்கிலப் பொருட்களையும், குறிப்பாக துணிவகைகளையும், புறக்கணித்தனர். அதனால் இந்தியத் தொழில்கள் வளர்ந்தன. சுதேசி இயக்கத்தினர் அயல்நாட்டுத் துணிகளைச் சேகரித்து அவற்றை நிகரங்களின் மையப்பகுதிகளில் எரித்துச் சாம்பலாக்கினர். ஏராளமான இளைஞர்கள் தம் படிப்பையும் விட்டு அவ் வியக்கத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வந்தே மாதரம் எனும் “தாய்நாட்டு பற்றுமிக்க முழக்கத்தை எழுப்பினர். தென்னிந்தி யாவில் தூத்துக்குடியைச் சேர்ந்த வ.உ.சி. என எல்லோராலும் அழைக்கப்பட்ட வ.உ. சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி அல்லது குழுமத்தினை (Swedeshi Steam Navigation Company) இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் வணிகம் செய்ய நிறுவினார்.

No comments: