Saturday 22 December 2018

நடப்பு நிகழ்வுகள் 2018

  • சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகெல் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • நாட்டின் முதல் ரயில்வே பல்கலைக்கழகத்தை மத்திய அமைச்சகம் வதோராவில் அர்ப்பணித்தது.
  •  ஆந்திர கடற்கரையை தாக்கிய புயலின் பெயர் பெத்தாய் புயல்.
  • முஸ்லிம் மகளிர் சட்ட மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மக்களவையின் திருநங்கைகளின் உரிமைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டுக்கான  மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸின் கேட்ரியானா கிரே வெற்றி பெற்றார்.
  • ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றது ஜெர்மனி அணி.
  •  சீனாவில் நடைபெற்ற உலக பாட்மின்டன் டூர் பைனல்ஸ் கோப்பையை இந்தியாவின் பிவி சிந்து வென்றார்.
  • 37வது சீனியர் தேசியப் படகு போட்டி சாம்பியன்ஷிப் பூனேயில் ராணுவ படகோட்டும் முனையத்தில் துவங்க உள்ளது.
  • இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளிடையே அறிவுசார் சொத்து தலைப்பில் புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
  • இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சம்மேளனத்தின் உலகளாவிய கண்டுபிடிப்பு கொள்கை மற்றும் எஃப்சிசிஐ ஆகியவற்றுடன் கூட்டணி இணைந்து தொடங்கியது.
  • இதன் தொடர்ச்சியாக புதுடெல்லியில் மற்றும் வாசிங்டன் ஆகிய நகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் உரையாடல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 109வது ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் நிறைவேற்று குழு கூட்டம் மனாமா, பஹ்ரைனில் நடைபெற்றது.
  • 2018 ஆம் ஆண்டு இரண்டாவது கடற்படை தளபதிகள் மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது.
  • 2018 ஆம் ஆண்டு ஒடிசாவை சேர்ந்த ஜெர்சுகுடா விமானநிலையம் வீர் சுரேந்திர சாய் விமான நிலையம், ஜார்சுகுடா என்ற பெயர் மாற்றப்பட்டது.
  • சுற்றுலாத்துறை ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் தென்கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.
  • மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் தீனதயாள் உபாத்தியாயா கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் திறமை மேம்பாட்டுக்கான கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி தர அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
  • மகாராஷ்டிராவில் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமன் பற்றி எழுதிய டைம்லெஸ் லக்ஷ்மன் என்ற பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். மேலும் உஷா ஸ்ரீனிவாஸ் லக்ஷ்மன் இந்த புத்தகத்தை எழுதினார்.
  • இந்தியா இந்தோனேஷியா கடலோர காவல்படையின்  இரண்டாவது உயர்மட்டச்  சந்திப்பு புதுடெல்லியில் முடிவடைந்தது.
  • ஹரியானாவின் ஜஜ்ஜார் பகுதியின் இரண்டாயிரத்து 35 கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் மிகப்பெரியப் புற்றுநோய் மருத்துவமனைக் கட்டப்பட்டுள்ளது.
  • பொருளாதாரக் கூட்டு பேச்சுவார்த்தைத் தொடர்பாக ஏழாவது சுற்று இந்தியா தென்கொரியா இடையே நடைபெற்றது.
  • விவசாயிகளின் நலன் கருதி அடங்கல் பதிவேட்டினை மின்னணு அடங்கலாக மாற்றம் செய்யும் இ-அடங்கல் திட்டத்தை தமிழக அரசு 2018 அக்டோபர் 10ல் தொடங்கியது. இதன் மூலம் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
  • புரட்சித்தலைவி அம்மா பள்ளி கட்டடம் டெல்லியில் தமிழக கல்வி கழகத்தின் சார்பில் மயூர் விஹார் பள்ளி வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது. 
  • தமிழ் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டு தமிழ் கல்வித் துறையும் மலேசிய தமிழ் மணி மன்றமும் இணைந்து கடல்கடந்த தமிழர்களின் மரபுசார் அறிவு என்ற தலைப்பில் ஜனவரி 2018 மலேசியாவில் பன்னாட்டுப் பயிலரங்கம் நடத்த உள்ளது.
  • நாட்டிலேயே முதன்முறையாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய 18 என்ற விரைவு ரயில் இந்தியாவின் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.
  • தமிழ்நாட்டின் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு 2019 ஜனவரி மாதம் 23, 24 தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை 2019 பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கொண்டுவர வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு.
  • ஆபத்து காலங்களில் பெண்களின் அவசர பாதுகாப்பிற்காக ரௌத்திரம் என்னும் மொபைல் செயலியை சென்னையை சேர்ந்த சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவி சுதாகர் ரெட்டி உருவாக்கியுள்ளார். இதன்மூலம் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளபோது மொபைல் போனின்  பவர் பட்டனை மூன்று முறை அழுத்தினால் இருக்கும் இடத்தினை துல்லியமான முகவரியுடன் காவல் நிலையத்திற்கு மற்றும் மின்னஞ்சல் மூலம் அறிவிக்க முடியும்.
  • 2017 தமிழகத்தில் 3,507 பேர் விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் சாலை விபத்தில் மரணமடைந்த பாதசாரிகள் அவர்கள். மேலும் இதுதொடர்பான புள்ளிவிவரத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கின்றது.
  • ஐந்தாவது இந்திய பெண்கள் தேசிய இயற்கை விவசாய திருவிழா அக்டோபர் 26, 2018 டெல்லியில் நடைபெற்றது தொடங்கி நடத்தப்பட்டது.
  • ஆறாவது இந்திய சர்வதேச பட்டு கண்காட்சி அக்டோபர் 16, 2018 புதுடெல்லியில் தொடங்கி நடத்தப்பட்டது.
  • இந்தியாவில் நாய்களுக்கான பூங்கா ஹைதராபாத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் உலகின் பல வகையான நாய்களை கண்காட்சியாக காணவும் வாங்கிச் சென்று வளர்க்கவும் முடியும். இதற்கான பயிற்சி மற்றும் தேவையான உபகரணங்களும் வழங்கப்படுகின்றன.
  • அலகாபாத் நகரின் பெயரை  பிராயாக்ராஜ் என்ற மாற்றும் திட்டத்தை அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ஹைவே நெஸ்ட், ஹைவே நெஸ்ட் மினி, ஹைவே வில்லேஜ் போன்ற திட்டங்கள் மூலம் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு தரமான வசதிகளை செய்து தர வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • சுய உதவி குழுக்கள் மூலம் கிராமப்புற ஏழை பெண்களை ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்வை மேம்படுத்த அனந்ததாரா என்ற திட்டத்தினை மேற்கு வங்க மாநில அரசு 2012 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்றது.
  • பசு சஞ்சீவி சேவா என்ற திட்டத்தின் மூலம் நடமாடும் கால்நடை இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை ஹரியானா அரசு தொடங்கியது.

No comments: