Tuesday 25 September 2018

உலக வரலாற்றில் இன்று ( 24.09.2018 )

செப்டம்பர் 24 (September 24) கிரிகோரியன் ஆண்டின் 267 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 268 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 98 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

622 – முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்தார் (ஹிஜ்ரா).
1664 – நெதர்லாந்து நியூ ஆம்ஸ்டர்டாமை இங்கிலாந்துக்குக் கொடுத்தது.
1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது.
1789 – அமெரிக்க உச்சநீதி மன்றம் நிறுவப்பட்டது.
1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
1840 – இலங்கை வங்கி அமைக்கப்பட்டது.
1841 – புருணை சுல்தான் சரவாக் மாநிலத்தை பிரித்தானியாவுக்குக் கொடுத்தான்.
1869 – கறுப்பு வெள்ளி: ஜேய் கூல்ட், ஜேம்ஸ் பிஸ்க் என்ற இரு செல்வந்தர்களின் சூழ்ச்சியை முறியடிக்க அமெரிக்கா பெருமளவு தங்கத்தை விற்பனைக்கு விட்டதில், தங்க விலை சரிந்தது.
1898 – யாழ்ப்பாணம், இணுவிலில் பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனையை அமெரிக்க மிசன் அமைத்தது.
1906 – வயோமிங்கில் உள்ள பேய்க் கோபுரம் அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
1948 – ஹொண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது.
1968 – சுவாசிலாந்து ஐநாவில் இணைந்தது.
1973 – கினி-பிசாவு போர்த்துக்கலிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1979 – உலகின் முதலாவது மின்னஞ்சல் சேவையை கம்பியூசேர்வ் ஆரம்பித்தது.
1990 – சனிக் கோளில் பெரும் வெண் புள்ளி ஒன்று தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டது.

பிறப்புக்கள்

1902 – ருஹொல்லா கொமெய்னி, ஈரானிய அரசியல்வாதி (இ. 1989)
1936 – சிவந்தி ஆதித்தன் தினத்தந்தி உரிமையாளர் (இ. 2013)

இறப்புகள்

2006 – பத்மினி, தென்னிந்திய நடிகை (பி. 1932)
2009 – நாத்திகம் இராமசாமி, இதழாசிரியர், பகுத்தறிவாளர் (பி. 1932)

சிறப்பு நாள்

கினி பிசாவு – விடுதலை நாள் (1973)
ட்றினிடாட் மற்றும் டொபாகோ – குடியரசு நாள் (1976)

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சைபர் பல்கலைக்கழகம் தொடக்கம்

மகாராஷ்ட்ர இணையத் தாக்குதல்களைக் கையாள்வதற்காகப் புதிய சைபர் பல்கலைக்கழகம் தொடங்கப்படவிருப்பதாக மாநில அரசு தெரிவித்திருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகம் இணையத் தாக்குதல்கள், குற்றங்கள் போன்றவற்றைக் கையாள்வதற்காக முதற்கட்டமாக 3,000 பேருக்குப் பயிற்சி அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்கான முன்மொழிவு வரும் அக்டோபர் முதல்வாரத்தில் மாநில அமைச்சரவை முன் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக முதற்கட்டமாக ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இஸ்ரோவின் 18 திட்டங்கள்

இஸ்ரோ அடுத்த ஆறு மாதங்களில் பதினெட்டுத் திட்டங்களை நிறைவேற்றவிருப்பதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் செப்டம்பர் 16 அன்று தெரிவித்தார். இரண்டு வாரங்களுக்கு ஒரு திட்டம் வீதம் ஆறு மாதங்களில் 18 திட்டங்களை நிறைவேற்றத் திட்டமிட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த செயற்கைக்கோள் நிறுவனத்தின் பூமியைக் கவனிக்கும் நோவாஎஸ்ஏஆர் (NovaSAR), எஸ்1-4 என்ற இரண்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி.-சி42 ஏவுகணையில் செப்டம்பர் 16 அன்று இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. வரும் ஆறு மாதங்களில், ஜிசாட்-11, சந்திரயான்-2 போன்ற முக்கியத் திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி இருக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சட்டப்படி முத்தலாக் குற்றம்

முத்தலாக் சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை செப்டம்பர் 19 அன்று ஒப்புதல் வழங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் வழங்கினார். இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, எந்தவித முன்னறிவிப்புமின்றி முத்தலாக் வழங்கினால், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்க முடியும். 2017 ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் முத்தலாக்குக்குத் தடைவிதித்ததிலிருந்து நாடு முழுவதும் இதுதொடர்பாக 201 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகச் சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குழந்தை இறப்பில் இந்தியா முதலிடம்

இந்தியாவில் இரண்டு நிமிடங்களுக்கு மூன்று குழந்தைகள் இறப்பதாக ஐ.நா.வின் குழந்தை இறப்பு மதிப்பீட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழு (UNIGME) செப்டம்பர் 18 அன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. 2017-ம் ஆண்டில் இந்தியாவில் 8,02,000 குழந்தைகள் இறந்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளைவிடக் குறைவு என்றாலும், குழந்தை இறப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதில் இரண்டாவது இடத்தில் நைஜீரியாவும் (4,66,000 குழந்தை இறப்புகள்), மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும் (3,30,000 குழந்தை இறப்புகள்) இருக்கின்றன. போதுமான சுகாதார, தண்ணீர், ஊட்டச்சத்து வசதிகள் கிடைக்காததே குழந்தை இறப்புகளுக்குக் காரணம் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

22 லட்சம் வழக்குகள் தேக்கம்

நாட்டின் கீழ் நீதிமன்றங்களில் பத்தாண்டுகள் பழமைவாய்ந்த 22,90,364 வழக்குகள் தேங்கியிருப்பதாக ‘நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்’ அமைப்பு செப்டம்பர் 17 அன்று வெளியிட்ட தரவுகளில் தெரிவித்திருக்கிறது. கீழ் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளில் 5.97 லட்சம் சிவில் வழக்குகளாகவும் 16.92 லட்சம் குற்ற வழக்குகளாகவும் இருக்கின்றன. தேங்கியிருக்கும் வழக்குகளைப் பற்றிய தரவுகளைத் தெரிந்துகொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் மின்-குழு ‘நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்’ அமைப்பைத் தொடங்கியது. 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தேங்கி இருக்கும் வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாட்டின் 24 உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மூன்று வங்கிகள் இணைப்பு?

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளை ஒன்றாக இணைக்கலாம் என்று மத்திய அரசு செப்டம்பர் 17 அன்று ஆலோசனை வழங்கியிருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி வங்கிகளை ஒன்றாக இணைப்பதில், இரண்டு வலிமையான வங்கிகள், ஒரு வலுவற்ற வங்கி என்ற முறையில் இணைக்கத் திட்டமிட்டிருப்பதாக ஜெட்லி தெரிவித்திருக்கிறார். நிலைத்தன்மையுடைய வங்கிகளை உருவாக்குவதற்காக இந்த முயற்சி எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

27 கோடிப் பேர் வறுமையிலிருந்து மீட்பு

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் 27 கோடிப் பேர் வறுமையிலிருந்து மீண்டிருப்பதாக செப்டம்பர் 20 அன்று ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2018-ம் ஆண்டுக்கான ‘பலபரிமாண வறுமை குறியீடு’ (MPI) அறிக்கை வெளியானது. 2005-6-ம் ஆண்டுகளிலிருந்து 2015-16-ம் ஆண்டுகள்வரை, இந்தியாவில் 27 கோடிப் பேர் வறுமையிலிருந்து மீண்டுவந்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் வறுமை 55 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாகக் குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் பலபரிமாண வறுமையில் வாடுவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17 அன்று எழுதிய கடிதத்தில் முன்வைத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்ற இந்தியா, இருநாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜும், மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷியும் நியூ யார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் சந்தித்து பேசுவதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கஷ்மீரின் காவல்துறை அதிகாரிகள் மூன்று பேரை ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பினர் செப்டம்பர் 21 அன்று கடத்தி கொலைசெய்தனர். இதனால் பாகிஸ்தானுடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை சுஷ்மா ஸ்வராஜ் ரத்து செய்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை இரண்டு சதவீதம் உயர்த்துவதாகத் தமிழக அரசு செப்டம்பர் 17 அன்று அறிவித்தது. இதன்மூலம், ஏழு சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது ஒன்பது சதவீதமாகியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, 2018, ஜூலை 1 முதல் கணக்கிடப்படும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இந்த அகவிலைப்படி உயர்வால், 18 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வின் காரணமாக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 1,157 கோடி கூடுதலாகச் செலவாகும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 24 September 2018

நீர் அறிந்ததும்... அறியாததும்...

நீரின் அடர்த்தி 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அதிகமாக இருக்கும்.

நீரின் பருமன் 4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் குறைவாக இருக்கும்.

4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கீழ் குளிர வைக்கும்போது நீரின் பருமன் அதிகரிக்கும்.

நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் 537 கலோரி.

நீர் உருகுதலின் உள்ளுறை வெப்பம் 79.7 கலோரி.

ஒரு கிராம் நீர் 100 டிகிரி செல்சியசில் நீராவியாகத் தேவையான வெப்பமே நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம்.

ஒரு கிராம் பனிக்கட்டி 0 டிகிரி செல்சியலில் நீராவதற்குப் தேவையான வெப்பமே நீர் உருகுதலின் உள்ளுறை வெப்பம்.

இட்லி விரைவாக வேகக் காரணம் நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம்.

கொதிநீர் ஏற்படுத்தும் காயத்தைவிட நீராவி காயம் தீவிரமாக இருக்க காரணம் நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம்.

ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்ட பானத்தின் குளிர்ச்சிக்கு காரணம் நீர் உருகுதலின் உள்ளுறை வெப்பம்.

ஒரு வளிமண்டல அழுத்தத்தில் நீரின் உறைநிலை 0 டிகிரி செல்சியஸ் அல்லது 32 டிகிரி பாரன்ஹீட் அல்லது 273 கெல்வின்.

ஆக்சிஜன் ஹைட்ரைடு அல்லது ஹைட்ரஜன் ஆக்சைடு என்பதே நீரின் அறிவியல் பெயர்.

நீரில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் எடை இயைபு = 1:8

நீரில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் கன அளவு இயைபு = 1:2

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஊரறிந்த ரகசியங்கள்

கட்டபொம்மனின் கோட்டை

தமிழகத்தின் சில ஊர்கள் வரலாற்று ரகசியங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. சில ஊர்கள் குறிப்பிட்ட சிறப்பம்சங்களுக்காக புகழ்பெற்று விளங்குகின்றன. அவை பற்றி அறிவோம்...

நாயக்கர் கால சிற்பங்கள் உள்ள ஊர் - கிருஷ்ணாபுரம்.

சோழர்கால நிர்வாகம் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்த ஊர் - உத்திரமேரூர்.

பல்லவர் கால இசைக்கலை பற்றிய கல்வெட்டுகள் கிடைத்த ஊர் - குடுமியான் மலை.

ரோமாபுரி நாணயங்கள் கிடைத்த ஊர் - அரிக்கமேடு.

சங்ககாலம் குறித்த செப்பேடுகள் கிடைத்த ஊர் - சின்னமனூர்.

தென்னாட்டு ஸ்பா என அழைக்கப்படும் ஊர் - குற்றாலம்.

தென்னாட்டு ஆக்ஸ்போர்டு எனப்படுவது - பாளையங்கோட்டை.

வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டை உள்ள ஊர் - பாஞ்சாலங்குறிச்சி.

தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி.

மஞ்சள் சந்தை அமைந்துள்ள ஊர் - ஈரோடு.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் -கோயம்புத்தூர்.

குட்டி ஜப்பான் என்றழைக்கப்படுவது -சிவகாசி.

கிழக்கின் டிராய் எனப்படுவது - செஞ்சி.

லாரிகளுக்கு புகழ்பெற்ற ஊர் - நாமக்கல்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ் பா வகைகள்

தமிழ் பாக்கள், 4 வகைப்படும்

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை நால்வகை பாக்களாகும்.

வெண்பா செப்பலோசையில் பாடப்படும்.

ஆசிரியப்பா அகவலோசையில் பாடப்படும்.

கலிப்பா துள்ளல் ஓசையில் பாடப்படும்.

வஞ்சிப்பா தூங்கல் ஓசையில் பாடப்படும்.

சங்க இலக்கியங்கள் பெரும்பாலும், ஆசிரியப்பாவிலும் நீதி நூல்கள் வெண்பாவிலும் பாடப்பெற்றுள்ளன.

சங்க இலக்கியமான கலித்தொகை, கலிப்பாவிலும், பட்டினப்பாலை வஞ்சிப்பாவிலும் பாடப்பட்டுள்ளது.

துறை, தாழிசை, விருத்தம் என்பன பாவின் மூன்று இனங்களாகும்.

சிற்றிலக்கியங்களில் ஒன்றான தூது கட்டளை கலித்துறையிலும், பரணி தாழிசையிலும் பாடப்பட்டுள்ளது.

விருத்தப்பாவில் பாடப்பட்ட முதல் தமிழ்க்காப்பியம் சீவகசிந்தாமணி.

வெண்பா பாடுவதில் புகழேந்தி புலவரும், விருத்தப்பாவில் கம்பரும் சிறப்புற்று விளங்கினார்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு குவியல்

1. தகவல் அறியும் உரிமையை அமல்படுத்திய முதல் நாடு எது?

2. தமிழில் எழுதப்பட்ட முதல் அறிவியல் நாவல் எது?

3. சைவ ஆகமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

4. மேலாண்மை குரு என வர்ணிக்கப்படும் எழுத்தாளர் யார்?

5. மனித உரிமை தினம் எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது?

6. சி.எல்.ஆர்.ஐ.யின் விரிவாக்கம் என்ன?

7. காவிரி- கொள்ளிடம் நடுவே தீவாக அமைந்துள்ள ஊர் எது?

8. ஹெர்ரிங் குளம் என அழைக்கப்படுவது எது?

9. தமிழ் இலக்கிய வரலாற்றை முதல் முதலில் எழுதியவர் யார்?

10. யவன ராணி வரலாற்று நாவலின் ஆசிரியர் யார்?

11. தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்பெயர் என்ன?

12. குருசரண்சிங் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

13. இளங்கோவடிகள் எந்த மன்னனின் சகோதரர் ஆவார்?

14. தொராப்பள்ளியில் பிறந்த புகழ்பெற்ற பிரபலம் யார்?

15. ‘நெலும்போ நூஸிபெரா’ என்பது எதன் அறிவியல் பெயர்?

விடைகள்

1. சுவீடன், 2. சொர்க்கத்தீவு, 3. 28, 4. கென்னத் பிளான் சர்ட், 5. டிசம்பர் 10, 6. சென்ட்ரல் லெதர்ரிசர்ச் இன்ஸ்டிடியூட், 7. ஸ்ரீரங்கம், 8. அட்லாண்டிக் கடல், 9. கா.சு.பிள்ளை, 10. சாண்டில்யன், 11. விப்ரநாராயணன், 12. குத்துச்சண்டை, 13. சேரன் செங்குட்டுவன், 14. ராஜாஜி, 15. தாமரை.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 22 September 2018

CURRENT AFFAIRS - 2018 SEPTEMBER 8 - 14


கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday 18 September 2018

CURRENT AFFAIRS - SEP 2018

பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து 6 சதவீதமும் டீசல் விலை 8 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. மும்பையில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.89.01-க்கும் டீசல் ரூ.78.07-க்கும் செப்டம்பர் 15 அன்று விற்பனை செய்யப்பட்டது. இந்தியா 80 சதவீதக் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், எரிபொருள் இறக்குமதிக்கான விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது.

மாறிய பிளஸ் 2 மதிப்பெண்
தமிழ்நாட்டில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் அறிவித்ததுபோல் நடைபெற்றாலும், உயர்கல்விக்கு 11-ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று மாநிலக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செப்டம்பர் 15 அன்று தெரிவித்தார். உயர்கல்விக்குப் பன்னிரண்டாம் வகுப்பின் மொத்த மதிப்பெண்களான 600 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை?
தமிழ்நாட்டின் நிலக்கரி இருப்புக் கடுமையாகக் குறைந்திருப்பதால், உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு நிலக்கரி ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு செப்டம்பர் 14 அன்று கடிதம் எழுதினார். தமிழ்நாட்டின் தினசரித் தேவையான 72,000 டன் நிலக்கரியை உடனடியாக வழங்குவதற்கு மத்திய நிலக்கரி, ரயில்வே அமைச்சகத்துக்கு பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்று பழனிச்சாமி கடிதத்தில் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

விஞ்ஞானிக்கு இழப்பீடு
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், 1994 உளவு வழக்கில் கேரளக் காவல் துறையால் தேவையில்லாமல் கைது செய்யப்பட்டுக் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 14 அன்று தெரிவித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, எட்டு வாரக் காலத்துக்குள் கேரள மாநில அரசு நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடாகத் தர உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஏன் நம்பி நாராயணன் மீது குற்றம்சாட்டப்பட்டது என்று விசாரிக்க முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான மூவர் குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது.

மனித வளர்ச்சிப் பட்டியல்: 130-வது இடம்
உலக அளவில் 189 நாடுகள் இடம்பெற்ற மனித வளர்ச்சிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 130-வது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் (UNDP) செப்டம்பர் 14 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2016-ம் ஆண்டில் மனித வளர்ச்சிக் குறியீட்டில் (Human Development Index) 0.624 ஆக இருந்த இந்தியாவின் மதிப்பு, 2017-ம் ஆண்டில் 0.640 ஆக உயர்ந்தது. இந்தியாவில் சுகாதாரம், கல்வி, வருமானம் போன்ற அம்சங்கள் கடந்த சில பத்தாண்டுகளில் உயர்ந்ததன் காரணமாக இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் நார்வே முதல் இடத்திலும் ஸ்விட்சர்லாந்து இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

ஒடுக்கப்படும் மனித உரிமை குழுக்கள்
இந்தியா, சீனா, ரஷ்யா, மியான்மர் போன்ற நாடுகள் மனித உரிமைக் குழுக்களையும் செயல்பாட்டாளர்களையும் கடுமையாக ஒடுக்குவதாக செப்டம்பர் 12 அன்று வெளியான ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுப்பவர்கள் கொலை, சித்திரவதை, தன்னிச்சையான கைது போன்றவற்றால் பாதிக்கப்படுவதாக ஐ.நா. பொதுச் செயலாளரின் ஒன்பதாவது ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. சட்ட, அரசியல், நிர்வாகத் தடைகள் விதிக்கப்பட்டு மனித உரிமைப் பாதுகாவலர்கள் மிரட்டப்படுகின்றனர் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.

அதிகரிக்கும் தற்கொலைகள்
2016-ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த 37 சதவீதப் பெண்களும் 24 சதவீத ஆண்களும் தற்கொலை மரணங்களால் இறந்திருப்பது செப்டம்பர் 12 அன்று வெளியான ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ‘குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் 1990-2016’ என்ற தலைப்பில் லான்செட் மருத்துவ இதழில் வெளியான இந்த முடிவில், இந்தியாவில் நடைபெற்ற தற்கொலை மரணங்களில் 63 சதவீதம் 15-39 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆண்கள், பெண்கள் என இருபாலினரிடமும் தற்கொலைகள் அதிகமாக ஏற்படுகின்றன.

எச்.ஐ.வி. எய்ட்ஸ் சட்டம்
மத்திய சுகாதார, குடும்பநலத் துறை அமைச்சகம், எச்.ஐ.வி. எய்ட்ஸ் (தடுப்பு, கட்டுப்பாடு) சட்டம் (2017) செப்டம்பர் 10 முதல் நாட்டில் அமலுக்குவந்ததாக அறிவித்தது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு எதிரான பாகுபாடு சட்டப்படி குற்றம் என்ற இந்த மசோதாவை மாநிலங்களவை மார்ச் மாதம் நிறைவேற்றியது. தற்போது, இந்தச் சட்டம் அமலுக்கு வந்திருப்பதால் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு, சுகாதாரச் சேவைகள், கல்வி, பொதுச் சேவைகள், சொத்து உரிமைகள், காப்பீடு சேவைகள் போன்றவற்றை மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.

புதிய வடிவமைப்பு நிறுவனங்கள்
நாட்டில் புதிதாக நான்கு தேசிய வடிவமைப்பு நிறுவனங்கள் அமைப்பதற்காக ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன்’ சட்டத்திருத்த (2014) மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை செப்டம்பர் 12 அன்று ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம், ஆந்திராவில் அமராவதி, மத்தியப் பிரதேசத்தில் போபால், அசாமில் ஸோர்ஹாட், ஹரியாணாவில் குருக்ஷேத்ரா ஆகிய நான்கு நகரங்களில் தேசிய வடிவமைப்பு நிறுவனங்கள் தொடங்கப்படவிருக்கின்றன. அகமதாபாத்தில் 1961-ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தைப் போன்று புதிதாக ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கலப்பு மருந்துகளுக்குத் தடை
உடல்நலத்தைப் பாதிக்கும் அம்சங்கள் இருக்கக்கூடிய 328 கலப்பு மருந்துகளுக்கு (Fixed Dose Combinations) ‘மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரிய’த்தின் (DTAB) அறிவுரைப்படி, மத்திய சுகாதார அமைச்சகம் செப்டம்பர் 12 அன்று தடைவிதித்தது. மருந்துகள், ஒப்பனைப் பொருட்கள் சட்டத்தின் 26 A பிரிவின்படி, 2017-ம் ஆண்டில் 344 கலப்பு மருந்துகள் தடைசெய்யப்பட்டன. இதை எதிர்த்து மருந்து உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கில், ‘மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரிய’த்தை மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், தற்போது 328 கலப்பு மருந்துகளுக்குத் தடைவிதிக்குமாறு மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 17 September 2018

பிரபலங்களின் இதழ்கள்

பிரபலங்கள் பலர் நடத்திய தமிழ் இதழ்களை அறிவோம்...

தேசபக்தன், நவசக்தி - திரு.வி.க.

குயில் - பாரதிதாசன்

சுதேசமித்ரன் - ஜி.சுப்பிரமணிய ஐயர்

பாலபாரதி - வ.வே.சு.ஐயர்

ஞானபோதினி - சுப்பிரமணிய சிவா

இந்தியா, விஜயா - சுப்பிரமணிய பாரதி

தமிழ்நாடு - வரதராஜுலு நாயுடு

மணிக்கொடி - பி.எஸ்.ராமையா

எழுத்து - சி.சு.செல்லப்பா

குடியரசு, விடுதலை - பெரியார்

திராவிட நாடு - அண்ணா

தென்றல் - கண்ணதாசன்

சாவி - சா.விஸ்வநாதன்

கல்கி - ரா.கிருஷ்ணமூர்த்தி

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அன்றாட நிகழ்வுகளும்... அறிவியல் விளக்கமும்...

வானவில் ஏற்பட காரணம் ஒளிப்பிரிகை.

வானம் நீலமாகத் தெரிய காரணம் அலை நீளம் குறைந்த நீல நிறம் காற்றின் மூலக்கூறுகளால் அதிகம் சிதறடிக்கப்படுகிறது.

தொடுவானம் சிவப்பாக தெரியக்காரணம், அலை நீளம் அதிகமுள்ள சிவப்பைத் தவிர பிற நிறங்கள் அனைத்தும் சிதறடிக்கப்படுகிறது.

நீரில் மூழ்கியுள்ள குச்சி வளைந்தது போல ெதரியக் காரணம் ஒளிவிலகல்.

வானில் நட்சத்திரங்கள் மின்னக் காரணம், ஒளி விலகல்.

வைரம் மின்னுவதற்கும், கானல் நீர் தெரிவதற்கும் காரணம், முழு அக எதி ரொளிப்பு.

சோப்பு நுரையில் பல வண்ணங்கள் தெரியக் காரணம், ஒளியின் குறுக்கீடு விளைவு.

கண்ணாடி ஒளி இழைகளில் முழு அக எதிரொளிப்பு அதிகம் உள்ளதால் அவை தகவல் தொழில்நுட்பத்தில் பயன்படுகின்றன.

ஒற்றை நிற ஒளிக்கற்றைகளை உருவாக்கப் பயன்படுவது லேசர்.

போலராய்டு காமராவின் செயல்பாட்டுத் தத்துவம் ஒளியின் தள விளைவு.

மின்னலுக்குப் பின் இடியோசை கேட்க காரணம் ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகம் அதிகம்.

பாராசூட் புவி ஈர்ப்புவிசைக்கு எதிராக செயல்படுவதாலேயே பாரசூட்டில் மெதுவாக தரையிறங்க முடிகிறது.

ஆற்றுநீரைவிட கடல் நீரில் அடர்த்தி அதிகம் இருப்பதால் கடலில் எளிதாக நீந்த முடிகிறது.

சுடுநீர் ஊற்றப்பட்ட கண்ணாடி டம்ளரின் உள் வெளி அடுக்குகள் வெவ்வேறு வேகத்தில் விரிவடைவதால் அது விரிசல் அடைகிறது.

சிவப்பு நிற ஒளிக்கு அலைநீளம் அதிகம் இருப்பதால் அது போக்குவரத்து சிக்னலில் பயன்படுகிறது.

சூரிய ஒளியில் 7 நிறங்கள் இருப்பதை கண்டறிந்தவர் ஐசக் நியூட்டன்.

ஒளிச்சிதறல் பற்றிய சர் சி.வி.ராமனின் கண்டுபிடிப்புக்கு ராமன் விளைவு என்று பெயர்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளாஸ்டிக்கிற்கு தடை

தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பொது இடங்கள், வணிக நிறுவனங்களிலும் இந்த தடை அமலுக்கு வர உள்ளது. இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறை, செப்டம்பர் 15 முதலே பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக்கை தடை செய்ய உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அது பற்றிய அறிவிப்பு பலகையையும் பள்ளி வளாகத்தில் வைக்க அறிவுறுத்தி உள்ளனர்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வினா வங்கி

1. அலுமினியம், மக்னீசியம், மாங்கனீஸ் உலோக கலவை எப்படி அழைக்கப்படுகிறது?

2. குடவோலை முறை பற்றிய செய்தி எதில் குறிப்பிடப்பட்டுள்ளது?

3. வை-பை மற்றும் வை-மேக்ஸ் இவற்றில் தரவுகளை அதிவேகத்தில் பரிமாற்றம் செய்ய உதவுவது எது?

4. இணையற்ற இந்தியா கவிதைத் தொகுப்பு யார் எழுதியது?

5. தனிமங்களை அணு எண் அடிப்படையில் வரிசைப்படுத்தியவர் யார்?

6. சங்க கால கப்பல் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட கடல் பகுதி எது?

7. இ.சி.ஜி.யை கண்டுபிடித்தவர் யார்?

8. கோடர்கள் வாழும் பூர்விக பகுதி எது?

9. சூரியனை முழுமுதற் கடவுளாக கொண்ட இந்து மதப்பிரிவு எப்படி அழைக்கப்படுகிறது?

10. புறநானூற்றில் அதிக பாடல்கள் பாடியவர் யார்?

விடைகள்

1. மக்னோலியம், 2. அகநானூறு, 3. வைமேக்ஸ், 4. புதுமைப்பித்தன், 5. மோஸ்லே, 6. பூம்புகார், 7. ஈந்தோவன், 8. கோத்தகிரி, 9. சவுரம், 10. அவ்வையார்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அலோகங்கள்

நீர்ம நிலையில் உள்ள ஒரே அலோகம் புரோமின்.

ரப்பரை வல்கனைஸ் செய்யப் பயன்படுவது சல்பர்.

நீருக்குள் வைத்துப் பாதுகாக்கப்படுவது பாஸ்பரஸ்.

கம்ப்யூட்டர் மெமரி சிப்பில் பயன்படுவது சிலிகான்.

டிரான்சிஸ்டரில் குறை கடத்தியாக பயன்படுபவை சிலிகான், ெஜர்மானியம்.

பளபளப்பான அலோகங்கள் அயோடின், கிராபைட்.

தாவர எண்ணெய்களை வனஸ்பதியாக மாற்றுவது ஹைட்ரஜன்.

வைரம், கிராபைட், புல்லரின் எனும் புற வேற்றுமை வடிவங்களை கொண்ட அலோகம் கார்பன்.

கதிரியக்க தன்மை கொண்ட அலோகம் ஆஸ்டடைன்.

மின்சாரத்தை கடத்தும் ஒரே அலோகம் கிராபைட்.

பூமி ஓட்டில் அதிகம் காணப்படுவது ஆக்சிஜன்.

ஆக்ஸிஜனுக்கு அடுத்தபடியாக பூமி ஓட்டில் அதிகமுள்ள அலோகம் சிலிகான்.

நேர்மின் தகட்டில் விடுபடும் ஒரே அலோகம் ஹைட்ரஜன்

ெஜராக்ஸ் எந்திரத்தில் பயன்படுவது செலினியம்.

தண்ணீரைச் சுத்திகரிக்கப் பயன்படுவது குளோரின்.

மிகவும் லேசான தனிமம் ஹைட்ரஜன்.

செயற்கை பெட்ரோல் தயாரிக்க உதவுவது ஹைட்ரஜன்.

தொல் பொருட்களின் வயதை கணக்கிட உதவுவது கார்பன்.

ஸ்டார்ச்சுக்கு நீல நிறத்தை கொடுப்பது அயோடின்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்கி பெயர் எப்படி வந்தது?

வட்டார மொழி என்று அலட்சியம் செய்யப்பட்ட தமிழை ஏற்றமிகு மொழியாகச் செய்தவர்களில் முக்கியமானவர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. 9-9-1899-ம் ஆண்டு பிறந்த இவர், தமிழ்தேனீ, தும்பி, கர்நாடகம், லாங்கூலன், அகஸ்தியன், ரா.கி.விவசாயி, எமன், பெற்றோன் போன்ற பல புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். தாம் குருவாக மதித்த கல்யாண சுந்தரனார் என்ற பெயரில் உள்ள ‘கல்’ என்ற இரண்டு எழுத்துக்களையும் தனது பெயரின் முதல் எழுத்தான ‘கி’ என்ற எழுத்தையும் இணைத்து கல்கி என்று வைத்துக்கொண்டார். தமிழ்ப் பற்றையும், தேசிய உணர்வையும் ஊட்டும் படைப்புகளைப் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதினார். விடுதலைப் போராட்டத்திற்காக மூன்றுமுறை சிறை சென்றார். தேசத்திற்காகவும் தமிழுக்காகவும் உழைத்த கல்கி 1954-ம் ஆண்டு இறந்தார்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 10 September 2018

வினா வங்கி

1. தமிழ்நாட்டில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு எது?

2. வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட கமிட்டி எது?

3. ரத்தமாற்று சிகிச்சையை கண்டறிந்தவர் யார்?.

4. k என்பது எந்த தனிமத்தின் குறியீடாகும்?

5. பெப்சின் திரவத்தை சுரக்கும் உறுப்பு எது?

6. ஒரு மோல் சேர்மத்திலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை எப்படி அழைக்கப்படுகிறது?

7. பனிக்கட்டியுடன், உப்பை கலந்தால் அதன் உருகுநிலை என்னவாகும்?

8. நிறை- எடை இவற்றில் எது துருவப்பகுதியிலும் மாறாமல் இருக்கும்?

9. தமிழகத்தில் தொல் பழங்கால ஓவியம் முதன் முதலில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

10. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகமான ஆண்டு எது?

11. பூச்சி உண்ணும் தாவரங்கள் எந்த சத்தினை ஈடுகட்ட பூச்சிகளை இரையாக்குகிறது?

12. வங்காள விரிகுடாவில் உள்ள தீவுகளின் எண்ணிக்கை எவ்வளவு?

13. தசையையும், எலும்பையும் இணைக்கும் பகுதி எப்படி அழைக்கப்படுகிறது?

14. துணை வெப்ப அழுத்த மண்டலத்தில் இருந்து துணை துருவ மண்டலத்தை நோக்கி வீசும் காற்றுகள் எப்படி அழைக்கப்படுகின்றன?

15. நந்திக் கலம்பகம் எந்த மன்னனின் புகழைப் பாடுகிறது?

விடைகள்

1. 2006, 2. பகவதி கமிஷன், 3. ஜீன் டெங்ஸ், 4. பொட்டாசியம், 5. இரைப்பை, 6. அவகாட்ரோ எண், 7. குறையும், 8. நிறை, 9. மல்லப்பாடி, 10. 1980, 11. நைட்ரஜன், 12. 204, 13. டெண்டன், 14. மேல் காற்றுகள், 15. மூன்றாம் நந்திவர்மன்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

படிப்புகள்

சில துறைகளைப் பற்றிய படிப்புகளின் பெயர்களை அறிவோம்

சில்விகல்ச்சர் - காடு வளர்ப்பு பற்றிய படிப்பு

ஆர்போரிகல்ச்சர் - மரம் வளர்ப்பு

ஹார்டிகல்ச்சர் - தோட்டக்கலை

ஒலேரிகல்ச்சர் - காய்கறி சாகுபடி

எபிகல்ச்சர் - தேனி வளர்ப்பு

செரிகல்ச்சர் - பட்டுப்புழு வளர்ப்பு

புளோரிகல்ச்சர் - பூச்செடி வளர்ப்பு

பிஸ்ஸிகல்ச்சர் - மீன்கள் வளர்ப்பு

அக்வாகல்ச்சர் - நீர்வளர் உயிரினங்கள் பற்றிய படிப்பு

எபிகிராபி - கல்வெட்டு பற்றிய படிப்பு

டெக்டைலோகிராபி - விரல் ரேகை புலனாய்வு படிப்பு

லெக்ஸிகேரகிராபி - அகராதி எழுதும் கலை பற்றியது

கார்டோகிராபி - வரைபடம் தயாரிப்பது பற்றியது

கிரிப்டோகிராபி - சங்கேத மொழி பற்றியது

கேலிகிராபி - சித்திர எழுத்துகள் பற்றிய படிப்பு

ஆண்ட்ராலஜி - ஆண்களைப் பற்றிய மருத்துவம்

கைனகாலஜி - பெண்களைப் பற்றிய மருத்துவம்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஊரும், உற்பத்தியும்...!

தமிழகத்தில் சில ஊர்களில், சில பொருட்களின் உற்பத்தி சிறப்பு பெற்றது. அவை பற்றி அறிவோம்...

திண்டுக்கல் - பூட்டு, புகையிலை

நாமக்கல் - முட்டை

சிவகாசி - பட்டாசு

கோவில்பட்டி - தீப்பெட்டி

ஆரணி - பட்டு

காஞ்சீபுரம் - பட்டு

ஊத்துக்குளி - வெண்ணெய்

கும்பகோணம் - வெற்றிலை

மதுரை - மல்லிகை

தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை, தட்டு

திருச்செந்தூர் - சுக்கு கருப்பட்டி

சேலம் - மாம்பழம்

பண்ருட்டி - பலாப்பழம்

வேலூர் - முள்கத்தரிக்காய்

பத்தமடை - பாய்

பவானி - ஜமுக்காளம்

சென்னிமலை - போர்வை

திருப்பூர் - பனியன்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வனப்பு இலக்கணம்

தொல்காப்பியர், இலக்கியத்தின் அழகை வனப்பு என்ற பெயரால் 8 வகைப்படுத்தி விளக்கி உள்ளார். அவை : அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு. சில மென்மையான சொற்களால், சில அடிகளில் அமைவது அம்மை. திருக்குறள், நாலடியார் போன்றவை அம்மைக்கு உதாரணங்களாகும். இயற்சொல்லால் அமையாமல் திரி சொல்லால் கடுநடையில் அமையும் ‘அழகு’க்கு பதிற்றுப்பத்து, ஒட்டக்கூத்தர் பாடல்கள் போன்றவை சான்று களாகும். பழமையான பொருள்பற்றி உரைநடை கலந்து வரும் தொன்மைக்கு ராமாயணம், பாரதம் போன்றவையும், இனிய சொற்களால் சிறந்தபொருள் பற்றி அல்லது பரந்த பல சொற்களால் அடி நீண்டு வரும் தோல் என்ற வனப்புக்கு கலித்தொகை, பத்துப்பாட்டு போன்றவையும் சான்றுகளாகும். புதிய பொருள் பற்றி அமையும் விருந்து எனும் வனப்புக்கு நாவல், புதுக்கவிதை போன்றவையும், ‘ஞ’ முதல் ‘ன’ வரையான மெய்யெழுத்துகளைக் கடைசி எழுத்தாக கொண்டு முடியும் இயைபுக்கு மணிமேகலையும் சான்றுகளாகும். தெரிந்த மொழியில் ஆராயாமலே பொருள் உணர்ந்து கொள்ளுமாறு பாடப்படும் ‘புலன்’ என்ற வனப்புக்கு இந்த கால பாடல்கள் சான்றாகும். இழைபு என்னும் வனப்பு வல்லொற்றுகள் பொருந்திய எடுத்தலோசை மிக்க சொற்களால் வருவது. இவற்றில் அம்மை, அழகு, தோல் இயைபு, புலன், இழைபு என்பன வடிவு பற்றிய மரபுகள், தொன்மை, விருந்து என்பன பொருள் பற்றிய மரபுகள்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பழப்பூச்சி

டிரோசோபிலா எனும் பழப்பூச்சி ெஜனிடிக்சின் சின்ட்ரெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. மரபியல் துறையில் முதல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான டி.எச்.மார்கன், திடீர் மாற்றம் தொடர்பான தன் ஆய்வுகளுக்கு இதையே பயன்படுத்தினார். மனிதர்களைப் போலவே ஆண்களில் X,Y குரோமோசோமையும், பெண்களில் XX குரோமோசோமையும், கொண்டுள்ளவை பழப்பூச்சிகள், பழப்பூச்சி ஒவ்வொன்றும் 3 ஜோடி உடல் குரோமோசோம், 1 ஜோடி பால் குரோமோசோம் என மொத்தம் 4 ஜோடி குரோமோசோம்களை கொண்டுள்ளது.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday 4 September 2018

நடப்பு நிகழ்வுகள் | பிற்படுத்தப்பட்டோர் தகவல்கள் சேகரிப்பு

2021-ம் ஆண்டு வெளியாகவிருக்கும் இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் முதன்முறையாகப் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய தரவுகள் சேகரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 31 அன்று தெரிவித்தது. 2006-ம் ஆண்டு சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, நாட்டின் மக்கள்தொகையில் 41 சதவீதம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதாக தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) தெரிவிக்கிறது. இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எடுப்பதற்காக 25 லட்சம் பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த வாரம்
கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் | ஆண்களின் திருமண வயது 18?

நாட்டில் ஆண்களின் திருமண வயது 18-ஆகக் குறைக்கப்பட வேண்டும் என்று ஆகஸ்ட் 31 அன்று சட்ட ஆணையம் வெளியிட்ட தனி நபர் சட்டங்களுக்கான (Personal Laws) சீர்திருத்த ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மதங்களிலும் ஆண், பெண் இருவருக்குமான திருமணச் சட்ட வயது 18-ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரைசெய்திருக்கிறது. பதினெட்டு வயதில் அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்படுவதுபோல வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று சட்ட ஆணையம் கருத்து தெரிவித்திருக்கிறது. தற்போது, ஆண்களின் திருமண வயது 21- ஆகவும் பெண்ணின் திருமண வயது 18-ஆகவும் நிர்ணயம்செய்யப்பட்டிருக்கிறது. இது தேவையற்ற பாலின வயது வித்தியாசத்தைத் திருமணத்தில் ஏற்படுத்துவதாகச் சட்ட ஆணையம் தெரிவித்திருக்கிறது.
கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் | அருணாசல பிரதேசம்: 3 புதிய மாவட்டங்கள்

அருணாசலப் பிரதேசத்தில் பக்கே-கேசாங், லேபா ரடா, ஷி யோமி என்ற மூன்று புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு அம்மாநில சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 29 அன்று மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பின்மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அம்மாநிலத்தின் துணை முதல்வர் சவுனா மேய்ன், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காகப் புதிதாக மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மூன்று மாவட்டங்களால் அருணாசலப் பிரதேச மாவட்டங்களின் எண்ணிக்கை 22-லிருந்து 25-ஆக உயர்ந்திருக்கிறது.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் | மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோ

மூன்று மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககண்யான்’ திட்டம் இன்னும் நாற்பது மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் ஆகஸ்ட் 28 அன்று தெரிவித்தார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்துக்கு முன்னர் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்தத் திட்டத்துக்காக இஸ்ரோ 2004-ம் ஆண்டிலிருந்து பணியாற்றிவருகிறது. இந்தத் திட்டத்துக்குத் தேவைப்படும் சில தொழில்நுட்பங்களை வெற்றிகரமாகப் பரிசோதித்திருப்பதாகவும் இஸ்ரோ தெரிவிக்கிறது. ‘ககண்யான்’ திட்டத்தை இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.-III ஏவுகணையில் விண்ணில் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்கள் 5-7 நாட்கள் விண்ணில் தங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் | வீட்டுக் காவலில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்

மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, அருண் ஃபெரைரா, வெர்னோன் கொன்ஸால்வஸ், கவிஞரும், மாவோயிசச் சிந்தனையாளருமான வரவர ராவ் ஆகியோர் புனே காவல்துறையால் ஆகஸ்ட் 28 அன்று கைதுசெய்யப்பட்டனர். கடந்த டிசம்பர் 31 அன்று நடைபெற்ற பீமா-கோரேகாவ் வன்முறை வழக்குத் தொடர்பாக இவர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இவர்கள் ஐவரையும் செப்டம்பர் 6 வரை வீட்டுக்காவலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அத்துடன், வன்முறை நடைபெற்று ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இவர்கள் ஐவரும் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருக்கிறது. இந்த வழக்குத் தொடர்பாக மகாராஷ்ட்ர மாநில அரசையும் மத்திய அரசையும் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் | பண மதிப்பிழப்பு: வங்கிக்குத் திரும்பிய 99.3% பணம்

பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் 8 அன்று கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் 500, 1000 ரூபாய்த் தாள்கள் மதிப்பிழந்துவிட்டதாக அறிவித்தார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிக்குத் திரும்பிய 500, 1000 ரூபாய்த் தாள்களை எண்ணும்பணியைச் சமீபத்தில் முடித்த ரிசர்வ் வங்கி, தன் வருடாந்திர அறிக்கையை ஆகஸ்ட் 29 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுப்பதற்குமுன் நாட்டில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய்த் தாள்களின் மொத்த மதிப்பு ரூ. 15,417.93 லட்சம் கோடி. இதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், ரூ. 15,310.73 லட்சம் கோடி (99.3 சதவீதம்) வங்கிக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிக் கணக்குக்குத் திரும்பி வராத பணத்தின் மதிப்பு ரூ.10,720 கோடி (0.7 சதவீதம்). பணமதிப்பிழப்பின் நடவடிக்கையின் விளைவான இந்த ரூ.10,000 கோடிக்காக 2.25 லட்சம் கோடி மதிப்புமிக்க உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றனர்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் | 5.82 கோடி தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாட்டில் 5.82 கோடி வாக்காளர்கள் இருப்பதாக ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்ட 2019-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டில் 5.86 கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது நான்கு லட்சம் குறைந்து 5.82 கோடி ஆகியிருக்கிறது. இதில் பெண்கள் 2.94 கோடியாகவும் ஆண்கள் 2.88 கோடியாகவும் இருக்கிறார்கள். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5,184 பேர் இருக்கிறார்கள். இந்த ஆண்டு, 1.82 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும் மரணம், இடமாற்றம் காரணமாக 5.78 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 6.07 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் சென்னையின் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் குறைந்தபட்சமாக 1.64 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு நிகழ்வுகள் | திமுக தலைவர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாக ஆகஸ்ட் 28 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன், அதிகாரபூர்வமாக ஸ்டாலினைத் தலைவராக அறிவித்தார். திமுக தலைவர் பொறுப்புக்கு ஸ்டாலின் மட்டுமே மனுத் தாக்கல் செய்ததாகவும், அந்த மனுவை 1,307 பேர் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் உள்ளதாகவும் அவர் அறிவித்தார். திமுகவின் பொருளாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 50 ஆண்டுகளாகத் திமுக தலைவராக இருந்த மு. கருணாநிதி ஆகஸ்ட் 7 அன்று மறைந்த சூழலில், அக்கட்சியின் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 3 September 2018

இந்திய அரசியலமைப்பு

ஆங்கிலேய ஆட்சியில் மாநிலங்களில் இரு அவை கொண்ட சட்டசபையை உருவாக்க மான்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் 1919-ல் கொண்டுவரப்பட்டது. இது மாநில இரட்டை ஆட்சி முறையை அங்கீ கரித்தது. இதில் அதிகாரம் மிக்க துறைகளுக்கு ஆங்கிலேய அமைச்சர்களும், குறைந்த அதிகாரம் உள்ள துறைகளுக்கு இந்திய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டார்கள். இதற்கு எதிர்ப்பு அதிகமிருந்த நிலையில் எதிர்பார்த்த பலனும் கிடைக்கவில்லை. எனவே இதற்கு தீர்வு காண 1927-ல் சைமன் கமிஷன் உருவாக்கப்பட்டது. இதில் இந்திய உறுப்பினர்கள் இல்லாததால், அதையும் இந்தியா புறக்கணித்தது. அப்போது இந்தியர்களுக்கு அரசியலமைப்பு எழுதும் ஆற்றல் இல்லை என்று லார்டு பிர்ஹவுன்ட் கூறினார். இதற்காக 1928-ல் மோதிலால்நேரு ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கேட்கப்பட்டது. இது ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு கீழ்ப்பட்ட ஆட்சி முறையாகும்.

ஜவகர்லால் நேரு, நேதாஜி போன்றவர்கள் முழு விடுதலை கோரலாம் என்றனர். காந்திஜியின் யோசனைப்படி முழுவிடுதலை தீர்மானம் 1929-ல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவுக்கு ஆட்சி அதிகாரம் வழங்குவதற்காக லண்டனில் வட்டமேஜை மாநாடுகள் நடைபெற்றன. 3 வட்டமேைஜ மாநாடுகளிலும் இந்திய தலைவர் டாக்டர் அம்பேத்கர் கலந்து கொண்டார். 1935-ம் ஆண்டு சட்டப்படி மாநிலங்களில் சுயாட்சியும், மத்தியில் இரட்டை ஆட்சியும் ஏற்பட்டது. 1939-ல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானதால், 1940-ல் ஆகஸ்டு அறிக்கை வெளியிடப்பட்டு உலகப் போருக்குப் பின் இந்தியாவுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 1946-ல் இந்திய அமைச்சரவை தூதுக்குழுவும், அரசியல் நிர்ணயசபையும் உருவாக்கப்பட்டது.

இந்திய விடுதலைச் சட்டம் 1947 ஜூலை 1-ல் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டது. அரசியல் நிர்ணயசபை நிரந்தர தலைவராக ராஜேந்திர பிரசாத்தும், அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு தலைவராக டாக்டர் அம்பேத்கரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசியலமைப்புச்சட்டம் 1948-ல் தயாரானது. 1949 நவம்பர் 26 அன்று இந்த சட்டம் ஏற்கப்பட்டது. இது இந்திய சட்டதினமாகும். இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 16 முதல் செயல்படுத்தப்படுகிறது. அது செயல்படுத்தப்பட்ட நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. குடியரசான பிறகு அரசியலமைப்பு சபை நாடாளுமன்றமாக மாறியது. அதன் தலைவர் குடியரசுத் தலைவரானார்.


கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நிலா

பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.

நிலவைப் பற்றிய படிப்பு செலினாலஜி.

நிலவின் அளவு பூமியின் அளவில் மூன்றில் ஒரு பங்கு.

நிலவின் நிறை பூமியின் நிறையில் எட்டில் ஒரு பங்கு.

நிலவின் அடர்த்தி பூமியின் அடர்த்தியில் இரண்டில் ஒரு பங்கு.

நிலவின் ஈர்ப்புவிசை, புவி ஈர்ப்புவிசையில் ஆறில் ஒரு பங்குதான்.

நிலவின் ஈர்ப்புவிசை குறைவாக (1/6) இருப்பதால் பூமியில் 120 கிலோ உள்ள மனிதன் நிலவில் 20 கிலோதான் இருப்பார்.

நிலவின் ஈர்ப்புவிசையால் கடல் அலைகள் உருவாகின்றன.

நிலா தன் மீது படும் சூரிய ஒளியை எதிரொளிப்பதே நிலவொளி ஆகும்.

நிலா தன் மீது படும் சூரிய ஒளியில் 7.3 சதவீதம் மட்டுமே எதிரொளிக்கிறது.

நிலவொளி பூமியை வந்தடைய 1.3 நொடிகளாகிறது.

நிலா தன்னைத்தானே சுற்றவும் பூமியை வலம் வரவும் ஒரே நேரத்தை 29.5 நாட்கள் எடுத்துக் கொள்வதால் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே பூமியிலிருந்து பார்க்க இயலும்.

நிலவில் வளிமண்டலம் இல்லாததால் பேசினால் கேட்காது.

நிலவில் டைட்டானியம் கனிமம் அதிக அளவில் இருக்கிறது.

எவரெஸ்டைவிட உயரமான லீப்னிட்ஸ் மலைத் தொடர் நிலவில் உள்ளது. இதன் அதிகபட்ச உயரம் 10 ஆயிரத்து 660 மீட்டர்.

1969-ல் ஜூலையில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், காலின்ஸ் மூவரும் அப்பல்லோ 11 மூலம் நிலவுக்குச் சென்றனர்.

நிலவில் முதலில் இறங்கி ஆய்வு செய்யப்பட்ட இடம் அமைதிக்கடல் எனப்படும்.

நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திரகிரகணம் ஏற்படுகிறது.

சந்திரயான், பி.எஸ்.எல்.வி.சி.11 மூலம் அக்டோபர் 22, 2008-ல் விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயானின் எம்.3 என்ற கருவில் நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி

1. குடிமகனின் அடிப்படை கடமைகள் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்ட வருடம் எது?

2. பூமியின் 23½ டிகிரி தென் அட்சக்கோடு எப்படி அழைக்கப்படுகிறது?

3. பார்லி எந்த பருவத்தை சேர்ந்த பயிராகும்?

4. ஜி.டி.பி. மதிப்புடன், நிகர வெளிநாட்டு வருமானத்தை கூட்டக் கிடைப்பது எது?

5. சர்வதேச பணப்பரிமாற்றத்தின் மீதான வரி எப்படி அழைக்கப்படுகிறது?

6. விவசாய உற்பத்தி குறைவு எத்தைகய பணவீக்கத்தை ஏற்படுத்தும்?

7. துடைப்பம் எந்த வகை நெம்பு கோலுக்கு எடுத்துக்காட்டாகும்?

8. சாதாரண உரையாடலின் ஒலிச்செறிவு எவ்வளவு?

9. சோடியம் தனிமத்தின் லத்தீன் பெயர் என்ன?

10. எள்ளில் இருந்து நல்லெண்ணெய் பெறும் முறை எது?

விடைகள்

1. 1976, 2. மகர ரேகை, 3. ராபி பயிர், 4. ஜி.என்.பி., 5. டோபின், 6. விலைதள்ளிய பணவீக்கம், 7. மூன்றாம் வகை நெம்புகோல், 8. 65 டெசிபெல், 9. நேட்ரியம், 10. குளிர் அழுத்த முறை.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE