Hot Posts

Ad Code

மாநிலங்களுக்கு இடையிலான குழுமம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒற்றை ஆட்சிக் கூறுகளும், கூட்டாட்சிக் கூறுகளும் இடம் பெற்றுள்ளன. உறுப்பு 263-ல் இடம் பெற்றுள்ள மாநிலங்களுக்கு இடையேயோன குழு என்பது கூட்டுறவு கூட்டாட்சி என்ற தத்துவத்தின்படி அமைந்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை கவனித்து அது குறித்து மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்குவது, மாநிலங்களின் பொதுநலனுக்கு உகந்த விஷயங்களைக் கண்டறிந்து அது குறித்த பரிந்துரைகளை வழங்கி கொள்கை முடிவுகளை ஒருங்கிணைப்பது ஆகியவை இதன் முக்கியப்பணி.

அரசமைப்புச் சட்டத்திலேயே குறப்பிடப்பட்டிருந்தாலும் இந்தியாவில் முதன் முறையாக சர்க்காரியா கமிஷன் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு இடையேயான குழு 1990-ல் ஏற்படுத்தப்பட்டது. பிரதமர், மாநில முதல்வர்கள், பிரதமரால் நியமிக்கப்பட்ட 6 யூனியன் கேபினட் அமைச்சர்கள் ஆகியோர் இதன் உறுப்பினர்கள். கவுன்சில் ஆண்டுக்கு மூன்று முறை குறைந்தபட்சம் கூடுகிறது. இது 1996-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் புத்துயிர் பெற்றது.

Post a Comment

0 Comments

Ad Code