இந்திய ராணுவத்தின் தரைப்படை, விமானப்படைக்கு புதிய தளபதிகள் நியமனம் |

தனோவா
பிபின் ராவத்
இந்திய ராணுவத்தின் தரைப்படை தளபதியாக இருக்கும் தல்பீர் சிங்கும், விமானப்படை தளபதியாக இருக்கும் அருப் ராஹாவும் இந்த மாதம் 31-ந்தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். இதனையொட்டி இந்த படைகளுக்கு புதிய தளபதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். 11-வது கோர்கா ராபிள்ஸ்சின் 5-வது பட்டாலியனை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் பிபின் ராவத் தரைப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய விமானப்படை தளபதியாக ஏர் மார்ஷல் பி.எஸ்.தனோவா நியமிக்கப்பட்டு உள்ளார்.
Tag: Lieutenant General Bipin Rawat from the 5th battalion of Gorka Rawls has been appointed as the commander of the ground floor. Air Marshal PS Dnana was appointed Indian Air Force Commander.