மின் காப்பு பொருட்கள்

மின் உருகி (பியூஸ்) என்பது அளவுக்கு அதிகமான மின்னோட்டம் மின்சுற்றில் பாயும்போது, தான் உருகி மின்சுற்றை முறித்து விடுவதால் மின் விபத்தை தடுக்க உதவுகிறது. மின் உருகிகளை அவற்றின் வோல்ட் அளவுக்கு ஏற்றாற்போல பயன்படுத்த வேண்டும். 250 வோல்ட் மின் உருகிகளை 125 வோல்ட் மின்சுற்றுகளில் பயன்படுத்தலாம். ஆனால் 125 வோல்ட் மின் உருகிகளை 250 வோல்ட் மின்சுற்றில் பயன்படுத்தக் கூடாது.

மின் உருகிக்குப் பதில் தற்போது மினி சர்க்கியூட் பிரேக்கர் எனப்படும் எம்.சி.பி.களும், ரப்சர்டு கரண்ட் டிவைஸ் எனப்படும் ஆர்.சி.டி.களும் பயன்படுத்தப்படுகின்றன. எம்.சி.பி. மின் உருகியைப்போல லைவ் ஒயருடன் இணைக்கப்படுகிறது. மின் உருகி ஒவ்வொரு சமயமும் உருகும்போது அதை மாற்ற வேண்டும். ஆனால் எம்.சி.பி. அதிக மின்னோட்டம் பாயும்போது மின்சுற்றை ஆட்டோமேட்டிக் சுவிட்ச்ஆப் செய்து காப்பதால் மீண்டும் சுட்ச் ஆன் செய்தால் போதும்.

ஆர்.சி.டி. எனப்படும் எர்த்த லீக்கேஸ் சர்க்கியூட் பிரேக்கர் லைவ் மற்றும் எர்த் ஒயர்களோடு இணைக்கப்படுவதால் எந்த லைனில் பிரச்சினை என்பதையும் கண்டறிய உதவுகிறது.

Comments