Tuesday, 11 February 2020

கரிம வேதியியல்

* கார்பன் சேர்மங்களின் வேதியியல் கரிம வேதியியல்.

* கார்பனோடு ஹைட்ரஜன் சேர கிடைப்பது ஹைட்ரோ கார்பன்.

* ஹைட்ரோ கார்பன் எரிபொருளாகப் பயன்படும் அல்கேன், அல்கீன், ஆல்கஹால், - கரிமச் சேர்மங்கள்.

* கரிமச் சேர்மங்களில் சக பிணைப்பு காணப்படுகிறது.

* நொதித்தல் வினையில் சர்க்கரை ஆல்கஹாலாக மாறுகிறது.

* நச்சுத்தன்மையுள்ளது மெத்தில் ஆல்கஹால்.

* கரும்புக் கழிவுப் பாகிலிருந்து பெறப்படுவது எத்தில் ஆல்கஹால்.

* எத்தில் ஆல்கஹால் எரிபொருளாகப் பயன்படுகிறது.

* பெட்ரோல் + எத்தில் ஆல்ஹகால் - சக்திமிகு ஆல்கஹால்,

* ddt என்பது ஒரு பூச்சிக்கொல்லி.

* கார்பன் டெட்ரா குளோரைடு மின் தீயை அணைக்கும்.

* எல்.பி.ஜி. கசிவை அறிய உதவுவது மெர்காப்டன்.

* புகையிலையை உலராமல் பாதுகாப்பது கிளிசரால்.

No comments: