Monday 13 January 2020

மந்த வாயு

வில்லியம் ராம்சே.

வாழ்க்கை குறிப்புகள்

வில்லியம் ராம்சே ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் (1852, அக்டோபர் 2-ல்) பிறந்தார். ஜெர்மனியில் மேற்கல்வி படித்தார். ஆர்த்தோடோலுயிக் அமிலம் பற்றி ஆராய்ச்சி செய்து டபின்ஜென் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

1872-ல் முனைவர்படிப்பை முடித்து தாயகம் திரும்பினார். ஆண்டர்சன் கல்லூரியில் வேதியியல் உதவியாளராக பணிக்குச் சேர்ந்தார்.

1880-ல் பிரிஸ்டோல் யுனிவர்சிட்டி கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக சேர்ந்து முதல்வராகவும் உயர்ந்தார்.

1887-ல் ஓய்வு பெற்றார். 1913-ல், லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியில் சிறப்பு பேராசிரியராக பொறுப்பேற்றார்.

1880-ல் இருந்து அவர் தனது திறனை கரிம வேதியியல் துறையில் இருந்து உடல் வேதியியல் பிரிவுக்கு மாற்றினார்.

ராம்சே குயினைன் அல்கலாய்டுகளின் சிதைவு பொருட்கள் பற்றி ஆராய்ச்சி கட்டுரை எழுதி உள்ளார்.

1886-89 ஆண்டு காலத்தில் சிட்னி யங் என்பவருடன் இணைந்து ஆவியாதல் மற்றும் பிரிதல் பற்றிய ஆய்வு களை நடத்தினார்.

இதற்கிடையே நைட்ரஜனின் ஆக்சைடுகள் மற்றும் உன்னத வாயுக்கலவை பற்றிய கண்டுபிடிப்புகளையும் வெளியிட்டார்.

ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான் மற்றும் ரேடான் ஆகியவையே உன்னத வாயுக்கள் (நோபல்கேஸஸ்) எனப்படுகிறது. இவை நிறமற்றவை, மணமற்றவை, வளிமண்டலத்தில் காணப்படுபவை. இவை எளிதில் மற்றவற்றுடன் வினைபடுவதில்லை என்பதால் இவை சிறப்பு வாயுக்கள் எனப்படுகிறது. இவற்றை மந்த வாயுக்கள் என்றும் அழைப்பார்கள்.

ராம்சேவின் இந்த கண்டுபிடிப்பு வேதியியல் துறையில் அட்டவணைப்படுத்தப்படாமல் விடுபட்ட சில தனிமங்களை கண்டுபிடிக்க முக்கிய பங்கு வகித்தது. இதன் தொடர்ச்சியாக அவர் 1903-ல் ரேடியத்தில் இருந்து ஹீலியம் வெளிப்படுவதை கண்டுபிடித்தார். அவர் தனது கண்டுபிடிப்புகளுக்காக பல விருதுகள் பெற்றுள்ளார். மந்த வாயுக்களை பற்றிய கண்டுபிடிப்புக்காக அவர் 1904-ல் நோபல் பரிசும் பெற்றார். அவர் தனது நோபல் பரிசை லால் லாய்லெய்க் உடன் பகிர்ந்து கொண்டார்.

1916-ல் மூக்கு புற்றுநோயால் ஜூலை 23-ந்தேதி இறந்தார்.

No comments: