பொருளாதார அமைப்புகள்

இந்தியாவில் நிதித்துறை அமைச்சகம் நாட்டின் நிதிக் கொள்கையை முடிவு செய்கிறது.

பட்ஜெட் எனப்படும் ஆண்டு வரவு செலவு அறிக்கையே நாட்டின் நிதிக் கொள்கையை எடுத்துக்காட்டும் முக்கிய அம்சமாகும்.

பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் நிதி அமைச்சகம், முந்தைய நிதி ஆண்டின் பொருளாதார ஆய்வு அறிக்கையை வெளியிடுகிறது.

இந்தியாவின் பணக்கொள்கையை மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது.

நாட்டின் பணம் மற்றும் கடன் கொள்கையை 6 மாதத்துக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

ஐந்தாண்டு திட்ட உருவாக்கத்தில் ஆலோசனைகளை கூறுவது நிதி அயோக்கின் (முந்தைய திட்ட ஆணையம்) முக்கிய பணியாகும்.

ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி அங்கீகாரம் அளிக்கும் பொறுப்பு தேசிய வளர்ச்சிக் கவுன்சிலிடம் உள்ளது.

மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதி அளவை நிர்ணயிப்பது நிதி ஆணையமாகும்.

நிதி ஆணையம் என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் அமைப்பினைச் சார்ந்த நிறுவனம் ஆகும்.

நிதி அயோக் (திட்ட ஆணையம்) என்பது அரசியல் அமைப்பில் சொல்லப்படாத பாராளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்படாத அமைச்சரவை தீர்மானத்தால் மட்டும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

பிரதமருக்கு பொருளாதார பிரச்சினைகளில் அறிவுரை கூறும் பொருளாதார ஆலோசனை கவுன்சில் 2000-ல் உருவாக்கப்பட்ட மற்றொரு அமைப்பாகும்.

நாட்டின் முதலீடுகளை பற்றி முடிவு செய்ய முதலீட்டு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

நாட்டின் முக்கிய பொருளாதார கொள்கைகள் பிரச்சினைகள் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்கு அவ்வப்போது பொருளாதார சீர்திருத்த ஆலோசனைக் குழுக்கள், பொருளாதார வல்லுனர்கள் தலைமையில் அமைக்கப்படுகின்றன.

Comments