Monday 12 November 2018

நிகண்டுகள்,

சமணர்கள் தமிழுக்கு அளித்த கொடை நிகண்டுகள். சொற்தொகுதிகளாகவும், களஞ்சியங்களாகவும் நிகண்டுகள் திகழ்கின்றன. திவாகர நிகண்டில் பன்னிரு பெயர் தொகுதிகள் உள்ளன. அவை தெய்வம், மக்கள், விலங்கு, மரம், இடம், பல்பொருள், செயற்கை வடிவம், பண்பு, செயல், ஒலி, ஒரு சொல் பல்பொருள், பல்பொருள் கூட்டம் என்பன. திவாகர நிகண்டை தொகுத்தவர் திவாகரர், இவரைஆதரித்தவர் சேந்தன். எனவே இது ‘சேந்தன் திவாகரம’் என்றும் அழைக்கப்படுகிறது. 9500 சொற்களுக்கு இது பொருள் உரைக்கிறது. ‘இனிமையும், நீர்மையும் தமிழெனலாகும்’ என்று பிங்கல நிகண்டில் தமிழுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. பிங்கல முனிவர் இயக்கிய பிங்கல நிகண்டு 15 ஆயிரத்து 791 சொற்கள் கொண்டது, காங்கேயர் எழுதிய உரிச்சொல் நிகண்டு 3 ஆயிரத்து 200 சொற்கள் கொண்டது. மண்டல புருடர் எழுதிய சூடாமணி நிகண்டு 11 ஆயிரம் சொற்கள் கொண்டது.

No comments: