மூளை நரம்புகள்...

பெருமூளை நினைவாற்றல் மற்றும் சிந்தனையை கட்டுப்படுத்துகிறது.

பெருமூளை இரு அரைக்கோளங்களாக காணப்படுகிறது.

பெருமூளையின் வலது அரைக் கோளம் படைப்பாற்றல் சிந்தனையுடன் தொடர்புடையது

இடது அரைக்கோளம் நினைவாற்றல், தர்க்கசிந்தனையுடன் தொடர்புடையது.

பெருமூளையின் இரு அரைக்கோளங்களை இணைப்பது கார்பஸ் கலோசம்.

சிறுமூளை தசை ஒருங்கிணைப்பை கட்டுப்படுத்துகிறது.

சிறுமூளை பாதிக்கப்படுவதால் குடிகாரர்கள் தள்ளாடுகின்றனர்.

உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது ஹைப்போதலாமஸ்.

மூளையிலுள்ள திரவம் செரிபரோ ஸ்பைனல் திரவம்.

மூளையைச் சுற்றியுள்ள உறையின் பெயர் மெனின்ஜெஸ்.

அனிச்சை செயலைக் கட்டுப்படுத்துவது தண்டுவடம்.

கபால நரம்புகளின் எண்ணிக்கை 12 ஜோடி.

தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை 31 ஜோடி.

Comments