Monday 27 August 2018

உலோக தாதுக்கள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

நாம் பயன்படுத்தும் தங்கம் உள்ளிட்ட எந்த உலோகமும், அப்படியே உலோகமாக பூமியில் இருந்து எடுக்கப்படுவதில்லை. உலோகத்தாதுக்களாக மற்ற சில பொருட்களுடன் கலந்தே அவை கிடைக்கின்றன. அதிலிருந்து பிரித்து தேவையான உலோகத்தை பயன்படுத்துகிறோம். அப்படி சில முக்கிய உலோகங்களை தரும் உலோகத் தாதுக்கள் பற்றி அறிவோம்...

வெள்ளி ஹார்ன்சில்வர்் மற்றும் குளேரா கைரைட் உலோகத்தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

தாமிரம் - தாமிர பைரைட் என்ற தாதுவிலிருந்து கிடைக்கிறது.

மைக்கா உலோகம், மஸ்கோவைட் என்ற உலோகத்தாதுவிலிருந்து கிடைக்கிறது.

இரும்பானது ேஹமடைட், மேக்னடைட், இரும்பு பைரட் போன்ற தாதுக்களிலிருந்து கிடைக்கிறது.

மக்னீசியம் கமலைட் மற்றும் டோலமைட், மேக்னஸைட் உலோகத்தாதுக்களிலிருந்து கிடைக்கிறது.

பாதரசம் - சின்னபார் தாதுவிலிருந்து பிரிக்கப்படுகிறது.

லைம்ஸ்டோன் தாதுவிலிருந்து கால்சியம் பிரிக்கப்படுகிறது.

பாறை உப்பிலிருந்து சோடியம் தாது கிடைக்கிறது.

ஜிப்சம் என்பது கால்சியத்தின் சல்பேட் தாது.

No comments: