Friday 22 December 2017

பொது அறிவு - கடற்படை தினம்


பொது அறிவு சோதனை

1) கிரேக்கம் மற்றும் ரோமன் புராணங்களில் 'ஜூனோ' எனப்படுபவர் யார்?

2) பூமியில் இருந்து ஜூபிடர் கிரகத்திற்கு செயற்கைகோள் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இது சூரிய ஒளியில் இயங்க கூடியது. இது சுமார் 2.8 பில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ஜூபிடர் கிரகத்தை அடைந்தது. இதுவே முதன்முதலில் விண்வெளியில் இவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்த செயற்கைகோள் ஆகும். அதன் பெயர் என்ன?

3) மனித உடலில் உள்ள பெரிய எலும்புகளில் இரண்டாவது பெரிய எலும்பு எது?

4) கண்களின் விழித்திரையில் உள்ள 'ராட்' செல்கள் குறைந்த வெளிச்சத்திலும் பார்க்க உதவுகிறது. இது சரியா? தவறா?

5) பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை அடைத்து வைக்க வெள்ளயம் அல்லது தகரம் எனப்படும் உலோகத்தில் தயாரிக்கப்பட்ட பெட்டிகள் அல்லது பாத்திரங்களை பயன்படுத்துவது ஏன்?

6) கீழே குறிப்பிட்டுள்ள எந்த நகரத்தின் அருகே தவுலதாபாத் அரண்மனை அமைந்துள்ளது?.

அ) அகமதாபாத், ஆ) அலகாபாத், இ) அவுரங்காபாத்

7) 'லோனார் கிராமம்' எனப்படும் உப்பு நீர் குட்டைகள், குளங்கள் அதிக அளவில் அமைந்த கிராமம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

8) உடல் ஊனமுற்றோர்களுக்காக நடத்தப்படும் பாரா ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலில் பதக்கம் வென்ற இந்தியப்பெண் யார்?

9) டிசம்பர் 4-ந் தேதி கடற்படை தினம் கொண்டாப்படுகிறது. அது ஏன்?

10) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி போர்க்கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்த். இது நாட்டுக்கு எப்போது அர்ப் பணிக்கப்பட்டது?

விடைகள்:-

1) கிரேக்க புராணத்தில் வரும் ஜூபிடர் கடவுளின் மனைவியின் பெயர் ஜூனோ என்பதாகும்.

2) ஜூனோ விண்கலம். இது 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி இந்த விண்கலம் ஜூபிடர் கிரகத்தை அடைந்தது.

3) தாடை எலும்பு. இது ஆங்கிலத்தில் 'டிபியா போன்' என்று அழைக்கப்படுகிறது.

4) சரி, கண்களின் விழித்திரையில் இருக்கும் ராட் செல்கள் மூலம் குறைந்த வெளிச்சத்திலும் நம்மால் பார்க்க முடியும்.

5) வெள்ளயம் அல்லது 'டின்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தனிமத்தில் தயாரான டப்பாக்கள் எளிதில் துருப்பிடிப்பதில்லை. எனவே தான் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் அதில் அடைத்து விற்கப்படுகிறது.

6) அவுரங்காபாத் அருகே தவுலதாபாத் கோட்டை உள்ளது.

7) மராட்டிய மாநிலத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் இந்த லோனார் கிராமம் அமைந்துள்ளது.

8) தீபா மாலிக், இவர் இந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக்போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார்.

9) 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 4-ந் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

10) 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்.
Tag: 8) Deepa Malik, who won silver in the bombing at the Pala Olympics in Rio de Janeiro this year. He was also the first Indian woman to win the first Olympic champion. 9) Naval Day is celebrated on December 4, commemorating India's victory in the Indo-Pakistani War of 1971. 10) In August 2013